வெள்ளி, 22 செப்டம்பர், 2017

குணா குறிப்பிட்ட தமிழ்ச்சாதி தவிர வேறு சாதிகளும் தமிழர் உண்டு அவர் வேற்றினம் என்று சொல்லாத சாதிகள்

நாரத கும்பலின் B Team
குணா தான் எழுதிய தமிழின மீட்சி நூலில் பிறமொழியாளர்கள் எவ்வாறு எல்லாம்
தமிழினக்குழுக்களை இடவொதுக்கீடு என்னும் பெயரில் ஏமாற்றுகிறார்கள்
எனக்காட்டத்தான் தமிழ்நாடு அரசு வெளியிட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலில்
யார் யார் தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், துளுவர்,
வடமாநிலத்தவர்கள் என சமூகம் வாரியாக தனித்தனியாக பிரித்து
பட்டியலிட்டார்.
அது இடவொதுக்கீடு தொடர்பான பட்டியல் என்பதால் இடவொதுக்கீட்டில் இல்லாத
இனக்குழுக்களை அவர் பட்டியலில் சேர்க்கவில்லை. அதற்காக இதரசாதிகள்
பட்டியலில் இடவொதுக்கீடு இல்லாமல் இருக்கும் கார்காத்த வேளாளர் சமூகத்தை
சேர்ந்த நானோ நகரத்தார் சமூகத்தை சேர்ந்த யாருமோ ஆர்க்காட்டு முதலியார்
(அகமுடையார் உட்பிரிவு) சமூகத்தை சேர்ந்த யாருமோ தங்களை குணா பட்டியலில்
குறிப்பிடவில்லையே என கேட்கவில்லை.
இடவொதுக்கீட்டு பட்டியலில் இருக்கும் சமூகங்களில் கூட சீர்மரபினர்
பிரிவுகளில் இருக்கும் தல்லி குறவர் சமூகத்தையும் பிற்படுத்தப்பட்டோர்
பட்டியலில் இருக்கும் வீரக்குடி வேளாளர், சேரக்குல வேளாளர், பாண்டிய
வேளாளர் போன்ற சமூகங்களையோ அவர் பட்டியலில் விட்டுவிட்டார். அதற்காக
தல்லி குறவர்களோ வீரக்குடி வேளாளர், சேரக்குல வேளாளர், பாண்டிய வேளாளர்
போன்றவர்களோ தங்களை குணா பட்டியலில் குறிப்பிடவில்லையே என கேட்கவில்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் முத்தரையர்களையும்
குணா தன் பட்டியலில் விட்டுவிட்டார்.
ஆக குணா குறிப்பிடாமல் இருக்கும் சமூகங்களில் கீழுள்ளவை உள்ளன.
1. மேலே குறிப்பிடப்பட்ட இடவொதுக்கீட்டில் வராத இதர சாதிகள் பட்டியலில்
உள்ள 79 பிரிவுகள்
2. சீர்மரபினர் பிரிவுகளில் இருக்கும் தல்லி குறவர்
3. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வீரக்குடி வேளாளர்,
சேரக்குல வேளாளர், பாண்டிய வேளாளர்
4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் முத்தரையர்
போன்ற 84 பிரிவுகளை குணா பட்டியலில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
எங்கும் முத்தரையரை அவர் பிறமொழியாளர் என குறிப்பிடவே இல்லை.
இதை பயன்படுத்தி நாரத கும்பல் குணா மீது சுமத்தும் பழிகள் தான்
மிகப்பெரிது. நாரத கும்பலின் B Team காரர் ஒருவர் முத்தரையரை பட்டியலில்
விட்டுவிட்டதால் அதில் உள்ள பிரிவுகள் சில பிறமொழியாளர்களா என்பது போல்
கேள்வி கேட்டு பதிவிட்டார். அதன் தொடர்சியாக B Team காரர் இன்னொருத்தர்
வேட்டைக்குலங்கள
ை எல்லாம் குணா வெறுக்கிறார் என்பது போல அடுத்த பதிவிட்டார்.
வேட்டைக்குலங்களை எல்லாம் குணா வெறுக்கிறார் எனில் அதே முத்தரையர்
சமூகத்தை சேர்ந்த வலையர் என பெயர்வரும் மூன்று பிரிவுகளை எதுக்கு தமிழர்
என குறிப்பிடனும்? இடவொத்துக்கீடு பட்டியலில் உள்ள மூன்று வலையர்
பிரிவுகளை குணா தமிழர் எனத்தான் குறிப்பிட்டுள்ளார்.
இது போதாதுன்னு குணாவை கிறுத்துவர்னும் அவர் இலுமினாட்டி என்பது போலும்
பதிவிட்டதும் இதே நாரத கும்பலை சேர்ந்த B Team தான்.
ஆசா சுந்தருக்கு குணா வெளியிட்ட பட்டியலில் சில மாற்றுக்கருத்துகள்
உண்டு. ஆனால் அவர் குணாவை எங்கும் கிறுத்துவர்னும் இலுமினாட்டின்னும்
குறிப்பிடவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த நாரத கும்பலின் B Team
என்னத்துக்கு குணாவின் மீது கிய்யா முய்யான்னு குற்றச்சாட்டுகள
ை வாரித்தூற்றனும்.? குணா முகநூலில் தானே இருக்கிறார்.? அவரிடமே நீங்கள்
போட்ட பட்டியலில் விடுபட்ட சாதிகளின் மொழிகள் எவைனு கேட்டுருந்தா
தெரியும் தெரியாதுன்னு சொல்லிருக்கப்போறார். நான் அந்த நூலை படித்ததும்
செய்த முதல் வேலை அது தான். அவரை தொடர்பு கொண்டு பல சமூகங்களை நீங்கள்
பட்டியலில் விட்டுவிட்டீர்களே என கேட்டு அதற்கான பதிலையும்
பெற்றிருக்கிறேன். ஆனால் இந்த நாரத கும்பலின் B Teamக்கு அது தோன்றவே
இல்லையே எப்படி?
காரணம் B Team என்பதின் செயல்படு இலக்கணமே அது தான். அதிமுகவுக்கு கோவால்
நாயுடு B Team ஆக 2016 தேர்தலில் செயல்பட்டது போல் இருக்கும் இந்த நாரத
கும்பலின் B Teamன் செயல்பாடு. நாரத கும்பலை எதிர்ப்பது போல்
காமித்துக்கொள்வ
ார்கள். ஆனால் இந்த இரண்டு குழுக்களுக்குள் மறைமுக கூட்டணி இருந்துகொண்டே
தான் இருக்கும். குணா சொன்னதை திரித்து எழுதியும் சொல்லாததை சொன்னதாகவும்
சொல்லி திரிய இந்த கூட்டணிகளுக்கு அவசியம் என்ன?
ஒன்றே ஒன்று தான். குணா தன் தமிழின மீட்சி நூலில் யார் தமிழர் யார்
பிறமொழியாளர்னு தெளிவாக பட்டியல் இட்டுவிட்டார். அதில் நாரத கும்பலின்
தலைமையான பணியா சாதியைச்சேர்ந்த தெலிகுலா பிரிவை தெலுங்கர் என
குறிப்பிட்டுவிட்டார். அதனால் தான் அந்த நாரத கும்பலின் தலைமை பணியா
அரண்டு போய் தமிழினக்குழுக்களுக்கு இடையில் சண்டையை உண்டு பண்ண காசுக்கு
மாறடிக்கும் கும்பலை உருவாக்கினார். அதுதான் இந்த நாரத கும்பலும் அதன் B
Team என்பதும். இவர்கள் நாரத கும்பலை எதிர்ப்பது போல் நம் கூட இருந்தே
ஒரு நாள் நிச்சயம் கழுத்தறுப்பர். இதில் விவரம் புரியாமல் உள்ளே
விழுதவர்களும் பலர் இருக்கலாம். அதனால் முகநூலில் முகம் காட்டி
பதிவிடுவர்களையும் நேரில் பார்த்தவர்கள் எழுதுவதை மட்டும் கவனத்தில்
கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக