வியாழன், 21 செப்டம்பர், 2017

தை நீராடல் பண்டிகை விரதம் கன்னி பெண்கள் இலக்கியம்

தைந்நீராடல்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்….
பூதன் தேவனார். நற். 80 : 7-8

தைத் திங்களில் தண்ணிய நீர்நிலையிற் படிந்தாடுவதாகிய தவத்தைச் செய்யும் பெருந்தோள் குறுமகள். ( மணமாகாத மகளிர் தாம் மனத்திற் காதலித்த ஆடவனையே மணாளனாகப் பெறற் பொருட்டும் ; மணமான மகளிர் இம்மையேயன்றி மறுமைப் பிறப்புக்களிலும் தாம் பெற்ற கணவனே கணவனாக வாய்த்தற் பொருட்டும் மார்கழித் திருவாதிரை நாள் முதல் தைப்பூச நாள் முடியப் பெரும்புலர் விடியலில் தாயரும் ஆயமகளிரும் உடன்வர நீர்த்துறைக்குச் சென்று பாவை நிறுவி அதனையே பெரும்பெயர்க் கடவுளாகக் கருதி வழிபாடாற்றும் தவநெறி தைந்நீராட்டு எனப்படும். பாவை வைத்து வழிபட்டு நீராடுவதுபற்றிப் பண்டையோர் இதனை அம்பா வாடல் என்றனர்; ஆயினும் தைந்நீராடல் என்பதே பெருவழக்கு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக