புதன், 20 செப்டம்பர், 2017

பாண்டியர் உட்பூசல் சிங்களர் சோழர் தலையிடல் சோழன் பெருவெற்றி

சோழனுடன் ஒரு சரித்திர பயணம் - Cholanudan oru sarithira payanam
சோழனிடம் உதவி நாடிய பாண்டியன் :
பரம்பரை பகை காலப்போக்கில் சில மாறுதல்களை அடைந்தது, குலோத்துங்கன்
காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், மேலும் உள்நாட்டு குழப்பங்கள் இவற்றில்
இருந்து மீள பாண்டியன் சோழனை நாடும் நிலைமையும் வந்து போனது. பிறகு
நன்றியை மறந்த காரணத்தால் நட்பில் விரிசல் ஏற்பட, பாண்டியனுக்கு சரியான
பாடம் கற்பித்த இரண்டாம் இராசாதிராசன்.
இரண்டாம் இராசராசனுக்குப் பின்பு இரண்டாம் இராசாதிராசன் சோழநாட்டின்
அரியணை ஏறினான். இவன் இரண்டாம் இராசராசனின் மகன் அல்லன். விக்கிரம
சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் ஆவான்.
இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியன் என்பவனுக்கும்,
குலசேகர பாண்டியன் என்பவனுக்கும் இடையே அரசுரிமை பற்றி மோதல் ஏற்பட்டது.
இதில் பாராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு என்பவனின் படை
உதவியை நாடினான். ஆனால் இலங்கை மன்னனின் படை வருவதற்குள், குலசேகர
பாண்டியன் பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவியையும் கொன்றுவிட்டு,
மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். பராக்கிரம பாண்டியனின் மகன்
வீரபாண்டியன் மட்டும் தப்பி ஓடி ஒரு மறைவிடத்தில் ஒளிந்துகொண்டான்
. இந்நிலையில் இலங்கை மன்னன் அனுப்பிய சிங்களப் படையினர் மதுரையை
அடைந்தனர். சிங்களப் படையினர் குலசேகரப் பாண்டியன் படையுடன் போரிட்டு
வெற்றி பெற்று, பராக்கிரம பாண்டியனுடைய மகனாகிய வீரபாண்டியனை அரியணை
ஏற்றினர்.
போரில் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன் இராசாதிராசனிடம் படைத்துணை
வேண்டினான். இராசாதிராசன் அனுப்பிய சோழப் படை வீரர்கள், பாண்டிய நாட்டில்
வீரபாண்டியனுக்கு ஆதரவாக இருந்த இலங்கை மன்னனின் படைவீரர்களோடு போர்
செய்து, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். பின்பு வீரபாண்டியனை
ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு, குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினர்.
அத்தோடு அமையாமல் சோழரின் படை வீரர்கள் இலங்கையின் மேலும் படையெடுத்துச்
சென்றனர். இந்நிலையில் பராக்கிரமபாகு குலசேகர பாண்டியனைப் பாண்டிய
மன்னனாக ஏற்றுப் பரிசில் அனுப்பினான். குலசேகர பாண்டியனும் சோழர்
தனக்குச் செய்த நன்றியை மறந்து இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவுடன்
நட்பும், மணவினைத் தொடர்பும் கொண்டு சோழர்களையே எதிர்க்கலானான். குலசேகர
பாண்டியன் தனக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டக்
கருதிய இராசாதிராசன், ஒரு படையை மதுரைக்கு அனுப்பிக் குலசேகர பாண்டியனை
அரியணையிலிருந்த
ு இறக்கி, வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய நாட்டு மன்னனாக்கினான்.
10 மணிநேரம் · பொது
22
Rajmohan Rajendran
கன்னி மாடம் கதையும் இதுவே....
குலசேகரன் மீது படையெடுத்து வீரபாண்டியனை அரசர் ஆக்கியதை மட்டும்
சாண்டில்யன் சொல்லவில்லை.... புது தகவல்....நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக