கென்யா
கென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது. குறிப்பாக 1850 களில் காலத்துவ பிரித்தானிய அரசால் பனிக்கமர்த்திய தமிழர்கள்.
தாய்லாந்து
1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட ஆயிரத்துக்கும்(1000<) அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள். சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள். 1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏராளமான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன. இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள். தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன. தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள். இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.
தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது. இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது. இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும். இங்கு வழங்கப்படும் ஆப்ரிகன்ஸ் (Afrikans), பிர்வா (Birwa), கம்தோ (Camtho), ஃபராகோலா (Faragola), எகாய்ல் (Gail), எக்கோரறா (Korara), எக்சூ (Kxoe), நுலூ (Nulu), நாம்மா (Nama), நெடிபி (Ndebee), ஊர்லாம்ஸ் (Oorlams), ரொங்கா (Ronga), சோத்தோ (Sotha), சவாலி (Swahili), சுவாதி (Swahiti) ஆகிய மொழிகள் பல்வேறு குழுக்களால் பேசப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு தமிழரும் குறைந்தளவிற்கு ஒரு மொழியினையாவது பேசும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றனர். இம் மொழிகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் உண்டு. இம் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் கையாள்வதற்குமான ஆளுமையும் ஆற்றலும் இவர்களிடம் உண்டு.
மொத்த மக்கள்தொகை
250,000
கரிபியன் தீவுகள்
இங்குள்ள தமிழர்களும் மொரிசியஸ், பிஜி தமிழர்களைப் போலவே புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் முற்றிலுமாக தங்கள் தாய் மொழியை இழந்து விட்டார்கள். கயானா, டிரிநாட் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுமையாகத் தங்கள் தாய் மொழியைத் தொலைத்து விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் பல மத விழாக்களை அவற்றின் அர்த்தம் புரியாமலேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். புதுச்சேரியிலிருந்து குடியேறிய தமிழர்கள் தற்போது பிரஞ்சுக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. தமிழில் கூட சிந்திப்பதில்லை. பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் தமிழ் தெரியாது. 4 தலைமுறை காலத்திற்குள் இவர்கள் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். கல்வித் திட்டத்திற்காக இந்துத் தமிழர்கள் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். கத்தோலிக்க மதப் படிப்புடன் பிரஞ்சு மொழியை அவர்கள் கற்கிறார்கள். இங்குள்ள தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் வீடுகளில் தமிழுக்குப் பதில் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. தமிழர்களின் பெயர்கள் திரிபடைந்து உச்சரிப்பு கூட மாறிவிட்டது. சூரினாம், சமைக்கா, பிரிட்டிஷ் கயானா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுவதுமாக தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் மொழியை மீண்டும் கற்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.
ரீயூனியன்
ரீயூனியன் தீவில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் அங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 சதவீதத்தினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். 5-6 தலைமுறைக்கு அவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
மொத்த மக்கள்தொகை
120,000
சிசேல்ஸ்
சிசேல்ஸ் தீவில் தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்கள் தங்கள் மொழியை முற்றிலுமாக இழந்து கிரியோலி மொழி மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் சிசேல்சில் வாழும் தமிழர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் சற்று திரிபடைந்த தமிழ்ப் பெயர்களையே சூட்டிக் கொண்டுள்ளனர்.
மொரிசியஸ்
மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள். மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள். மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார். தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு. சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.
1840- களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. இந் நாட்டில் தமிழிய மரபுவழியானவர் 22,000 (1993 Johnstone) பேர் வாழ்கின்றனர். இற்றைநாளில் மொரிசியசின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தமிழர்களே. இவர்களின் பேச்சுமொழியாக இருப்பது கிரியோல்மொழியும் (Creal Morisyen), ஆங்கிலமொழியுமாகும். பெயரளவில் தமிழாய்ந்த பெயரினை வைத்துக்கொண்டு தமிழர் என்ற சூழலுக்குள் தம்மை இருத்திக்கொண்டு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு, கறுத்த முகத்திற்கு வெளுத்த உடல் இணைத்தாற்போல் உளது.
மொறிசியஸ் தீவில் உள்ள பதினொரு இலட்சம் குடிமக்களில் 75.000 பேர் தமிழ் மக்கள். இவர்களில் 52 சதவீதம் இந்து மதத்தவர்கள் உள்ள அந்த நாட்டில் முஸ்லிம்கள் சீன-மொறிசியர்கள் நாட்டின் பூர்வீக குடிகள் என எல்லோரும் இன- மத- மொழி வேறுபாட்டால் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். 1730களில் இத்தீவை ஆண்ட பிரெஞ்சுக்காரர்,இந்தியாவில் தமது ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரியிலிருந்து தமிழர்களை கட்டடக் கைத்தொழில் - நுண்கலைத் தொழிலாளராக அழைத்து வந்தனர். 1810 இல் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தொகையான தமிழ்ப் போராளிகளின் உதவியுடன் பிரித்தானியர் இத்தீவை பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தது கைப்பற்றினர். மொறிசியசில் இன்று ஏறத்தாள 100 சைவ ஆலயங்கள் உள்ளன. அங்கே சைவப் பண்டிகைகளும் கோவில் அனுட்டானங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. அங்கே சைவம் தழைத்து நிற்கிறது.
195 ஆரம்ப பாடசாலைகளிலும் 12 உயர்தரப் பாடசாலைகளிலும் தமிழ் ஆசிரியர்களால் தமிழ் மொழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எல்லாமாக 215 தமிழ் ஆசிரியர்கள் மொரிசியசில் உள்ளனர். ஆனால் அங்கே கட்டாய தமிழ் மொழிக்கல்வி கிடையாது. தமிழ்ப் பாடத்தில் அடையும் சித்திகள் உயர்கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்பிற்கோ உதவுவதில்லை. பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமிழ் பேசுவதில்லை. கிறியோல் மொழிதான் பேசுகிறார்கள். மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எழுதவும் வரும். ஆனால் தமிழ் பேசவராது.
தமிழிலிருந்து உக்கிரத் திரிபு அடைந்த பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துள்ளனர். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதற்கு பிறந்த நட்சத்திரம் பார்த்து, தமிழ்ப் பெயர் அடி எடுத்துக் கொடுப்பது கோவில் குருக்கள். மொரிசியசில் சைவ சமயமே வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றது. சமய,விரத நாட்களை மக்கள் அறியும் வண்ணம் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் ஒன்று பிரெஞ்சு மொழியில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. தமிழர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். அழுவதா சிரிப்பதா என தெரியாத இன்னொரு விடயமும் உண்டு. பிறப்புச்சாட்சிப் பத்திரம் திருமணப்பதிவுப்பத்திரம், குடிசனமதிப்புப் பத்திரம் போன்ற அரச ரீதியான பதிவேடுகளிலெல்லாம் மொரிசியசின் தமிழ் மக்கள் தமது மதத்தை - தமிழ் என்று பதிந்து வருவது வழக்கம்! இங்கே சைவமும் தமிழும் ஒரு பொருட் கிழவிகள் போல் பாவனையில் இருந்து வருகின்றன. ' மெல்லத் தமிழ் இனிச்சாகும் " என்று பாரதியார் எச்சரித்தது இதைத்தானோ?
பிஜி
பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது. பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.
அவுஸ்திரேலியா
அவுஸ்த்ஹிரேலியா தமிழர் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் (யாரிடமும் அவுஸ்திரேலியா தமிழ் மக்கள் எண்னிகை இருப்பின் மடல் அனுப்பவும் sivaraja82@gmail.com)
டென்மார்க்
டென்மார்க் தமிழர் இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள். இங்கு ஏறத்தாழ 10,000 தமிழர் வசிக்கின்றனர்.
நெதர்லாந்து
நெத்ர்லாந்து தமிழர் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் (யாரிடமும் நெதர்லாந்து தமிழ் மக்கள் எண்னிகை இருப்பின் மடல் அனுப்பவும் sivaraja82@gmail.com) நெதர்லாந்து தமிழர் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள். சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.
1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து.
நோர்வே
நோர்வே தமிழர் இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் (யாரிடமும் நோர்வே தமிழ் மக்கள் எண்னிகை இருப்பின் மடல் அனுப்பவும் sivaraja82@gmail.com)
சுவிற்சர்லாந்து
சுவிஸ் தமிழர் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள், பெரும்பான்மையான சுவிற்சர்லாந்து தமிழர்கள் தமிழ்த் தேசிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். ஆறு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சுவிஸ் நாட்டில் ஏறத்தாள 75 000 தமிழர்கள் வசிக்கின்றார்கள்.
பிரித்தானியா UK
1960 தொடக்கமே கல்வி தொழில் வாய்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரட்னுக்கு புலம் பெயர்ந்தார்கள். 1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரட்டனுக்கு புலம்பெயர்ந்தார்கள். இன்று ஏறத்தாழ 250 000 - 300 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார்.
ஜெர்மனி
தமிழ் பின்புலம் உடைய ஜெர்மனி வாழ் மக்களை ஜெர்மன் தமிழர்கள் (German Tamils) எனலாம். ஜெர்மனிக்கும் தமிழ் நாட்டுக்கும் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இத்தொடர்பை ஜெர்மன் தமிழியல் மூலமாக மேலும் விளங்கிகொள்லாம்.
ஏறக்குறைய 75,000 தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினைகாரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் ஜெர்மனியில் பரந்து வாழ்கின்றார்கள்.
ஏறக்குறைய 75,000 தமிழர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினைகாரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் ஜெர்மனியில் பரந்து வாழ்கின்றார்கள்.
தமிழ் பள்ளிகள்
ஜெர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழலாயம் தொடங்கப் பெற்றது. தற்சமயம் ஜெர்மனியில் 133 தமிலாயங்கள் இயங்குகின்றன.
மன்கைம் தமிழாலயம் (ஜூலை 5, 1997 தொடங்கப் பெற்றது)
ஸ்ருட்கார்ட் தமிழாலயம் (1990 இல் தொடங்கப் பெற்றது)
தமிழ் அமைப்புக்கள்
ஜெர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழலாயம் தொடங்கப் பெற்றது. தற்சமயம் ஜெர்மனியில் 133 தமிலாயங்கள் இயங்குகின்றன.
மன்கைம் தமிழாலயம் (ஜூலை 5, 1997 தொடங்கப் பெற்றது)
ஸ்ருட்கார்ட் தமிழாலயம் (1990 இல் தொடங்கப் பெற்றது)
தமிழ் அமைப்புக்கள்
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- தமிழ்ப்பெண்கள் அமைப்பு - ஜெர்மனி (Tamilische Frauen Organisation - Deutschland)
- மாணவர் அமைப்பு
- தமிழர் கலாச்சார ஒன்றியம்
- தமிழர் விளையாட்டு ஒன்றியம்
தமிழர்களின் இந்துக் கோயில்கள்
- ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hamm)
- சிறீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Pforzheim)
அமெரிக்கா
தமிழ்நாட்டில் இருந்து கல்விக்காகவும் வேலைக்காவும் அமெரிக்காவுக்கு தமிழர்கள் கடந்த 50 வருடங்களாக குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கை இனப்பிரச்சினை காரணமாக ஈழத்தமிழர்களும் 1980 களின் பின்பு பெரும்பாலும் குடியேறியுள்ளார்கள்.
மொத்த மக்கள்தொகை
100,000
பிரான்ஸ்
தமிழர் இவர்களில் 98%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் பிரான்சில் 1220,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.
தமிழ் கல்வி
பிரான்சில் தமிழ்ச் சோலை என்னும் பொதுப்பெயரில் ஏறத்தாழ 50 தமிழ்ப் பள்ளிகள் 3,000 மாணவர்களுடன் இயங்குகின்றன. இதனுடன் இணையாமலும் தனித்தும் வேறு பள்ளிகளும் நடைபெறுகின்றன. தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. அது சர்வதேச அளவிலான தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச அளவிலான பாடத்திட்டதிற்கு அமைய வெளியிடப்படும் பாடப்புத்தகங்களே தமிழ்ச்சோலையில் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் தமிழ்த்திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிரான்சில் 2006ம் ஆண்டுக்கான தமிழ்திறன் தேர்வில் 2,200 பிள்ளைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு ஒரு மிகப்பெரிய மண்டபத்தில் ஒரே நாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் தமிழ்த்திறன் தேர்வு உலகளாவிய அளவில் நடத்தப்படுகின்றது
இதைவிட, தமிழர்களிடையேயான விளையாட்டுக் கழகங்கள் மெய்வல்லுநர் போட்டிகள், உதைபந்தாட்டம், கிரிகெட், உள்ளரங்க விளையாட்டுக்கள் என பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றன. இந்தப் பின்னணியிலேயே பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையான கலை இலக்கிய முன்முயற்சிகள் ஏனைய நாடுகளை விடவும் பிரான்சிலேயே கால்கோளிடப்படுவதுடன் உயிர்ப்பாகவும் இயங்குகின்றன. புலம்பெயர் இலக்கியம் ஈழத்து இலக்கிய நீட்சியாக அல்லது போர் இலக்கியச் சாயலாகவே காணப்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இலங்கைத்தீவின் போர் அரசியலே புலம்பெயர் வாழ்வின் இயங்கு சக்தியாக இருக்கின்றது. அதனால்தான் போலும் புலம்பெயர் இலக்கிய புனைவிற்கான வடிவத்திலும் ஈழத்தைப்போல் கவிதையே முதன்மையாக உள்ளது. கதை, நாவல், நாடகம் என்பதெல்லாம் கவிதைக்கு பின்னால்தான் நிற்கின்றன. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களான இரண்டு இளம் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டும் இரண்டாவது தடவையாக காமதேனு என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டு தொலைவில், பரதேசிகளின் பாடல்கள் என்னும் இரண்டு கவிதை நூல்களும், புலமும் புறமும் என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருந்தன.
இதைவிட, தமிழர்களிடையேயான விளையாட்டுக் கழகங்கள் மெய்வல்லுநர் போட்டிகள், உதைபந்தாட்டம், கிரிகெட், உள்ளரங்க விளையாட்டுக்கள் என பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றன. இந்தப் பின்னணியிலேயே பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையான கலை இலக்கிய முன்முயற்சிகள் ஏனைய நாடுகளை விடவும் பிரான்சிலேயே கால்கோளிடப்படுவதுடன் உயிர்ப்பாகவும் இயங்குகின்றன. புலம்பெயர் இலக்கியம் ஈழத்து இலக்கிய நீட்சியாக அல்லது போர் இலக்கியச் சாயலாகவே காணப்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இலங்கைத்தீவின் போர் அரசியலே புலம்பெயர் வாழ்வின் இயங்கு சக்தியாக இருக்கின்றது. அதனால்தான் போலும் புலம்பெயர் இலக்கிய புனைவிற்கான வடிவத்திலும் ஈழத்தைப்போல் கவிதையே முதன்மையாக உள்ளது. கதை, நாவல், நாடகம் என்பதெல்லாம் கவிதைக்கு பின்னால்தான் நிற்கின்றன. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களான இரண்டு இளம் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டும் இரண்டாவது தடவையாக காமதேனு என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டு தொலைவில், பரதேசிகளின் பாடல்கள் என்னும் இரண்டு கவிதை நூல்களும், புலமும் புறமும் என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருந்தன.
அரசியல்
தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றிபெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 பாண்டிச்சேர்த் தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் அடங்குவர். இவர்களில் பெருபான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒழுங்கிணைந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது. தேசிய அளவில் தமிழ் படிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறார்கள். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும். ஆனால் தமிழர்கள் சீன மொழி, மலாய் மொழிகள் தமிழை விட தங்களுக்குப் பயனளிக்கும் மொழிகள் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 4.8 சதவீதம் தமிழர்கள் இருந்தும் பயனில்லை. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். சீன மொழி, மலாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. ஆனால் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்துக் கோயில்களில் கூட குருக்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் மற்றும் பெரியவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்குமானால் சிங்கப்பூர் தமிழர்கள் சில தலைமுறைகளிலேயே தமிழை இழந்து விடும் பயம் உண்டு. தங்கள் தாய்மொழிக்கு எதிரான தமிழர்களின் இந்தப் போக்கு வளருமேயானால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளில் சிங்கப்பூரிலிருந்து தமிழ் அடியோடு மறைந்து போகும்.
மொத்த மக்கள்தொகை
90,000
கனடா
ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமான சனத் தொகையுடன் வாழும் நாடு கனடாதான். நீண்ட பாரிய சாலைகளுடன் திரும்பின இடமெல்லாம் அழகு ஒளி வீசும் அந்த நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய நிலையில் வாழ்கிறார்கள்.
மலேசியா
மலேசியாவில் 1969ஆம் ஆண்டில் மலாய் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் மலாய் மொழி படித்தே தீரவேண்டிய நிலை உருவாயிற்று. பள்ளிக்கூடங்களில் மலாய் மொழியே கல்வி மொழியாக ஆகிவிட்டது. இதன் விளைவாக இந்திய மற்றும் சீன மொழிகள் முக்கியத்துவம் இழந்தன. மலேசியாவிலுள்ள இந்தியர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மாத ஊதியத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். எனவே, மலாய் மொழி ஆங்கிலத்துடன் தமிழையும் கற்க இயலாதவர்கள். இதன் விளைவாகத் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் பத்திரிகைகள் ஏராளமாக வெளியாகின்றன. தமிழ் பேசுபவர்களும் படிப்பவர்களும் இன்னமும் உள்ளனர்.
மொத்த மக்கள்தொகை
1,060,000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக