உண்மைத்தமிழன்
Home
View web version
Monday, 20 March 2017
unmaiyanaunmaitamilan at 13:23
சீமான் உண்மை முகம்
தமிழன் என்ற வலைதள முகவரியில் , ‘முன்னாள் சீமான் ஆதரவாளர்(?)’ என்று
சொல்லிக்கொள்ளும் முகம் காட்ட விரும்பாத ஒருவர் எழுதிய பதிவிற்கான
எதிர்வினைதான் இக்கட்டுரை. பதில் எழுத வேண்டாம் என்றுதான் பலநாட்கள்
இருந்தேன். ஆனால், சில வாட்சப் புரட்சியாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,
சீமானுக்கும் எதிரான அந்தப் புளுகு மூட்டைகளை எவ்விதக் குற்றஉணர்வும்,
துளியளவு அறவுணர்வும் இல்லாது தொடர்ந்து பரப்புகிறார்கள். அதனைத் தடுத்து
நிறுத்த முடியாது என்றாலும், அதில் கூறியிருக்கும் செய்திகளின்
உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். ஆய்வுக்குள்ளாக்கலாம் என்று
முனைவோருக்கான விடைதான் இக்கட்டுரை. எனக்கு தெரிந்த சீமான் தரப்பு
நியாயங்களை தகுந்த ஆதாரத்தோடு அவர் வரிசைப்படுத்தியிருக்கும்
தலைப்பின்படியே முன்வைத்திருக்கிறேன். இதனை முழுமையாகப் படியுங்கள். அந்த
முகமில்லா ‘தமிழன்’ எழுதிய கட்டுரையில் எத்தனை பொய்யும், புரட்டும்,
வன்மமும் நிறைந்திருக்கிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
2009ஆம் ஆண்டு மே மாதம், சிங்கள அரசாங்கத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட
இனப்படுகொலைகளையும்,
இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஐநாவும், உலக நாடுகளும் கண்டுகொள்ளாத நிலையில்
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசுசாரா
அமைப்புகளும் 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்திலிருந்து முறையிட்டனர். நிரந்தர
மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்தத் தரவுகள், செய்திகளின் அடிப்படையில்
நவம்பர் 19,2009 அன்று ‘சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான
காலக் கட்டம்’, ‘இறுதிப்போர்’, ‘குறிப்பாக இறுதி மாதங்களில் (ஏப்ரல்,
மே-2009) நடைபெற்றவை’
போன்றவைகளை விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி, அதற்கான பணிகளை தொடங்கிய
தீர்ப்பாயமானது, 2010ஆம் ஆண்டு சனவரி 14 - 16 வரை தனது முதல் அமர்வை
(விசாரணையை) அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடத்தியது. அந்த
அமர்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிகளுக்கு எதிராக 41 பக்க
அறிக்கையை சமர்பித்துள்ளனர் என்று தொடங்குகிறது முதல் குற்றச்சாட்டு.
டப்ளின் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்;
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதோ அதற்கு 3 மாதங்களுக்கு பிறகு, மே 18,
2010 அன்று. நாம் தமிழர் கட்சி கட்சி தொடங்கும் முன்னரே டப்ளினில் கட்சி
சார்பாக
புலிகளுக்கு எதிரான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறுவது என்ன வகையான
குற்றச்சாட்டு?. அவர் குறிப்பிடும் அந்த 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது
மனித உரிமை ஆர்வலர் பால் நியூமேன். அங்கே அவர் அவ்வறிக்கையை
சமர்ப்பிக்கும்போது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்றே தொடங்கப்படவில்லை
அதற்குமுன் அமைப்பாக இருந்த நாம் தமிழர் இயக்கத்திலும் பால் நியூமேன்
இல்லை. ‘மே 17’ இயக்கத்தோடுதான் அப்பொழுது பால் நியூமேன் இணைந்து
செயல்பட்டார். அவர் அறிக்கை சமர்ப்பித்துவிட்டு இந்தியா வந்த பிறகு, மே
17 இயக்கம்
இதுதொடர்பாக நடத்திய டப்ளின் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த 'இலங்கை அரசின்
போர்க்குற்றங்களின் விசாரணை மற்றும் இந்து-ராமின் பொய் மோசடி ஊடகப்
பணிகள்' என்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு, தான் சமர்ப்பித்த
அறிக்கையில் உள்ளவற்றைத் பேசியிருக்கிறார். (ஆதாரம் -
https://goo.gl/wj2DeI ). இவர்கள் கூற்றின்படி, பால்நியூமென்
சமர்ப்பித்த அறிக்கையில் தவறு இருக்கிறதென்றே வைத்துக்கொண்டாலும் அதற்கு
விளக்கம் தர வேண்டியது பால் நியூமேன் அவர்களும் மே 17 இயக்கமும்தான்.
பால் நியூமேனாவது தான் யார்,
இதுவரை தான் செய்த வேலைகள்,
மனித உரிமை செயல்பாட்டாளராக சமர்பித்த தனது அறிக்கையை அறிக்கை குறித்து
பல முறை விளக்கமளித்திருக்கிறார் (ஆதாரம் -
https://www.youtube.com/watch? v=xoVd2pILrlY ). மே17 இயக்கம் தான்
இன்றுவரை அதுகுறித்து அவர்கள் வாய்திறக்கவில்லை. நடந்தவைகள் இவ்வாறு
இருக்கையில் அதற்கு எந்தவகையிலும் தொடர்பே
இல்லாத நாம் தமிழர் கட்சியை அந்த அறிக்கையோடு தொடர்புபடுத்துவது
எவ்வகையில் ஏற்க இயலும்? என்பதை உங்களது முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள் :
மேற்கூறிய பொய்யான துரோகக் குற்றச்சாட்டு எனும் புரட்டுரைக்கு
வலுசேர்ப்பதற்காக இரண்டு இணைப்புகளை கொடுத்திருக்கிறார்.
முதல் இணைப்பு,
‘மாணவர் அமைப்பு சீமானுக்கு தடை’ என்ற விகடன் செய்தி.
2010ல் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பானதுதான் இதுவும். 2016ஆம் ஆண்டு ஜூன்
மாதம் பால் நியூமேன் கலந்துகொள்ளும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு
எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு என்ற பெயரில் கடிதம் ஒன்று
முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. எதையுமே புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக
அணுகுகிற சில அதிமேதாவிகளும், ‘மாணவர் அமைப்பு’ என்ற பெயரில் உலவும் சில
நிரந்தர மாணவர்களும் வழமை போல இதனையும் தனது அறிவுக்கண்(!) கொண்டு
அணுகியதால் வந்ததே இவ்வறிவிப்பு. அது தொடர்பான செய்திதான் விகடனில்
வந்தது. ஆனால், அதற்கு மாணவர்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லாததால்
அப்புத்தக வெளியீட்டுவில் எவ்விதப் போராட்டமும் நடைபெறவில்லை. இதனால்,
புத்தக வெளியீட்டு விழாவானது எவ்விதச் சலசலப்புக்கும் இடங்கொடாது மிக
அமைதியான முறையில்
நடைபெற்றது. காசி ஆனந்தன், வெள்ளையன், வ.கௌதமன் ஆகியோர் மாணவர் அமைப்பின்
எதிர்ப்பால்தான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்றும்
எழுதியிருக்கிறார். ஆனால், தாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு
இதுதான் காரணம் என அவர்கள் எந்தவிடத்திலும் அறிவிக்கவில்லை. அதன்பிறகு,
பல மேடைகளில் அவர்கள் மூவரும் சீமானோடு பங்கேற்றனர். அங்கும் இதைப்பற்றி
அவர்கள் பேசவில்லை.
இன்னொரு ஆதாரமாக, தேவர் சமுதாயத்து மக்கள் சீமானுக்கு எதிராக
குற்றச்சாட்டு வைத்தார்கள் என்று ஒரு முகநூல் பக்க இணைப்பையும்
கொடுத்திருக்கிறார்கள். அதில் சென்று பார்த்தால் அந்த கட்டுரையில் என்ன
எழுதப்பட்டிருக்கிறதோ அது அப்படியே வார்த்தை மாறாமல்
பதிவிடப்பட்டிருக்கிறது. தேவர் பிலிம்ஸ் என்ற URL கொண்ட அந்த பக்கத்தில்
ஆங்கிலப் படங்களை பதிவேற்றியிருக்கிறார்கள். அந்த பக்கத்திற்கும் (ஆதாரம்
- https://www.facebook.com/ thevarvamsamfilmsindia/ ) தேவர் சமுதாயத்து
மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொன்றும்
தேவர் சமூதாய மக்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் அல்ல! மேலும்,
அந்தப்பக்கமானது
விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் நடத்துகிற பக்கமாகும். அதற்குச் சான்றாக,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான மிகக் கடுமையான அவதூறு பரப்புரைகள்
அப்பக்கத்தில் இருப்பதைக் காணலாம். ( ஆதாரம் -
https://goo.gl/7pvb71 ). இந்தப் பக்கத்தை வைத்திருப்பவரே புலிகள்
எதிர்ப்பாளர் எனும்போது, சீமான் புலிகளுக்கு துரோகம் செய்கிறாரென்று
பொங்க வேண்டிய அவசியமென்ன? சீமான் புலிகளுக்குத் துரோகம் செய்தாரென்றால்,
புலிகளின் எதிர்ப்பை மேற்கொள்ளும் அந்தப் பக்கத்தினர் சீமானை ஆதரிக்கவே
செய்திருக்க வேண்டும். ஆனால்,
அதனைவிடுத்து அவர்கள் புலிகளையும் விமர்சிக்கிறார்கள். புலிகளுக்குத்
துரோகம் செய்துவிட்டதாக சீமானையும் விமர்சிக்கிறார்கள். இதிலிருந்தே
அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். ஒரு சாதியை அடையாளமாகக்
கொண்டு போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் தனது கட்டுரையில் உள்ளதை
அப்படியே போட்டுவிட்டு அதையே ஆதாரமாக கொடுப்பதில் ‘உண்மைத்தமிழனின்’
உண்மை முகத்தை அறியலாம்.
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கை சென்றது படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கதானாம்.
அதனை நடிகர் ராஜ்கிரணே விகடன் பேட்டியில் கூறிவிட்டார் என
அங்கலாய்க்கிறார் கட்டுரையாளர். இந்தக் பொய்யுரையின் தொடக்கத்தில்
ராஜ்கிரணைப் பற்றி ஒரு முன்னுரை வேறு! அவர் ஒழுக்கமானவர்; திரையுலகில்
எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்; சீமான் மேல் அவருக்கு எந்த
மனக்கசப்புமில்லை என்று. எதற்காக இப்போது ராஜ்கிரண் அந்தாதி
வாசிக்கிறார்கள் எனப் பார்த்தால் ராஜ்கிரண் மேல் நன்மதிப்பு வரச்செய்து,
அவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையை உருவாக்கவே இந்த
யுக்தி. ராஜ்கிரண் தன் பணத்தையும், சொத்தையும் எப்படி இழந்தார்? எந்த
வாய்ப்புமில்லாமல் போனதற்கு யாரோடு அவர் மோதினார்? அவரது தனிமனித
ஒழுக்கம் என்ன? என்பதெல்லாம் திரைத்துறையினருக்கு நன்றாகத் தெரியும்.
அதனை நாமும் பேசினால் 'பொய்த்தமிழனுக்கும்’
நமக்கு வேறுபாடு இல்லாது போய்விடும். அறம் கருதி அதனை தவிர்க்கிறேன்.
இப்போது செய்திக்குள் வருவோம்! சீமான் படம் எடுப்பதற்கு பயிற்சி
அளிக்கத்தான் சென்றாரென்றால் தமிழகத்தில் எத்தனையோ அனுபவம் வாய்ந்த
முதும்பெரும் இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறபோது அவர்களையெல்லாம்
அழைக்காமல் சீமானை ஏன் அழைக்கவேண்டும்? படமெடுக்கிற பயிற்சிதான்
தேவையென்றால், ஏற்கனவே அங்கு சென்ற பாரதிராஜா, மகேந்திரனிடமே பயிற்சி
அளிக்கச் சொல்லியிருப்பார்களே?
பாரதிராஜாவையும்,
மகேந்திரனையும்விடவா சிறந்த பயிற்சியை சீமான் கொடுத்துவிடப் போகிறார்?
என்ற கேள்விகளுக்குப் பதில் வராது. போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்
சமயத்தில் தமிழகத்திலிருந்து ஒருவரை அழைத்து புலிகள் திரைப்படப்பயிற்சி
எடுத்துக்கொண்டிருப்பார்கள்? என்ன ஒரு அதிமேதாவித்தனம்! அதுசரி! புலிகள்
சீமானை படமெடுக்கிற பயிற்சி அளிக்கத்தான் அழைத்தார்கள் என ராஜ்கிரணுக்கு
எப்படி தெரியும்? எதனை வைத்துக் கண்டறிந்தார்? புலிகள் ராஜ்கிரணிடம்
சொன்னார்களா? எதனை அடிப்படையாக வைத்து அதனைக் கூறுகிறார்? ஈழத்திற்கானப்
போராட்டங்களை முன்னெடுத்த தமிழகத் தலைவர்கள்கூட இக்கருத்தை கூறவில்லையே,
அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு எப்படி தெரிந்தது?
விகடன் பேட்டியில் இதனைக் கூறிய ராஜ்கிரண் அதன்பிறகு அதுகுறித்து வேறு
ஏதும் பேசவில்லையே ஏன்? ஈழப்போராட்டத்தோடு நேரடி தொடர்பு கொண்டிருந்த
தலைவர்களில் ஒருவர்கூட ராஜ்கிரணின் கருத்தை ஏற்க வில்லையே ஏன்?
இங்குள்ளவர்களை விட்டுவிடுவோம்! புலிகளோடு நெருங்கிய
தொடர்பிலிருந்தவர்கள்,
இயக்கத்திலிருந்தவர்கள், ஈழத் தமிழர்கள் போன்றோர் புலம்பெயர்ந்து
வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் யாரும் ராஜ்கிரணின் கருத்தை
வழிமொழியவில்லையே ஏன்? அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு
தெரிந்துவிட்டதா? இது எல்லாவற்றையும்கூட விட்டுவிடுவோம்.
முதலில் ராஜ்கிரணுக்கும்,
ஈழப்போராட்டத்திற்குமான தொடர்பு என்ன? திடீரென்று தன்னைப் புலிகளின்
பிரதிநிதி போல சித்தரித்துக்கொண்டு, சீமானின் பயணத்தைப் பற்றி கருத்துகளை
உதிர்த்துவிட்டு அமைதியாகிவிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழக
அரசியலில் தவிர்க்க முடியா அரசியல் பெரும்சக்தியாக உருவெடுத்துவரும்
சீமானின் வளர்ச்சி சிலரது கண்ணை உறுத்துகிறது. அந்த உறுத்தல்தான்
ராஜ்கிரணை இப்படி பேச வைத்திருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கோ அரசியலுக்கோ
சம்பந்தமே இல்லாத ஒருவர் ஆதாரமாக வைத்துக்கொண்டு வாதிடும்போதே நாம் இவரது
அரசியல் அறிவை(!) தெரிந்து கொள்ளலாம். இவருக்கும் ராஜ்கிரணுக்குக்கும்
சேர்த்து நேரடி சவாலாக கூட இந்த கட்டுரை வாயிலாக வைக்கிறேன்.
ஈழப்போராட்டத்தில் எந்த அரசியலையும் சாராத நடுநிலையாக இருக்கும் யாராவது
ராஜ்கிரண் சொன்னது உண்மைதான் என்று சொல்ல செய்தால் இந்த கட்டுரையை நான்
அழித்துவிடுகிறேன்.
அடுத்தது போரின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் களத்திலிருந்து எல்லாளன் பட
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களிடம் சூசை அண்ணன், ‘சீமானை முன்னெடுக்கச்
சொல்லுங்கள்’ என்று பேசியதை (ஆதாரம் -
https://www.youtube.com/watch? v=DbCrv4I6MQs&t=7s ) போலி ஆடியோ
என்கிறார். அதை தயாரித்து யூடியூபில் வெளியிட்டது சீமான்தானாம். புலிகள்
அதிகாரப்பூர்வமாக வானொலியில் தான் வெளியிடுவார்களாம். அதனால், இது
போலியாம். அங்கே இறுதிக்கட்ட சண்டை நடந்துகொண்டிருக்கிறது மக்கள்
கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார் கள்; அதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்;
எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதைச் சொல்லி சீமானை முன்னெடுக்கச்
சொல்லுங்கள் என்கிறார். இதை அந்த நேரத்தில் எந்த வானொலியில் சொல்ல
முடியும்?. இந்த குரலொலியை வெளியிட்டது சந்தோஷ்தான். இன்றும் சூசை அண்ணன்
பேசிய குரல் பதிவை வெளியிட்ட சந்தோஷ் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான
பெரிய ஊடகமொன்றில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இது பொய்
என்றால், அவர் எப்பொழுதோ மறுத்திருப்பார். அந்த குரல் சூசை அண்ணனின்
குரல் தான் என்பதை அவரின் மற்ற காணொளிகளை (ஆதாரம் -
https://www.youtube.com/watch? v=w7pJTT0xndU ) வைத்து ஒப்பிட்டு
அறிந்துகொள்ளலாம்.
சீமானும் , சிங்களர்களும்:
சீமான் பல காலமாக சிங்களர்களோடு நட்போடு
இருக்கிறாராம். அதனால்தான், தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்தாராம்.
சிங்களரோடு நட்போடு இருக்கிறார் என்று சொல்வதற்கு எதுவுமே கிடைக்காததால்
விரக்தியுற்ற கட்டுரையாளர் இறுதியாக பூஜாவை வைத்து படம் இயக்கியதைவிட
வேறு காரணம் வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சரி!
இவர்கள் கூற்றுப்படி, சிங்களர்களுடன் இருந்த தொடர்பின் விளைவாகவே பூஜாவை
வைத்து சீமான் படமெடுத்தார் என்றே வைத்துக் கொள்வோம். பூஜாவை வைத்து
‘தம்பி’ படமெடுக்கப்பட்டது
2004-2005 காலக்கட்டத்தில். அதன்பிறகான ஆண்டுகளில்தான், ஈழத்திற்குச்
சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்தார் சீமான். ஒருவேளை சிங்களர்களோடு
சீமானுக்குத் தொடர்பிருந்தால் அவரை எப்படி தலைவர் பிரபாகரன் ஈழத்திற்கு
அழைத்திருப்பார்? என்பதைக்கூட யோசிக்க வேண்டாமா?
போறபோக்கில் எதுவாவது எழுதி விடுவதா?
சிங்களர்களோடு நட்பாய் இருந்தாலும் என்ன தவறு? சிங்கள மக்களை தலைவர்
பிரபாகரனே எதிரியாகக் கருதவில்லையே, ‘எனது போரானது சிங்கள இராணுவத்திற்கு
எதிரானதுதானே ஒழிய, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல!’ என பல சமயத்தில்
கூறியவர்தானே தலைவர் பிரபாகரன். சிங்கள இனவெறியர்கள் தான் தமிழர்களின்
எதிரியே ஒழிய, அப்பாவி சிங்கள மக்கள் அல்ல! என்பதுதானே புலிகளின்
நிலைப்பாடும். அதனால்தானே, தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பு படையில்கூட
சிங்களர்கள் இருந்தார்கள். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்
அவர்களின் துணைவியார்கூட சிங்களர் தானே, அதற்காக அவரையும்
எதிரிப்பட்டியலில் இணைத்துவிட முடியுமா என்ன? அதனால், சீமான் பூஜாவை
வைத்து படமெடுத்தார்; அதனால், அவருக்குச் சிங்களர்களோடு தொடர்பிருக்கிறது
என்பதெல்லாம் உப்புசப்பில்லாத வாதம்.
அடுத்து கத்தி பட விவகாரத்தில் ராஜபக்சே உறவினருக்கு ஆதரவாக சீமான்
செயல்பட்டாராம். லைகா நிறுவனம் எடுத்த ‘கத்தி’ படத்திற்கு எல்லா
அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தபோது சீமான் மட்டும் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லையாம். தான் ஏன் கத்தி படத்தை எதிர்க்கவில்லை என்பதை
விளக்கிய சீமான், ‘ஒரு தேசிய இனப்போராட்டத்தை ஒரு திரைப்படச்
சிக்கலுக்கிடையே குறுக்காதீர்கள்’ என்றும், ‘கத்தி படம் எதிர்க்க வேண்டிய
படமல்ல’ என்றும், இந்த எதிர்ப்பில் உள்நோக்கம் இருக்கிறதென்றும் சீமான்
பேட்டி கொடுத்தார் (ஆதாரம் - https://youtu.be/o3oWumq7o3I ). அவர் அந்த
பேட்டியில் என்ன சொன்னாரோ அதுதான் கடைசியில் நடந்தது. அதன்பிறகு, லைகா
நிறுவனம் தயாரித்த பல படங்கள் வெளிவந்தபோதும் எந்த படத்தையும் தமிழ்
உணர்வாளர்கள் என்று சொல்லப்படுகிற எந்த அமைப்பும் எதிர்க்கவில்லையே ஏன்?
மக்களின் உரிமைப்போராட்டங்களுக்கு ஒன்று திரளாதவர்கள் திரைப்படத்தை
எதிர்க்க ஒன்று திரள வேண்டிய அவசியமென்ன? அந்தத் திரைப்பட எதிர்ப்பு
ஒன்றுதான் 63 அமைப்புகளின் தலையாயப் பிரச்சினையா? அதற்குப் பிறகு அவர்கள்
ஒரு போராட்டமும் செய்யவில்லையே ஏன்? சரி! போராட மாட்டேன் என்று
வெளிப்படையாக சொன்ன சீமானுக்கு சிங்களர்களோடு தொடர்பு இருக்கிறது
என்றால், போராடுவோம் என்று சொல்லி கூடி கடைசியில் போராட்டத்தை கைவிட்ட 63
இயக்கங்களுக்கு யாரோடு தொடர்பு?
உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசை தடுத்தது நாம் தமிழர்
கட்சி என்றும், அதற்கு பணம் வந்து குவிந்தது என்றும் அடிப்படை அறிவே
இல்லாது மனம்போன போக்கில் உதிர்த்திருக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ
அரசு அமைக்கப்பட்டு அதற்கு பிரதமராக உருத்திரகுமாரனும், பல்வேறு
அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு பலர் அதில் பொறுப்பில் இருக்கிறார்கள்.
இது கூட தெரியாமல் நாடு கடந்த தமிழீழ அரசு அமையவில்லை என்கிறார்
அக்கட்டுரையாளர். அந்த அரசில் இருக்கும் யாரும் இதுவரை சீமானுக்கு எதிராக
ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. ஆனால், அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்
இவரிடம் வந்து காதில் ஓதியதைப் போலவே இதனை எழுதியிருக்கிறார். சீமானுக்கு
பணம் வந்தது என்று சொல்கிற ஒருவர்கூட இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிட
முடியவில்லை என்பதிலிருந்தே இந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை
அறிந்து கொள்ளலாம்.
சீமானும் , தமிழ்நாடும் :
அடுத்து சீமானின் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருகிறார். இயற்கை வளங்கள்
சுரண்டப்படுவதை பற்றிப்
பேசினாலும், தாது மணல் வைகுண்டராஜனிடமும்,
கிரானைட் பி.ஆர்.பி.யிடமும் சீமான் நெருக்கமாக இருக்கிறாராம். சீமானின்
திருமணம் முடிந்ததும் வைகுண்டராஜன் கறிவிருந்து கொடுத்தாராம். அதனால்
வைகுண்டராஜனின் பினாமியாம் சீமான். அதற்கு ஆதாரமாக வினவு கட்டுரையை
கொடுத்துள்ளார் (http://www.vinavu.com/2013/ 10/25/seeman-natarajan- vaikudarajan-tamil-desiam/
) . அந்தக் கட்டுரையில், தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக
இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு
விருந்து முடித்துவிட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா
ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜனின் மகன் திருமணத்திற்கு என்று இருக்கிறது.
திருமணம் முடிந்ததும் எல்லோரும் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.
ஆனால், சீமான் சென்றதோ இடிந்தகரை போராட்டத்திற்குத்தான். அன்று
இடிந்தகரை மக்கள் தான் கறி விருந்து வைத்தனர். அதை அப்படியே மாற்றி
வைகுண்டராஜன் கறிவிருந்து வைத்ததாக எழுதியிருக்கிறார்கள். யார்
விசாரித்து பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தனது விருப்பத்திற்கு
உண்மைக்குப் புறம்பானவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்.
அடுத்து, வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் சீமானுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். அது வைகுண்டராசனின் பினாமி சீமான்
என்பதை உறுதிப்படுத்துகிறதாம். நியூஸ் 7 தொலைக்காட்சியில் தேர்தல்
நேரத்தில் கருத்துக்கணிப்பு விவாதங்களில் நாம் தமிழர் கட்சி பெயரைக்கூட
குறிப்பிடாமல் தவிர்த்தார்கள். கூட்டணியில் நின்ற அனைத்துக்கட்சிகளை
தனியாக குறிப்பிட்டுவிட்டு தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை
மற்றவைக்குக் கீழ் காட்டினர். நாம் தமிழர் கட்சியைக் குறிப்பிட வேண்டும்
என்று கோரிக்கை வலுத்தபோது, ‘உங்கள் பலத்தை நிரூபியுங்கள் பின்னர்
நாங்கள் குறிப்பிடுகிறோம்’ என்று விவாதத்திலேயே பதில் அளித்தார்கள்.
அப்படிப்பட்ட தொலைக்காட்சி சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது
உச்சகட்ட முரண். அப்படியும் நம்பிக்கையில்லை என்றால் நியூஸ் 7
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்களின் யூ டியூப் தளத்தில் (ஆதாரம் -
https://www.youtube.com/user/ news7tamil/ )
பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். அதில் சென்று சீமான் தொடர்பான
செய்திகள், பேட்டிகள் எத்தனை இருக்கிறது? மற்றவர்களுடையது எத்தனை
இருக்கிறது? அந்தத் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளில் நாம் தமிழர்
கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனை நாட்கள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று
பார்த்து உண்மைநிலை
Home
View web version
Monday, 20 March 2017
unmaiyanaunmaitamilan at 13:23
சீமான் உண்மை முகம்
தமிழன் என்ற வலைதள முகவரியில் , ‘முன்னாள் சீமான் ஆதரவாளர்(?)’ என்று
சொல்லிக்கொள்ளும் முகம் காட்ட விரும்பாத ஒருவர் எழுதிய பதிவிற்கான
எதிர்வினைதான் இக்கட்டுரை. பதில் எழுத வேண்டாம் என்றுதான் பலநாட்கள்
இருந்தேன். ஆனால், சில வாட்சப் புரட்சியாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,
சீமானுக்கும் எதிரான அந்தப் புளுகு மூட்டைகளை எவ்விதக் குற்றஉணர்வும்,
துளியளவு அறவுணர்வும் இல்லாது தொடர்ந்து பரப்புகிறார்கள். அதனைத் தடுத்து
நிறுத்த முடியாது என்றாலும், அதில் கூறியிருக்கும் செய்திகளின்
உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். ஆய்வுக்குள்ளாக்கலாம் என்று
முனைவோருக்கான விடைதான் இக்கட்டுரை. எனக்கு தெரிந்த சீமான் தரப்பு
நியாயங்களை தகுந்த ஆதாரத்தோடு அவர் வரிசைப்படுத்தியிருக்கும்
தலைப்பின்படியே முன்வைத்திருக்கிறேன். இதனை முழுமையாகப் படியுங்கள். அந்த
முகமில்லா ‘தமிழன்’ எழுதிய கட்டுரையில் எத்தனை பொய்யும், புரட்டும்,
வன்மமும் நிறைந்திருக்கிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
2009ஆம் ஆண்டு மே மாதம், சிங்கள அரசாங்கத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட
இனப்படுகொலைகளையும்,
இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஐநாவும், உலக நாடுகளும் கண்டுகொள்ளாத நிலையில்
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசுசாரா
அமைப்புகளும் 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்திலிருந்து முறையிட்டனர். நிரந்தர
மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்தத் தரவுகள், செய்திகளின் அடிப்படையில்
நவம்பர் 19,2009 அன்று ‘சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான
காலக் கட்டம்’, ‘இறுதிப்போர்’, ‘குறிப்பாக இறுதி மாதங்களில் (ஏப்ரல்,
மே-2009) நடைபெற்றவை’
போன்றவைகளை விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி, அதற்கான பணிகளை தொடங்கிய
தீர்ப்பாயமானது, 2010ஆம் ஆண்டு சனவரி 14 - 16 வரை தனது முதல் அமர்வை
(விசாரணையை) அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடத்தியது. அந்த
அமர்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிகளுக்கு எதிராக 41 பக்க
அறிக்கையை சமர்பித்துள்ளனர் என்று தொடங்குகிறது முதல் குற்றச்சாட்டு.
டப்ளின் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்;
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதோ அதற்கு 3 மாதங்களுக்கு பிறகு, மே 18,
2010 அன்று. நாம் தமிழர் கட்சி கட்சி தொடங்கும் முன்னரே டப்ளினில் கட்சி
சார்பாக
புலிகளுக்கு எதிரான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறுவது என்ன வகையான
குற்றச்சாட்டு?. அவர் குறிப்பிடும் அந்த 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது
மனித உரிமை ஆர்வலர் பால் நியூமேன். அங்கே அவர் அவ்வறிக்கையை
சமர்ப்பிக்கும்போது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்றே தொடங்கப்படவில்லை
அதற்குமுன் அமைப்பாக இருந்த நாம் தமிழர் இயக்கத்திலும் பால் நியூமேன்
இல்லை. ‘மே 17’ இயக்கத்தோடுதான் அப்பொழுது பால் நியூமேன் இணைந்து
செயல்பட்டார். அவர் அறிக்கை சமர்ப்பித்துவிட்டு இந்தியா வந்த பிறகு, மே
17 இயக்கம்
இதுதொடர்பாக நடத்திய டப்ளின் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த 'இலங்கை அரசின்
போர்க்குற்றங்களின் விசாரணை மற்றும் இந்து-ராமின் பொய் மோசடி ஊடகப்
பணிகள்' என்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு, தான் சமர்ப்பித்த
அறிக்கையில் உள்ளவற்றைத் பேசியிருக்கிறார். (ஆதாரம் -
https://goo.gl/wj2DeI ). இவர்கள் கூற்றின்படி, பால்நியூமென்
சமர்ப்பித்த அறிக்கையில் தவறு இருக்கிறதென்றே வைத்துக்கொண்டாலும் அதற்கு
விளக்கம் தர வேண்டியது பால் நியூமேன் அவர்களும் மே 17 இயக்கமும்தான்.
பால் நியூமேனாவது தான் யார்,
இதுவரை தான் செய்த வேலைகள்,
மனித உரிமை செயல்பாட்டாளராக சமர்பித்த தனது அறிக்கையை அறிக்கை குறித்து
பல முறை விளக்கமளித்திருக்கிறார் (ஆதாரம் -
https://www.youtube.com/watch?
இன்றுவரை அதுகுறித்து அவர்கள் வாய்திறக்கவில்லை. நடந்தவைகள் இவ்வாறு
இருக்கையில் அதற்கு எந்தவகையிலும் தொடர்பே
இல்லாத நாம் தமிழர் கட்சியை அந்த அறிக்கையோடு தொடர்புபடுத்துவது
எவ்வகையில் ஏற்க இயலும்? என்பதை உங்களது முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள் :
மேற்கூறிய பொய்யான துரோகக் குற்றச்சாட்டு எனும் புரட்டுரைக்கு
வலுசேர்ப்பதற்காக இரண்டு இணைப்புகளை கொடுத்திருக்கிறார்.
முதல் இணைப்பு,
‘மாணவர் அமைப்பு சீமானுக்கு தடை’ என்ற விகடன் செய்தி.
2010ல் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பானதுதான் இதுவும். 2016ஆம் ஆண்டு ஜூன்
மாதம் பால் நியூமேன் கலந்துகொள்ளும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு
எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு என்ற பெயரில் கடிதம் ஒன்று
முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. எதையுமே புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக
அணுகுகிற சில அதிமேதாவிகளும், ‘மாணவர் அமைப்பு’ என்ற பெயரில் உலவும் சில
நிரந்தர மாணவர்களும் வழமை போல இதனையும் தனது அறிவுக்கண்(!) கொண்டு
அணுகியதால் வந்ததே இவ்வறிவிப்பு. அது தொடர்பான செய்திதான் விகடனில்
வந்தது. ஆனால், அதற்கு மாணவர்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லாததால்
அப்புத்தக வெளியீட்டுவில் எவ்விதப் போராட்டமும் நடைபெறவில்லை. இதனால்,
புத்தக வெளியீட்டு விழாவானது எவ்விதச் சலசலப்புக்கும் இடங்கொடாது மிக
அமைதியான முறையில்
நடைபெற்றது. காசி ஆனந்தன், வெள்ளையன், வ.கௌதமன் ஆகியோர் மாணவர் அமைப்பின்
எதிர்ப்பால்தான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்றும்
எழுதியிருக்கிறார். ஆனால், தாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு
இதுதான் காரணம் என அவர்கள் எந்தவிடத்திலும் அறிவிக்கவில்லை. அதன்பிறகு,
பல மேடைகளில் அவர்கள் மூவரும் சீமானோடு பங்கேற்றனர். அங்கும் இதைப்பற்றி
அவர்கள் பேசவில்லை.
இன்னொரு ஆதாரமாக, தேவர் சமுதாயத்து மக்கள் சீமானுக்கு எதிராக
குற்றச்சாட்டு வைத்தார்கள் என்று ஒரு முகநூல் பக்க இணைப்பையும்
கொடுத்திருக்கிறார்கள். அதில் சென்று பார்த்தால் அந்த கட்டுரையில் என்ன
எழுதப்பட்டிருக்கிறதோ அது அப்படியே வார்த்தை மாறாமல்
பதிவிடப்பட்டிருக்கிறது. தேவர் பிலிம்ஸ் என்ற URL கொண்ட அந்த பக்கத்தில்
ஆங்கிலப் படங்களை பதிவேற்றியிருக்கிறார்கள். அந்த பக்கத்திற்கும் (ஆதாரம்
- https://www.facebook.com/
மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொன்றும்
தேவர் சமூதாய மக்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் அல்ல! மேலும்,
அந்தப்பக்கமானது
விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் நடத்துகிற பக்கமாகும். அதற்குச் சான்றாக,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான மிகக் கடுமையான அவதூறு பரப்புரைகள்
அப்பக்கத்தில் இருப்பதைக் காணலாம். ( ஆதாரம் -
https://goo.gl/7pvb71 ). இந்தப் பக்கத்தை வைத்திருப்பவரே புலிகள்
எதிர்ப்பாளர் எனும்போது, சீமான் புலிகளுக்கு துரோகம் செய்கிறாரென்று
பொங்க வேண்டிய அவசியமென்ன? சீமான் புலிகளுக்குத் துரோகம் செய்தாரென்றால்,
புலிகளின் எதிர்ப்பை மேற்கொள்ளும் அந்தப் பக்கத்தினர் சீமானை ஆதரிக்கவே
செய்திருக்க வேண்டும். ஆனால்,
அதனைவிடுத்து அவர்கள் புலிகளையும் விமர்சிக்கிறார்கள். புலிகளுக்குத்
துரோகம் செய்துவிட்டதாக சீமானையும் விமர்சிக்கிறார்கள். இதிலிருந்தே
அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். ஒரு சாதியை அடையாளமாகக்
கொண்டு போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் தனது கட்டுரையில் உள்ளதை
அப்படியே போட்டுவிட்டு அதையே ஆதாரமாக கொடுப்பதில் ‘உண்மைத்தமிழனின்’
உண்மை முகத்தை அறியலாம்.
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கை சென்றது படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கதானாம்.
அதனை நடிகர் ராஜ்கிரணே விகடன் பேட்டியில் கூறிவிட்டார் என
அங்கலாய்க்கிறார் கட்டுரையாளர். இந்தக் பொய்யுரையின் தொடக்கத்தில்
ராஜ்கிரணைப் பற்றி ஒரு முன்னுரை வேறு! அவர் ஒழுக்கமானவர்; திரையுலகில்
எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்; சீமான் மேல் அவருக்கு எந்த
மனக்கசப்புமில்லை என்று. எதற்காக இப்போது ராஜ்கிரண் அந்தாதி
வாசிக்கிறார்கள் எனப் பார்த்தால் ராஜ்கிரண் மேல் நன்மதிப்பு வரச்செய்து,
அவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையை உருவாக்கவே இந்த
யுக்தி. ராஜ்கிரண் தன் பணத்தையும், சொத்தையும் எப்படி இழந்தார்? எந்த
வாய்ப்புமில்லாமல் போனதற்கு யாரோடு அவர் மோதினார்? அவரது தனிமனித
ஒழுக்கம் என்ன? என்பதெல்லாம் திரைத்துறையினருக்கு நன்றாகத் தெரியும்.
அதனை நாமும் பேசினால் 'பொய்த்தமிழனுக்கும்’
நமக்கு வேறுபாடு இல்லாது போய்விடும். அறம் கருதி அதனை தவிர்க்கிறேன்.
இப்போது செய்திக்குள் வருவோம்! சீமான் படம் எடுப்பதற்கு பயிற்சி
அளிக்கத்தான் சென்றாரென்றால் தமிழகத்தில் எத்தனையோ அனுபவம் வாய்ந்த
முதும்பெரும் இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறபோது அவர்களையெல்லாம்
அழைக்காமல் சீமானை ஏன் அழைக்கவேண்டும்? படமெடுக்கிற பயிற்சிதான்
தேவையென்றால், ஏற்கனவே அங்கு சென்ற பாரதிராஜா, மகேந்திரனிடமே பயிற்சி
அளிக்கச் சொல்லியிருப்பார்களே?
பாரதிராஜாவையும்,
மகேந்திரனையும்விடவா சிறந்த பயிற்சியை சீமான் கொடுத்துவிடப் போகிறார்?
என்ற கேள்விகளுக்குப் பதில் வராது. போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்
சமயத்தில் தமிழகத்திலிருந்து ஒருவரை அழைத்து புலிகள் திரைப்படப்பயிற்சி
எடுத்துக்கொண்டிருப்பார்கள்? என்ன ஒரு அதிமேதாவித்தனம்! அதுசரி! புலிகள்
சீமானை படமெடுக்கிற பயிற்சி அளிக்கத்தான் அழைத்தார்கள் என ராஜ்கிரணுக்கு
எப்படி தெரியும்? எதனை வைத்துக் கண்டறிந்தார்? புலிகள் ராஜ்கிரணிடம்
சொன்னார்களா? எதனை அடிப்படையாக வைத்து அதனைக் கூறுகிறார்? ஈழத்திற்கானப்
போராட்டங்களை முன்னெடுத்த தமிழகத் தலைவர்கள்கூட இக்கருத்தை கூறவில்லையே,
அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு எப்படி தெரிந்தது?
விகடன் பேட்டியில் இதனைக் கூறிய ராஜ்கிரண் அதன்பிறகு அதுகுறித்து வேறு
ஏதும் பேசவில்லையே ஏன்? ஈழப்போராட்டத்தோடு நேரடி தொடர்பு கொண்டிருந்த
தலைவர்களில் ஒருவர்கூட ராஜ்கிரணின் கருத்தை ஏற்க வில்லையே ஏன்?
இங்குள்ளவர்களை விட்டுவிடுவோம்! புலிகளோடு நெருங்கிய
தொடர்பிலிருந்தவர்கள்,
இயக்கத்திலிருந்தவர்கள், ஈழத் தமிழர்கள் போன்றோர் புலம்பெயர்ந்து
வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் யாரும் ராஜ்கிரணின் கருத்தை
வழிமொழியவில்லையே ஏன்? அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு
தெரிந்துவிட்டதா? இது எல்லாவற்றையும்கூட விட்டுவிடுவோம்.
முதலில் ராஜ்கிரணுக்கும்,
ஈழப்போராட்டத்திற்குமான தொடர்பு என்ன? திடீரென்று தன்னைப் புலிகளின்
பிரதிநிதி போல சித்தரித்துக்கொண்டு, சீமானின் பயணத்தைப் பற்றி கருத்துகளை
உதிர்த்துவிட்டு அமைதியாகிவிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழக
அரசியலில் தவிர்க்க முடியா அரசியல் பெரும்சக்தியாக உருவெடுத்துவரும்
சீமானின் வளர்ச்சி சிலரது கண்ணை உறுத்துகிறது. அந்த உறுத்தல்தான்
ராஜ்கிரணை இப்படி பேச வைத்திருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கோ அரசியலுக்கோ
சம்பந்தமே இல்லாத ஒருவர் ஆதாரமாக வைத்துக்கொண்டு வாதிடும்போதே நாம் இவரது
அரசியல் அறிவை(!) தெரிந்து கொள்ளலாம். இவருக்கும் ராஜ்கிரணுக்குக்கும்
சேர்த்து நேரடி சவாலாக கூட இந்த கட்டுரை வாயிலாக வைக்கிறேன்.
ஈழப்போராட்டத்தில் எந்த அரசியலையும் சாராத நடுநிலையாக இருக்கும் யாராவது
ராஜ்கிரண் சொன்னது உண்மைதான் என்று சொல்ல செய்தால் இந்த கட்டுரையை நான்
அழித்துவிடுகிறேன்.
அடுத்தது போரின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் களத்திலிருந்து எல்லாளன் பட
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களிடம் சூசை அண்ணன், ‘சீமானை முன்னெடுக்கச்
சொல்லுங்கள்’ என்று பேசியதை (ஆதாரம் -
https://www.youtube.com/watch?
என்கிறார். அதை தயாரித்து யூடியூபில் வெளியிட்டது சீமான்தானாம். புலிகள்
அதிகாரப்பூர்வமாக வானொலியில் தான் வெளியிடுவார்களாம். அதனால், இது
போலியாம். அங்கே இறுதிக்கட்ட சண்டை நடந்துகொண்டிருக்கிறது மக்கள்
கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்
எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதைச் சொல்லி சீமானை முன்னெடுக்கச்
சொல்லுங்கள் என்கிறார். இதை அந்த நேரத்தில் எந்த வானொலியில் சொல்ல
முடியும்?. இந்த குரலொலியை வெளியிட்டது சந்தோஷ்தான். இன்றும் சூசை அண்ணன்
பேசிய குரல் பதிவை வெளியிட்ட சந்தோஷ் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான
பெரிய ஊடகமொன்றில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இது பொய்
என்றால், அவர் எப்பொழுதோ மறுத்திருப்பார். அந்த குரல் சூசை அண்ணனின்
குரல் தான் என்பதை அவரின் மற்ற காணொளிகளை (ஆதாரம் -
https://www.youtube.com/watch?
அறிந்துகொள்ளலாம்.
சீமானும் , சிங்களர்களும்:
சீமான் பல காலமாக சிங்களர்களோடு நட்போடு
இருக்கிறாராம். அதனால்தான், தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்தாராம்.
சிங்களரோடு நட்போடு இருக்கிறார் என்று சொல்வதற்கு எதுவுமே கிடைக்காததால்
விரக்தியுற்ற கட்டுரையாளர் இறுதியாக பூஜாவை வைத்து படம் இயக்கியதைவிட
வேறு காரணம் வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சரி!
இவர்கள் கூற்றுப்படி, சிங்களர்களுடன் இருந்த தொடர்பின் விளைவாகவே பூஜாவை
வைத்து சீமான் படமெடுத்தார் என்றே வைத்துக் கொள்வோம். பூஜாவை வைத்து
‘தம்பி’ படமெடுக்கப்பட்டது
2004-2005 காலக்கட்டத்தில். அதன்பிறகான ஆண்டுகளில்தான், ஈழத்திற்குச்
சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்தார் சீமான். ஒருவேளை சிங்களர்களோடு
சீமானுக்குத் தொடர்பிருந்தால் அவரை எப்படி தலைவர் பிரபாகரன் ஈழத்திற்கு
அழைத்திருப்பார்? என்பதைக்கூட யோசிக்க வேண்டாமா?
போறபோக்கில் எதுவாவது எழுதி விடுவதா?
சிங்களர்களோடு நட்பாய் இருந்தாலும் என்ன தவறு? சிங்கள மக்களை தலைவர்
பிரபாகரனே எதிரியாகக் கருதவில்லையே, ‘எனது போரானது சிங்கள இராணுவத்திற்கு
எதிரானதுதானே ஒழிய, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல!’ என பல சமயத்தில்
கூறியவர்தானே தலைவர் பிரபாகரன். சிங்கள இனவெறியர்கள் தான் தமிழர்களின்
எதிரியே ஒழிய, அப்பாவி சிங்கள மக்கள் அல்ல! என்பதுதானே புலிகளின்
நிலைப்பாடும். அதனால்தானே, தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பு படையில்கூட
சிங்களர்கள் இருந்தார்கள். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்
அவர்களின் துணைவியார்கூட சிங்களர் தானே, அதற்காக அவரையும்
எதிரிப்பட்டியலில் இணைத்துவிட முடியுமா என்ன? அதனால், சீமான் பூஜாவை
வைத்து படமெடுத்தார்; அதனால், அவருக்குச் சிங்களர்களோடு தொடர்பிருக்கிறது
என்பதெல்லாம் உப்புசப்பில்லாத வாதம்.
அடுத்து கத்தி பட விவகாரத்தில் ராஜபக்சே உறவினருக்கு ஆதரவாக சீமான்
செயல்பட்டாராம். லைகா நிறுவனம் எடுத்த ‘கத்தி’ படத்திற்கு எல்லா
அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தபோது சீமான் மட்டும் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லையாம். தான் ஏன் கத்தி படத்தை எதிர்க்கவில்லை என்பதை
விளக்கிய சீமான், ‘ஒரு தேசிய இனப்போராட்டத்தை ஒரு திரைப்படச்
சிக்கலுக்கிடையே குறுக்காதீர்கள்’ என்றும், ‘கத்தி படம் எதிர்க்க வேண்டிய
படமல்ல’ என்றும், இந்த எதிர்ப்பில் உள்நோக்கம் இருக்கிறதென்றும் சீமான்
பேட்டி கொடுத்தார் (ஆதாரம் - https://youtu.be/o3oWumq7o3I ). அவர் அந்த
பேட்டியில் என்ன சொன்னாரோ அதுதான் கடைசியில் நடந்தது. அதன்பிறகு, லைகா
நிறுவனம் தயாரித்த பல படங்கள் வெளிவந்தபோதும் எந்த படத்தையும் தமிழ்
உணர்வாளர்கள் என்று சொல்லப்படுகிற எந்த அமைப்பும் எதிர்க்கவில்லையே ஏன்?
மக்களின் உரிமைப்போராட்டங்களுக்கு ஒன்று திரளாதவர்கள் திரைப்படத்தை
எதிர்க்க ஒன்று திரள வேண்டிய அவசியமென்ன? அந்தத் திரைப்பட எதிர்ப்பு
ஒன்றுதான் 63 அமைப்புகளின் தலையாயப் பிரச்சினையா? அதற்குப் பிறகு அவர்கள்
ஒரு போராட்டமும் செய்யவில்லையே ஏன்? சரி! போராட மாட்டேன் என்று
வெளிப்படையாக சொன்ன சீமானுக்கு சிங்களர்களோடு தொடர்பு இருக்கிறது
என்றால், போராடுவோம் என்று சொல்லி கூடி கடைசியில் போராட்டத்தை கைவிட்ட 63
இயக்கங்களுக்கு யாரோடு தொடர்பு?
உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசை தடுத்தது நாம் தமிழர்
கட்சி என்றும், அதற்கு பணம் வந்து குவிந்தது என்றும் அடிப்படை அறிவே
இல்லாது மனம்போன போக்கில் உதிர்த்திருக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ
அரசு அமைக்கப்பட்டு அதற்கு பிரதமராக உருத்திரகுமாரனும், பல்வேறு
அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு பலர் அதில் பொறுப்பில் இருக்கிறார்கள்.
இது கூட தெரியாமல் நாடு கடந்த தமிழீழ அரசு அமையவில்லை என்கிறார்
அக்கட்டுரையாளர். அந்த அரசில் இருக்கும் யாரும் இதுவரை சீமானுக்கு எதிராக
ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. ஆனால், அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்
இவரிடம் வந்து காதில் ஓதியதைப் போலவே இதனை எழுதியிருக்கிறார். சீமானுக்கு
பணம் வந்தது என்று சொல்கிற ஒருவர்கூட இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிட
முடியவில்லை என்பதிலிருந்தே இந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை
அறிந்து கொள்ளலாம்.
சீமானும் , தமிழ்நாடும் :
அடுத்து சீமானின் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருகிறார். இயற்கை வளங்கள்
சுரண்டப்படுவதை பற்றிப்
பேசினாலும், தாது மணல் வைகுண்டராஜனிடமும்,
கிரானைட் பி.ஆர்.பி.யிடமும் சீமான் நெருக்கமாக இருக்கிறாராம். சீமானின்
திருமணம் முடிந்ததும் வைகுண்டராஜன் கறிவிருந்து கொடுத்தாராம். அதனால்
வைகுண்டராஜனின் பினாமியாம் சீமான். அதற்கு ஆதாரமாக வினவு கட்டுரையை
கொடுத்துள்ளார் (http://www.vinavu.com/2013/
) . அந்தக் கட்டுரையில், தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக
இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு
விருந்து முடித்துவிட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா
ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜனின் மகன் திருமணத்திற்கு என்று இருக்கிறது.
திருமணம் முடிந்ததும் எல்லோரும் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.
ஆனால், சீமான் சென்றதோ இடிந்தகரை போராட்டத்திற்குத்தான். அன்று
இடிந்தகரை மக்கள் தான் கறி விருந்து வைத்தனர். அதை அப்படியே மாற்றி
வைகுண்டராஜன் கறிவிருந்து வைத்ததாக எழுதியிருக்கிறார்கள். யார்
விசாரித்து பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தனது விருப்பத்திற்கு
உண்மைக்குப் புறம்பானவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்.
அடுத்து, வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் சீமானுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். அது வைகுண்டராசனின் பினாமி சீமான்
என்பதை உறுதிப்படுத்துகிறதாம். நியூஸ் 7 தொலைக்காட்சியில் தேர்தல்
நேரத்தில் கருத்துக்கணிப்பு விவாதங்களில் நாம் தமிழர் கட்சி பெயரைக்கூட
குறிப்பிடாமல் தவிர்த்தார்கள். கூட்டணியில் நின்ற அனைத்துக்கட்சிகளை
தனியாக குறிப்பிட்டுவிட்டு தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை
மற்றவைக்குக் கீழ் காட்டினர். நாம் தமிழர் கட்சியைக் குறிப்பிட வேண்டும்
என்று கோரிக்கை வலுத்தபோது, ‘உங்கள் பலத்தை நிரூபியுங்கள் பின்னர்
நாங்கள் குறிப்பிடுகிறோம்’ என்று விவாதத்திலேயே பதில் அளித்தார்கள்.
அப்படிப்பட்ட தொலைக்காட்சி சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது
உச்சகட்ட முரண். அப்படியும் நம்பிக்கையில்லை என்றால் நியூஸ் 7
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்களின் யூ டியூப் தளத்தில் (ஆதாரம் -
https://www.youtube.com/user/
பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். அதில் சென்று சீமான் தொடர்பான
செய்திகள், பேட்டிகள் எத்தனை இருக்கிறது? மற்றவர்களுடையது எத்தனை
இருக்கிறது? அந்தத் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளில் நாம் தமிழர்
கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனை நாட்கள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று
பார்த்து உண்மைநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக