புதன், 20 செப்டம்பர், 2017

நெல் தமிழர் உணவா? வேளாண்மை விவசாயம் பள்ளர்

Gabriel Raja மற்றும் 33 பேர் உடன்
விருத்திரன் .
நெல் தான் தமிழர் உணவா?
காணி பழங்குடிகள் பற்றிய தகவல்
காணி மக்களின் உணவு பெரும்பாலும் மரவள்ளி/கப்பக் கிழங்கும், காந்தார
மிளகாயும் தேங்காயும் சேர்த்து அரைக்கப்பட்ட சட்டினியும். தேனும், தினை
மாவும்,வாழைப்பழங்கள், சில உண்ணக்கூடிய காளான்களும் மற்றும் கிழங்கு
வகைகளும்தான்.
அன்று ஒரு நாள் மள்ளரியல் பேசும் ஒருவர் சொன்னார் "நாங்கள் மருதநிலத்தை
உருவாக்கவில்லையெனில் நீங்கள் எதை தீண்பீர்கள் " என
இது அதற்கான பதிலே...
நெல்லுக்காக வணங்கப்படும் தெய்வங்கள் எங்களது இல்லை எங்களது தெய்வங்கள்
இறந்த எங்கள் முன்னோர்களின் நடுகல் வழிபாடே என ஒரு இடத்தில் குறிப்பிட
பட்டுள்ளது...
ஒன்னத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்த்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்து பரவுங் கடவுளுமிலவே..
-மாங்குடி கிழார்.
இவை அனைத்தையும் ஒப்புநோக்கும் போது நெல் என்பது ஒரு வணிகபொருள் என்றும்
அதை உற்பத்தி செய்யும் வணிககூட்டம் ஒன்று தான் இங்கே படைகளை வைத்து
பழங்குடிகளை பிடித்து வந்து வயல்வெளிகளையும் அதற்கு தேவையான பாசன
வசதிகளையும் உருவாக்கியது என்பது வெட்டவெளிச்சம்...
பாசனவசதிகாக வெட்டப்படும் குலங்களை கல்வெட்டுகள் 500நாள் வெட்டிவேலை என
குறிப்பிடுகிறது அதே மக்களின் வாழ்வியலில் ஆத்திரமாக வெளிப்பட்டு வீணான
வேலையை வெட்டிவேலை என இயல்பாக வருகிறது.இதனால் நாம் அறிந்து கொள்வது
பழங்குடிகளான நாம் தான் இந்த நெல் நாகரிகத்திற்கு பிடித்துவரப்பட்டு
இருக்கிறோம் இன்னும் இதே போல ஆயிரம் தகவல்கள் உண்டு இவற்றை நிறுவ.
அவையெல்லாம் எழுதினால் அது புத்தகமாகிவிடும்.
வணிகத்திற்காக நாடு பிடித்த கூலிப்படை அரசர்கள் நாங்கள் தான் என்பதில்
எத்தனை போட்டி இந்த மக்களிடையே ...
ஒரு பக்கம் காடுகளை அழித்தது நான் தான்!
வயலை உருவாக்கியது நான் தான்!
கோவிலை கட்டியது நான் தான்!
அதில் வெள்ளாமை வாங்கி கணக்கு பார்த்தவெள்ளாளனும் நான் தான்...
வணிகத்துக்கு படைநடத்தியவனும் நான் தான் ...
கப்பலை கண்டுபிடித்ததே நான் தான் அதில் வியாபாரம் செய்ததும் நான் தான் என
வீண்பெருமை பேசும் கூட்டத்தை பார்த்தால் அவர்களை சொல்லுவதா?
இல்லை விடுதலைஇறையியல் எனும் கொடிய அமைப்பால்இயக்கப
்படும் ஆய்வாளர்களை சொல்வதா என தெரியவில்லை...
தர்ச்சார்புக்கு திரும்புங்கள்..
.ஆனால் அது நெல்உணவு அல்ல இறைச்சி மற்றும் தானியம் மற்றும் கிழங்கு தேன்
வகைகளாக இருக்கட்டும்...
வாழ்த்துகள்

Aathimoola Perumal Prakash
தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது.
கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்.
நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம்தான் 50
ஆண்டுகள் முன்புவரை இருந்தது.
நெல் நமது முக்கிய உணவு இல்லை.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம்.
இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக