வெள்ளி, 14 ஜூலை, 2017

யாழ் இளைஞர் மலையகம் இல் பயணம் போராட்டம் சிவகுமாரன்

aathi tamil aathi1956@gmail.com

16/5/14
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/notes/aathiprakash-wehavetosavetamilpeople/ஈழ-இளைஞர்கள்-மலையகத்தில்/337989816304678/?refid=21
 1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள்
மத்தியில் ஏற்பட்ட அரசியல்
விழிப்புணர்வையும், அவர்கள் மலையக
மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும்
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல
வெறியோ இன்றி நேர்மையாக இளைஞர்
பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள்
மலையகத்தின் பல
பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம்
மேற்கொண்டனர்.
இவர்களின் ஒரே நோக்கம் மலையக
மக்களின் வாழ்நிலையைப்
புரிந்து கொள்வதுதான்.
இவ்வாறு பயணம் மேற்கொண்ட
இளைஞர்களில் ஒருவரே காலம் சென்ற
சிவகுமாரன் ஆவார்.
மலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும்
கலவர காலத்தில் அவர்கள் அடைந்த
பாதிப்புகளையும் அரசின்
அடக்குமுறை விளைவுகளையும் நேரில்
பார்த்த சிவகுமாரன் ""தமிழர்களின்
பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத்
தவிர வேறு வழியில்லை.
ஆயுதப் போராட்டமே அதற்குத் தீர்வு''
என்ற கருத்தைப் பெற்றார்.
அதையே இளைஞர் பேரவைமுன் அவர்
வைத்தார். 1973 நவம்பரில் மலையகப்
பகுதியில் அம் மக்கள் வெற்றிகரமாக
நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்
இவர்களும் கலந்துகொண்டார்கள்.
இதை அடுத்து 1976-இல் மலையக
மக்களின் போராட்டத்தில்
சிவனு லட்சுமணன் மீது நடத்திய
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக்
கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்
நடத்திய வேலைநிறுத்தம்,
நிதி சேகரிப்பு இயக்கம் குறிப்பிட்டாக
வேண்டிய இளைஞர் பேரவையின்
ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.
இளைஞர் பேரவையின் இந்த
நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக
இருந்தவர்கள் இந்தப்
பத்து இளைஞர்களும்தான்.

ஈழம் தமிழகம் ஒற்றுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக