வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சிக்கிம் ஐ இந்தியா ஆக்கிரமித்த கதை சீனா விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு என அறிவிப்பு

பல புத்த அரசுகளின் கீழ் இருந்த சிக்கிமை பிரிட்டிசு இந்திய கம்பெனி
கைப்பற்றியது. 1947ல் பிரிட்டிசு காரன் வெளியேறியபோது, சிக்கிம் மக்கள்
இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டனர். நேருவோ சிக்கிம் அரசருடன் சிக்கிமை
தன்னாட்சி அரசாக ஏற்று ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் அரசருக்கெதிரான மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்ற பெயரில்
இந்திய ராணுவம் சிக்கிமில் புகுந்தது. அரசரை நீக்கியது. ஒரு லட்சம்
இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட தேர்தலில்
'இரண்டு லட்சம் மக்களும் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர்'. சிக்கிம்
இந்தியாவின் இணைந்த மாநிலமாயிற்று.
1947ல் இந்திய வரைபடத்தில் இல்லாத சிக்கிம் 1975ல் இந்தியாவுக்குள்
சேர்ந்த அதிசயம் நிகழ்ந்தது..
2017....
சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் அறிவிக்கிறது..
"சிக்கிமில் இந்திய ராணுவம் நுழைந்து இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக
இணைத்துள்ளது. சிக்கிம் மக்களின் விடுதலை போராட்டங்களை ஒடுக்குகிறது.
சிக்கிம் மக்களின் விடுதலையை சீனா அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது.
சிக்கிமை சுதந்திர நாடாக்க சீனா உதவி செய்யும். வட கிழக்கு பகுதி
மக்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டு எல்லைகள் மாறும். புது சுதந்திர
நாடுகள் உருவாகும்.'
காலம் மாறுகிறது..
சீன குடியரசின் நிலைப்பாடு ஆரிய இனவெறி இந்தியாவிடம் அடிமைப்பட்டுள்ள
தேசிய இன மக்களின் விடுதலைக்கு உதவும் காலம் இது..
அடிமைப்பட்ட தேசிய இனங்கள் இனி சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக