புதன், 20 செப்டம்பர், 2017

பழந்தமிழர் போர் உத்தி சங்ககால போர்க்கலை

தங்கராசு நாகேந்திரன்
அரண்மனையைச் சுற்றியுள்ள அகழியில் முதலை வளர்த்து பயமுறுத்துவது
கோட்டையை முற்றுகை இடும் வீரர்கள் மேல் மேலிருந்து கொதிக்கும் எண்ணைக்
கொப்பறையைத் தள்ளி விடுவது
பாறாங்கல் குண்டுகளை பறக்கவிடுவது போன்ற போர் யுக்திகள் சங்க காலத்தில்
தமிழகத்தில் இருந்திருக்கின்றன
இது போக ஈட்டியை 40 அடி பனைமர சட்டத்தின் முனையில் செருகி அதை குதிரைப்
படைகள் அணிவகுத்து நிற்கும் போது தரையில் கீழே வைத்திருப்பார்க
ளாம் எதிரி நாட்டு குதிரைப் படை முன்னேறி வரும்போது கண் இமைக்கும்
பொழுதில் அந்த வேல் சட்டங்களை தூக்கிப் பிடிப்பது அதன் மூலம் முன்னேறி
வரும் குதிரைப்படையை நிலை குலைய வைத்து தாக்குவது
போர் நடக்கும் இடத்தை முன்னரே சென்று சாலையை சுத்தம் செய்து அங்கு கடுகை
பரப்பி அதன் மேல் பனை ஓலைகளை பரப்பி மேலே மணல் தூவி அதன் மேல்
புற்களையும் தூவி மறுமுனையில் நின்று கொண்டு இங்கே வாடா என சவால்
விடுவார்களாம் வெறி கொண்டு வேகத்துடன் முன்னேறி வரும் குதிரை படைகள்
கடுகுச்சாலையில் கால் வழுக்கி விழ காலாட் படைகள் முன்னேறி
தாக்குவார்களாம்
நெப்போலியன் போனபார்ட்டின் ஆங்கிலேயருக்கு எதிரான பெரிய வெற்றி ஒன்று
கத்தியால் அல்லாமல் புத்தியால் தான் அமைந்தது
பதுங்கு குழி அமைத்து எதிரும் புதிருமாக இரு நாட்டினரும் போராடப்
போகையில் மழை வந்திருக்கிறது பீரங்கிகளை மழையில் நனையவிட்டு இங்கிலாந்து
வீரர்கள் பதுங்கு குழியில் நனையாமல் பதுங்க நெப்போலியன் பீரங்கிகளை
நனையாமல் பதுங்கு குழிகளில் வைத்து விட்டு வீரர்களை மழையில் நனைந்திருக்க
சொன்னானாம் (இடப் பற்றாக்குறை காரணமாக)
மழையில் நனையாதிருந்த ஆங்கிலேய வீரர்கள் புத்துணர்வுடன் மழை விட்டதும்
வந்து மழையில் நனைந்து பதத்து போன பீரங்கிகளை தயார் செய்யும் நேரத்தில்
மழையில் நனையாதிருந்த பீரஙகிகளைக் கொண்டு சுட்டுத்தாக்கி நெப்போலியன்
வெற்றி பெற்றானாம்
தமிழர்தம் கடற்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை அவரின் போர்
யுக்திகளை படமாக்கினால் பாகுபலி எல்லாம் ஒரு படமே அல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக