aathi tamil<aathi1956@gmail.com> | 14 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:11 |
பெறுநர்: aathi1956@gmail.com | |
Dharani Dharan Pugazh
தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தனரா?? = தை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக விடுதலைப்புலிகள் கொண்டாடினர் என்ற தகவல் இருக்கிறது.. அது உண்மையா என்று தேடியதில் கிடைத்த தகவல்கள்.... •புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் போர் நிறுத்த அறிவிப்பு வரும் பண்டிகையாக தமிழ் - சிங்கள புத்தாண்டு உள்ளது... அது சித்திரை ஒன்றே... •2001, 2002 ஆம் ஆண்டுகளில் டிசம்பர் 24ஆம் தேதி, சமாதான கதவுகளை திறப்பதாக புலிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர்... அந்த அறிவிப்பில் உள்ள குறிப்பானது, 'நத்தார்(கிருஸ் துமஸ்), ஆங்கில புத்தாண்டு, பொங்கல் முதலியவற்றை முன்னிட்டு சமாதான நகர்வுக்காக ஒரு மாத காலம் போர் நிறுத்தம்.' என்பதாய் இருக்கிறது.. ஆக தை 1ஆம் தேதியை புலிகள் பொங்கல் விழாவாகவே குறிப்பிடுகின்றனர்.. தமிழர் புத்தாண்டு என்றில்லை.. •சமாதான காலங்களில் பொங்கல் நாட்களில் சிறப்பாக நடைப்பெற்ற போராளிகளின் பொங்கல் விழா நிகழ்வுகளிலும் தமிழர் புத்தாண்டு என்று குறிப்பிடபட்டதாக தகவல்கள் இல்லை.. •2008 பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழீழ வைப்பகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டகளும் பொங்கல் விழாவை தமிழ் புத்தாண்டு என குறிப்பிடவில்லை… •இதே 2008ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகங்களில் வந்த திட்டங்களை தமிழ் புத்தாண்டு திட்டம் என ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது... அதன் பின்னோட்டங்களிலேயே தமிழீழத்தவர் மறுப்பு தெரிவித்துள்ளர்.. மேலும், புலிகள் எங்கும் தை1 ஆம் தேதியை புத்தாண்டு என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்... அதில் ஒருவர் இது புலிகளை இந்துக்களுக்கு எதிராவனர்களாக சித்தரிக்கும் சதி எனவும் பொங்கியுள்ளார்.... • 2008ஆம் ஆண்டு, புலம்பெயர்ந்தவர ்களின் வெளிநாட்டு தமிழர் பேரவை ஒன்று ஈழத்தமிழர் தை 1 புத்தாண்டாக கொண்டாட கோரிக்கை வைக்கிறது... மேலும் அந்த கோரிக்கை அறிக்கையில் புலிகள் புத்தாண்டை மாற்றியதாக இல்லை... தமிழக அரசு புத்தாண்டு தினத்தை மாற்றியதையே எடுத்துக்காட்டாக கூறியுள்ளது... ஒருவேளை புலிகள் புத்தாண்டு தினத்தை மாற்றி இருந்தால் ஈழத்தவர்கள் பெரும்பாலோனோர் அதையே பின்பற்றி இருப்பர்... ஆனால் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை... - ஆக இதுவரை தேடி கிடைத்த தகவல்களை பார்த்தால் புலிகள் தமிழ் புத்தாண்டை தை 1ஆம் தேதிக்கு மாற்றியதாக சான்றுகள் இல்லை... புலிகள் புத்தாண்டு தினத்தை மாற்றியதாகவும் புலிகளின் கலை, இலக்கியம், & பண்பாட்டு துறை தை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடியதாகவும் வரும் தகவல்களுக்கு எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.. ஒருவேளை ஈழத்தில் தை ஒன்றுக்கு புத்தாண்டு மாற்றப்பட்டதாக ஆதாரபூர்வ தகவல்கள் இருந்தால் அதை தெரிவிக்கவும்... |
http://www.tamilmantram.com/vb/showthread.php/19030-தரணி-ஆண்ட-தமிழர்க்கு-தை-முதல்-நாளே-தமிழ்ப்-புத்தாண்டு-சுவிஸ்-தமிழார்-பேரவை
பதிலளிநீக்கு