ஒரு காலத்தில் கெம்பே கவுடா ஒரு கன்னடர் என்று கருதிய கன்னடர்கள் அவரைத்
தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். அன்றைய வெங்காலூரை அதாவது இன்றைய
பெங்களூரை வடிவமைத்தவர் அவரே! ஆனால், அவர் ஒரு தமிழர் என்று
அறிந்தமாத்திரத்
திலேயே கன்னடர்கள் அவரைத் தொலைவில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இன்றைய
விதானசவுதா உட்பட பல கட்டடங்களையும் சாலைகளையும் இருப்புப்பாதைகளையும்
குருதியும் வியர்வையும் சிந்தி கட்டியெழுப்பியவர்கள் தமிழர்களே! ஆனால்
அவர்களை யாரும் கன்னடர்களாகக் கருதி காப்பாற்றவில்லை. அவர்களுக்கெல்லாம்
பொருந்தாத ஒரு ஞாயம் நமக்கு மட்டும் ஏன் கற்பிக்கப்படுகிறது என்று எனக்கு
விளங்கவில்லை. வடநாட்டில் பிறந்த காந்திக்கும், நேருக்கும்,
அம்பேத்கருக்கும் தமிழ்நாட்டில் ஊரெல்லாம் சிலைகள்! வ.உ.சி.க்கு
வடநாட்டில் சிறப்பு உண்டா? அயோத்திதாசப் பண்டிதரையும், ரெட்டைமலை
சீனிவாசனாரையும் வடநாட்டில் தெரியுமா? இது அடிமைகள் நாடு! ஆண்டைகள்
வைத்ததுதானே வரம்பும் சட்டமும்!
-அரிமாவளவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக