அகுயிபானன் எனும் புரட்சியாளன்!
சேகுவேரா எனும் ஸ்பானிஷ் இன போராளிக்கு கியூபா நாட்டு விடுதலை வீரர்
பட்டமும், புரட்சியவாதி பட்டமும் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி
,சட்டையில் அவர் உருவம் பதித்து கொண்டாடும் எத்துணை பேருக்கு தெரியும்
சேகுவேராவும் சரி பிடல் காஸ்ட்ரோவும் சரி கியூபா மண்ணில் வந்தேறிகள்
என்று?
ஐரோப்பிய ஸ்பானிஷ் இனத்தவர்கள் அனைவரும் அந்த மண்ணில் வந்தேறியவர்களே,
அங்கே அமைதியாக சுயமாக வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர்களான தயினோ (taino)
மற்றும் Guanahatabeys இனத்தவர்களை கொஞ்சமும் கருணையின்றி அழித்த அந்த
வெள்ளை பேய் இனத்தை சேர்ந்தவர்களே இன்று நீங்கள் போற்றும் சேவும் ,
பிடலும் …
உண்மையில் கியூபா நாட்டின் விடுதலை போராட்ட புரட்சிய வீரன் அந்த மண்ணின்
மைந்தனும் , தயினோ இனத்தின் தலைவருமான இரண்டாம் அகுயிபானன் (Agüeybaná
II) .
கியூப மண்ணில் வந்தேறி ஸ்பானியர்கள் 1493 ஆம் ஆண்டு வருகிறார்கள் .
அந்தசமயம் இரண்டாம் அகுயிபானனின் அண்ணன் மன்னர் முதலாம் அகுயிபானன்
ஸ்பானிஷ்யர்களை விருந்தாளிகளாக கவனித்து உபசரித்தார்.. ஆனால் அந்த வெள்ளை
பேய்களுக்கு தயினோ இனத்தவர்களிடம் உள்ள தங்கம் மட்டுமே தெரிந்தது,
வஞ்சகமாக முதலாம் அகுயிபானன் கொல்லப்படுகிறார். தம்பி தயினோ இனத்தின்
தலைவனாகிறான்.
தயினோ இன மக்கள் ஸ்பானிஷ் இனத்தவர்களின் நவீன ஆயுதங்களாளலும் ,கருணை
இன்றி மக்களை கொல்லும் தன்மையாலும் ஸ்பானிஷ்யர்களை பேய் என்றும், நம்மை
அழிக்க வந்த சாபங்கள் என்றும் எண்ணி அவர்களை எதிர்க்கத் துணிவின்றி
பயந்தார்கள்.
அகுயிபானன் தன் படைத் தளபதி உறையோனிடம் (Urayoán) எப்படியாவது ஒரு
ஸ்பானிஷ் இனத்தவனை கடத்திவர உத்திரவிட்டார் , அந்த ஸ்பானிஷ் இனத்தவனை
பொதுமக்கள் மத்தியில் அனைவரும் பார்க்க ஆற்று நீரில் முக்கி கொன்றார்
அகுயிபானன்.
" இந்தப் பேய்களுக்கும் இறப்பு உண்டு, இவைகளும் நம்மை போன்று தான்!
அச்சம் தவிர்த்து வாருங்கள் நம் தாயகம் காப்போம்" என தயினோ மக்களிடம்
கர்ஜித்தான் ! படை திரட்டினான் , அவர்களின் பாரம்பரிய போர் நடனம்
தொடங்கியது..
போரில் ஸ்பானிஷ் வீரர்கள் வஞ்சகத்துடனும், கருணை இன்றியும்
போரிட்டார்கள், இரவு நேரங்களில் தயினோ ஊர்கள் அழிக்கப் பட்டன, பெண்கள்
குழந்தைகள் என்ற பாரபட்சம் காட்டவில்லை அந்த வெள்ளை பேய்கள். அகுயிபானன்
உயிரை துட்சமென மதித்து தனது மக்களை காத்தான்.
சில ஆண்டுகள் போர் உச்சமாக நடைபெற்றது , 1511 ஆம் ஆண்டு 15000 தயினோ
வீரர்கள் சில நூறு ஸ்பானிஷ்ய படைகளுடன் மோதினார்கள் ,இந்தப்போரில் எங்கோ
வெடிக்கப்பட்ட ஒரு குண்டு அகுயிபானனின் உயிரை பறித்தது… தயினோ படையின்
உயிர்நாடி சரிந்தது……..இரத்தம் படிந்த அந்த கியூபா மண்ணில் வெள்ளை
பேய்களின் ஆட்சி நிலைத்தது….இன்று அகுயிபானன் என்ற புரட்சியாளன் ,
விடுதலை வீரன் மறக்கப் பட்டுவிட்டான் , அவன் காக்க நினைத்த தயினோ இனம்
அழிக்கப்பட்டாகி விட்டது.
நமக்கெதுக்கு வம்பு வரலாற்றை மறைத்து நானும் சில வெள்ளை பேய்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன்…
- பாரி சாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக