வியாழன், 21 செப்டம்பர், 2017

சித்தமருத்துவம் புத்கம் இசுலாமியர் மாடு சாணம் கோமியம் இறைச்சி நம்மாழ்வார் மருத்துவம் கோயில் கோவில்

Saravana Kanth
நம்மாழ்வார் என்றொரு... (கொஞ்சம் ரொம்ப பெரிய பதிவு - படித்து விடுங்கள்)
இரண்டுவிதமான மனிதர்கள் இங்கே வாழ்கிறார்கள். ஒன்று அவசர மனிதர்கள்.
சாலையில அதிவேகமாக செல்பவர்கள், பேருந்துகளில் எல்லாரையும் இடித்து
தள்ளிவிட்டு ஏறி அமருபவர்கள், பக்கத்துவீட்டில் படுகேவலமாக
சண்டைபோட்டுவிட்டு மற்றவர்களுக்கு அன்பை போதிப்பவர்கள், மனைவி மகன் மகள்
பெற்றோர் என அன்பும் மரியாதையும் இல்லாது வாழ்ந்துவிட்டு ஆலயத்தில்
பக்திமான் போல நிற்பவர்கள்... இவர்கள் அவசர மனிதர்கள். இவர்கள் தான்
சமூகம் எங்கும் நிரம்பி வழிகிறார்கள். இன்னொரு மனிதர்கள்.. இந்த
கட்டுரைக்கு தொடர்பில்லாதவர்கள்.
தமிழ், இனம், கலாச்சாரம் என்று பேசுபவர்களுக்கு முதலில் ஒரு புரிதல்
வேண்டும். இந்த கட்டுரையை படிப்பதற்கும் அந்த புரிதல் அவசியமென
நம்புகிறேன். தமிழர்கள் வாழ்வியலை இரு கூறாக பிரிக்க வேண்டும். பிற்கால
சோழர்களுக்கு முந்தைய தமிழகம், அதற்கு பிந்தைய தமிழகம். அதாவது சுந்தர
சோழருக்கு முந்தைய காலம் பிந்தைய காலம். இதில் முந்தைய காலமென்பது
மட்டுமே எண்பது விழுக்காடு தமிழர் பாரம்பரிய வாழ்க்கை இருந்தது.
அதன்பிறகு வைணவர்கள் ஊடுருவல், மராட்டியர்கள், தெலுங்கர்கள், என நம்
கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்துவிட்டார்கள். சோழர்கள் காலத்திலே திரிய
ஆரம்பித்த வரலாறு அதன் பிறகு கேவலமாய் திரிய ஆரம்பித்துவிட்டது.
ஆலயங்கள் என்பது முந்தைய காலத்தில் நெய்விளக்கு ஏற்றவோ இல்லை யாரோ
முணுமுணுவென மந்திரம் சொல்லவோ அல்ல. நமது பாவங்களுக்கு மன்னிப்பும்
சுயதேவைகளுக்கு வடிகாலும் காட்டும் இடமல்ல. ஆலயங்கள் அப்போது கல்வி
கூடங்கள், மருத்துவ கூடங்கள், தத்துவார்த்த கூடங்கள், கலைநிகழ்
கூடங்கள்... இவைதான் அப்போது கடவுள். உலகின் பெரும் கலாச்சாரம் ,
வாழ்வியல் மரபு தமிழர்களுக்கு மட்டுமே உண்டு.
# நம்மாழ்வார் இந்த இடத்தில் இருந்து நம் வாழ்வியலை அணுகுகிறார்.
# சாணம்
ஆவினது சாண மடுபடுவீக் கம்முதிரக்
தாவி வருகிருமி சார்ந்தகப - மேவுசுரந்
தங்குந்தா கம்போக்குஞ் சாற்றிமெய்ச் சுத்தியபால்
தெங்கின்பா லுக்கொக்குந் தேர்
பசுவின் பால், தயிர், நெய்,நீர், சாணம் இவைகளை கலந்து உருவாக்க்ய
பஞ்சகவ்வியம் சில வேளைகள் உட்கொண்டால் தேகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி
சுத்தம் பெறும். கூடுதலாய் பசுவன் சாணத்தில் நீர் விட்டு காய்ச்சி
அடிபட்ட புண்ணில் போட்டுவந்தால் வீக்கம் குறையும் சீக்கிரம் குணமாகும்.
# பசுவின்_மூத்திரம்
விடபாண்டு சோபைபல வீக்கஞ் சகல
விடமுதிர மாலையென மெத்தப் - புடவிதனிற்
பேசலக்க ணோடுதந்தப் பீடையும் நன்றிடுமே
கோசலத்தா லாரணங்கோ கூறு.
மூன்றுமுறை வடிகட்டி தினமும் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால்
பெருவயிறு, காமாலை, நீர்ப்பாண்டு, குன்மம், மகோதரம் போன்றியவைகள்
குணமாகும். நமட்டு சிரங்கு, கரப்பான் போன்ற வியாதிகளுக்கு மூத்திரத்துடன்
பசுச்சாணத்தை கலந்து பூசி உலர்த பின்னர் நன்கு அலசிவந்தால் விரைவில்
குணமாகும்.
# மாட்டிறைச்சி
கோமாங் கிசத்தை குறித்துண்ட:பேருடம்பி
லாமா வியாதிக் களவுண்டே - காமாதி
போகமுடன் மத்திக்கும் புன்வாதஞ் சேதமுறும்
தேகமதில் நாற்றமுறுந் தேர்.
மாட்டிறைச்சி பல வியாதிகளை உண்டாக்கும். ஆனால் போக சித்தியை அதிகரிக்கும்
. அற்ப வாத ரோகத்தை கண்டிக்கும். எளிதில் சீரணமாகது. தேகத்தில்
ஒருவிதமான் புலார் நாற்றத்தை உண்டாக்கும்.
மேற்சொன்னவையெல்லாம்
# சித்த_அனுபோக_வை
த்திய_நவநீத_திரட்டு என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆசிரியர் :
# ஹக்கீம்_முகமது_
அப்துல்லா_சாயுபு . சித்த மருத்துவத்தில் இந்த புத்தகம் மிக பழமையாது.
அதே சமயம் அற்புதமானது. ஒவ்வொன்றையும் எப்படி தயாரிக்க வேண்டும் எத்தனை
முறை வடிகட்ட வேண்டும்.. என்பது முதற்கொண்டு இந்த புத்தகம் 1648
பக்கங்களில் தெளிவாக பேசும். இந்த புத்தகம் தோழர் Gopala Krishnan
வீட்டில் இருக்கிறது. அதனால் அவர் வீட்டில் ஆரோக்கியம் தெளிவாக
இருக்கிறது. அவர் அறத்தோடு இருக்கிறார். நான் அவர்கள் வீட்டுக்கு
சென்றிருக்கிறேன். இதன் மகத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். இந்த
கட்டுரையின் நம்பிக்கையும் விதையும் அவர் தான்.
சரி. விசயத்திற்கு வருவோம். நாம் கலப்பில்லாத போது.... அதாவது
ஆலயத்திற்கு போனால் திருநீறு கொடுப்பார்கள், சுண்டல் கொடுப்பார்கள்,
இத்தனை சுற்று சுற்றவேண்டும்.. அதை என்ண பொட்டுகடலை கொண்டு செல்ல
வெண்டும் என்ற அறிவு வருவதற்கு முன்னர்.. ஆலயத்தில் சித்த வைத்தியர்கள்
மருந்துகளை தயாரித்து வருவார்கள். மூலிகைகளை கொண்டு, மேற்சொன்ன
பசுச்சாணங்களை கொண்டு... அங்கே அவர்களிடம் வரும் மக்களுக்கு நாடிபார்த்து
கண் பார்த்து கோவிலை இத்தனை சுற்று சுற்று என சொல்லி... நோய்க்கு ஏற்ப..
வெற்றிலை காம்பி, மாவிலை காம்பி, தென்ன ஒலையில் என இந்த மருந்துகளை
தருவார்கள். காசெல்லாம் கிடையாது. இது அவர்கள் வாழ்வியல். அனைத்து
ரசங்களை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். சில மருந்துகளுக்கு தங்கத்தை
பொடித்து பொடித்து பொடித்து வடிகட்டி வடிகட்டி வடிகட்டி மருந்துகளை
உருவாக்கி இருக்கிறார்கள். எந்த நோய்க்கும் மருந்துண்டு.
இதுபோக யோக சித்தர்கள் நோய் வராமல் இருக்க யோகத்தை கொடுப்பார்கள். ஒரு
பக்கம். இன்னொரு பக்கம் தத்துவார்த்தமாய் வாழ்வை விளக்குவார்கள்.
இப்படித்தான் நம் ஆலயங்கள் இருந்தன. நம் கலாச்சராமே.. நோயை அடக்குதல்
அல்ல... நோய் நாடி அத தணிக்கும் வாய் நாடி என வாழ்ந்தவர்கள். காரணம்
அவர்கள் அவசர மனிதர்கள் அல்ல. இந்த உடம்பு தான் ஆலயம் என வாழ்ந்தவர்கள்.
ஆகையால் செம்மையாய் பராமரித்தார்கள். மூத்தோர் சொல் கேட்டார்கள். ஆனால்
வைணவம், சமஸ்கிருதம், அந்நிய படையெடுப்புகள் எல்லாவற்றையும்
அரித்துவிட்டன. பிற்கால சோழர்களுக்கு பிந்தைய காலகட்டத்தை வைத்தே
விமர்சிக்கிறர்களே தவிர அதற்கு முந்தைய ஒரு பெருவாழ்வு பற்றி
பேசக்கூடமாட்டார்கள்.
ஏன் தெரியுமா ? ஒரு சிலருக்கு அது நாகரிகமில்லை. வேறு சிலருக்கு அவர்கள்
மத சாதி வியாபாரம் படுத்துவிடுமென்ற பயம். #நம்மாழ்வார் இந்த காலகட்டத்தை
பேசுகிறார். அதிலும் அவர் தெளிவாக பேசுகிறார். போஸ்டர் தின்னும் மாடுகள்
போடும் சாணியில் ஏதுமில்லை... மாட்டு மூத்திரத்தை அப்படியே தெளித்தால்
கிரிமி நாசினியுமல்ல.. அதை வடிக்க வட்ட வேண்டும்.... அதற்கும் ஒரு
பிராசஸ் உண்டு... இதை அறைகுறையாக திருடி... அதில் சிலர்
குளிர்காய்கிறார்கள். மாட்டு மூத்திரத்தை நேரிடையாக பெற்று தலையில்
தெளித்து ஆலயம் செல்வது என்பது போலித்தனம். மாட்டுக்குண்டாக மேய்ச்சல்
நிலங்கள், உணவுகள் சுகாதாரம் கொடுக்க வேண்டுமென்பதும் அவர் கருத்துதான்.
மாட்டிறைச்சி பாவமென எங்குமே சொல்லபடவில்லை. மாறாக அது சீரணிக்க
தாமதமாகும். அதன் பொருட்டு சில நோய் வரும் என சொல்லியிருக்கிறார்.
அதேசமயம் சில நோய்களுக்கு அதை மருந்தாகவும் கொடுத்திருக்கிற
ார்கள். மாட்டிறைச்சி சக்தியை கொடுக்குமென சொல்லியிருக்கிறார்கள். அதே
காலகட்டத்தில் போர்வீரர்களில் உணவில் மாட்டிறைச்சி அதிகம்
கலந்திருக்கிறது. அதுஅவர்களின் வலிமைக்காக. இது குறித்து ஒரு சீன
இலக்கியம் தமிழர் படைவீரர்கள் மாட்டிறைச்சியை சுட்டு (தந்தூரி)
உண்டுகிறார்கள்... அது அவர்களுக்கு ஒரு அயராத வலிமையை கொடுக்கிறது என
சொல்லியிருக்கிறது.
இதில் எங்கே அவர் டூபாக்கூர் ஆனார்... பிராமணியம் ஒரு அயோக்கியத்தனம்.
திருடியவைகளின் சேர்க்கை. ஆனால் அதை திட்டுகிறேன் என ... ஏன் தமிழர்
வாழ்வியலை பழிக்க வேண்டும். தமிழனுக்கு மூடத்தனமான் வழிபாடுகிடையாது.
வழிபாடு இருந்தால் அது இயற்கை சார்ந்த... சிவ(லிங்க) வழிபாடு மட்டுமே
தமிழர்களுரியது. பிழைப்பிற்காய் இங்கு வந்தவர்களின் இடைச்செருகலை
வைத்துக்கொண்டு நம்வாழ்வியலை கேவலபடுத்த வேண்டாம்.
சரி.. நம்மாழ்வார்.. மாட்டிறைச்சியை பாவமென சொல்லியிருக்கிறாரே... அது
அவர் கருத்து. அவர் வாழ்வியலின் அடிப்படையில் சொல்கிறார். அதை ஒன்றை
வைத்து அவரை கேவலப்படுத்துவீர்கள் எனில்... உங்கள் முட்டாள்தனம் தான்
எனக்கு தெரிகிறது. நம்மாழ்வாரின் மனைவியே அவர் உயிரோடு இருந்த காலத்தில்
இயற்கை விவசாயம் செய்யவில்லை. அதற்காய் நம்மாழ்வார் அவரை வெறுக்கவும்
இல்லை. அவர் ஒரு சூத்திரத்தை சொல்கிறார். அதை வைத்து வாழ்ந்து பாருங்கள்
என்கிறார். அவ்வளவே.. அதில் சில அவரது சொந்த கருத்து.. பல நம்
முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை.
இன்று தமிழ்நாட்டில் வீதிகளில் பயிறுவகைகள் ரூ.10க்கும், காய்கறி சூப்
ரூ.10க்கும். துளசி டீ 10க்கும், இந்த கிழவன் போட்ட விதை. கத்திரிக்காய்
, தக்காளி, கடுகு என எதில் மரபணு வந்தாலும் முதலில் எதிர்க்கிறதே தமிழகம்
எப்படி.. இது முதுகிழவன் உழைப்பு. உங்களுக்கு பிடிக்கவில்லையா ஒதுங்கி
கொள்ளுங்கள். ஆனால் அவரை கீழமை செய்ய வேண்டாம்.
தடுப்பூசி பிரச்சினையா வாருங்கள் என் ஊருக்கு... பிறந்தது முதல் தடுபூசி
போடாத குழந்தைகள் காட்டுகிறேன்... இன்று அவர்கள் விளையாட்டு துறையில்
இருக்கிறார்கள். என் உணவில் 50% நம்மாழ்வார் இருப்பார். எனக்கு இது
வசதியாக இருக்கிறது நான் வார்த்துக்கொண்டேன். வேறு சிலர் 100%
வாழ்கிறார்கள். இங்கே எல்லாருக்கும் வாழ்வியல் உண்டும். ஆனால் நீங்கள்
நம்பும் ஒன்றை எதிர்க்கிறார். உடைக்கிறார் என்றால்... அதற்கு ஏன் அவரை
வில்லனாக்க வேண்டும்.
இன்றைய அவசரவுலகில்... ஒரு மாத்திரை ஒரு ஊசியில் சரியாக வேண்டுமென்போரும்
உண்டு. இல்லை தமிழ்மரபுப்படி பார்த்துக்கொள்கிறேன் என வாழ்வோரும் உண்டு.
ஒருவேளை தடுப்பூசி போடாமல் இறந்துவிட்டால், வீட்டுபிரசவத்தி
ல்ல் இறந்துவிட்டால் என நீங்கள் பதட்டபட்டால்... நான் உரக்க சொல்கிறேன்..
நாம் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. கண் முன்னே குழந்தைகள் சாவையும் பெரியோர்
சாவையும்காணதது போல கடந்தவர்கள் நாம். இது வெறும் காழ்ப்புணர்ச்சி.
உங்கள் உணவை நீங்கள் தீர்மானியுங்கள். உங்கள் மருத்துவத்தை
தீர்மானியுங்கள். மற்றவர்களுடையதை அல்ல..
நம்மாழ்வார் என்றொரு... நீங்கள் எப்படி வேண்டுமானலும்
சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் நம்மாழ்வார் ஞானக்கிறுக்கன். வாழ்வியல்
ஆசான்.
நன்றி.
பா. சரவண காந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக