வியாழன், 21 செப்டம்பர், 2017

இளம்பெண் வீட்டிற்குள் அடைந்து கிடைக்காது நீர்விளையாட்டு விளையாடுக இலக்கியம்

ஓரை விளையாட்டு
விளையாடு ஆயமோ டோரை ஆடாது
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே……………….
விரான் சாத்தனார். நற்.68:  1- 3
 ஆயமகளிரொடு கூடிச் சென்று ஓரை முதலியன விளையாடாமல் ; இளமகளிர் மனையின்கண்ணே செறிப்புண்டிருத்தல் அறமாகாது.
                ஓரை என்பது  நீர் விளையாட்டு வகையுள் ஒன்று; பற்பலரும் கரையில் நிற்க; ஒருவர் ஒரு சிறு குச்சியைக் கால் விரலின் இடையில் செருகிக் கொண்டு நீர்க்குள் குதித்து மூழ்கி விட்டுவிடுவர். அது நீர்ப்பரப்பில் வெளிப்பட்டு மிதக்கக் காண்பவர் தாம் நீரில் குதித்து நீந்தி அதனை எடுத்து வந்து கரையவர்பால் சேர்ப்பர்; தவறுவோர் பலருடன் நீரில் இறங்கி ஒவ்வொருவரையும் தீண்ட முயல்வர்; நீந்துதல் வல்லவர்கள் அவர் கைப்படாமல் நெடிது செல்வதும் நெருங்கியவழி நீர்க்குள் மூழ்கிப் பின் வேறிடத்தில் வெளிப்படுவதும் செய்வர்.; இஃது இக்காலத்து ஓரையாட்டு.

பெண்ணுரிமை பெண்கள் ஆயர் ஆயர்பாடி விளையாட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக