|
12/7/14
| |||
பருவநிலையை கணித்த தமிழர்கள் :-
கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த
கிராம மக்கள் காற்று வீசும் திசை,
காற்றின் ஈரப்பதம், நிலவைச்
சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை,
பூச்சி ஆகியவற்றின் இயக்கம்
மின்னலின் தன்மை போன்ற 12
காரணிகளை ஆய்வுச்
செய்து மழை வருவது குறித்து
முன்னறிந்து கூறுகின்றனர்.
கிழக்கில்
புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல்
பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில்
மழைப் பெய்யும்.
தென்மேற்கு மற்றும் வடமேற்கில்
மின்னல் மின்னினால்
இரவு நேரத்தில் மழைப் பெய்யும்.
நிலவைச் சுற்றி வளையமிருந்தால்
சிறு தூரல் மட்டுமே விழும்
சிட்டுக்குருவி கூட்டமாக
தாழப்பறந்தால்
அன்றைக்கே மழை வரும்,
கிணற்றுத்
தவளை வழக்கத்தை விட அதிகமாக
ஒலி எழுப்பினால்
அல்லது நண்டு வளையை பெரிதாக
குடைந்தால் இரண்டு நாளில்
மழைவரும் என்பன போன்ற,
இவர்களது பருவ
நிலை அறிவு இன்றைய நவீன
கருவிகள்
கண்டுப்பிடித்து அறிவிக்கும்
அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக
இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ்
குறிப்பிடுகிறார்.
‘ஆடிமாதம் காற்றடித்தால்
ஐப்பசியில் மழை வரும்”
என்பது மக்கள் மொழி.
ஜுலை,
ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக
வீசினால் அட்டோபர், நவம்பரில்
பருவ மழை சரியான
அளவு பொழியும் என்று,
வானியல்
ஆராய்ச்சியாளர்கள் கருவிகள்
கொண்டு கண்டறிந்து கூறியதைத்
தான் மக்கள் கூறுகிறார்கள்.
இந்த
ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கும்
மேக மண்டல மாற்றங்களைத் தான்
மக்களும் அடிப்படையாக
கொண்டுள்ளனர்
என்று ரெங்கலட்சுமி வியப்புடன்
கூறுகிறார்.
பொன்னேறு பூட்டும் விழா என்ற
பெயரில் முதல் உழவு நடத்துகிற
காலத்தில் அச்சமூகத்தின்
மூப்பர்கள் இளையோர்களிடம்
கதையாகவும், பாட்டாகவும்,
பழமொழியாகவும்
இதை கற்றுத்தருகிறார்கள்
என்று ரெங்கலட்சமி கண்டு
கூறுகிறார்.
//தோழர் கி.வெங்கட்ராமன் //
கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த
கிராம மக்கள் காற்று வீசும் திசை,
காற்றின் ஈரப்பதம், நிலவைச்
சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை,
பூச்சி ஆகியவற்றின் இயக்கம்
மின்னலின் தன்மை போன்ற 12
காரணிகளை ஆய்வுச்
செய்து மழை வருவது குறித்து
முன்னறிந்து கூறுகின்றனர்.
கிழக்கில்
புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல்
பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில்
மழைப் பெய்யும்.
தென்மேற்கு மற்றும் வடமேற்கில்
மின்னல் மின்னினால்
இரவு நேரத்தில் மழைப் பெய்யும்.
நிலவைச் சுற்றி வளையமிருந்தால்
சிறு தூரல் மட்டுமே விழும்
சிட்டுக்குருவி கூட்டமாக
தாழப்பறந்தால்
அன்றைக்கே மழை வரும்,
கிணற்றுத்
தவளை வழக்கத்தை விட அதிகமாக
ஒலி எழுப்பினால்
அல்லது நண்டு வளையை பெரிதாக
குடைந்தால் இரண்டு நாளில்
மழைவரும் என்பன போன்ற,
இவர்களது பருவ
நிலை அறிவு இன்றைய நவீன
கருவிகள்
கண்டுப்பிடித்து அறிவிக்கும்
அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக
இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ்
குறிப்பிடுகிறார்.
‘ஆடிமாதம் காற்றடித்தால்
ஐப்பசியில் மழை வரும்”
என்பது மக்கள் மொழி.
ஜுலை,
ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக
வீசினால் அட்டோபர், நவம்பரில்
பருவ மழை சரியான
அளவு பொழியும் என்று,
வானியல்
ஆராய்ச்சியாளர்கள் கருவிகள்
கொண்டு கண்டறிந்து கூறியதைத்
தான் மக்கள் கூறுகிறார்கள்.
இந்த
ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கும்
மேக மண்டல மாற்றங்களைத் தான்
மக்களும் அடிப்படையாக
கொண்டுள்ளனர்
என்று ரெங்கலட்சுமி வியப்புடன்
கூறுகிறார்.
பொன்னேறு பூட்டும் விழா என்ற
பெயரில் முதல் உழவு நடத்துகிற
காலத்தில் அச்சமூகத்தின்
மூப்பர்கள் இளையோர்களிடம்
கதையாகவும், பாட்டாகவும்,
பழமொழியாகவும்
இதை கற்றுத்தருகிறார்கள்
என்று ரெங்கலட்சமி கண்டு
கூறுகிறார்.
//தோழர் கி.வெங்கட்ராமன் //
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக