|
மார். 26
| |||
முந்நீர் - படைத்தல் காத்தல் அழித்தல்
வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்புஅறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து
நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து .....
கடலிடையே உள்ள குறை நிலத்தில் தம்முடன் மாறுபட்ட பகைவரைப் புறங்காட்டி ஓடச்செய்து, அவருடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி , அதனாற் செய்த வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசினையுடைய சேரலாதன், தம் முன்னோரைப் போல இமயத்தில் வளைந்த விற்பொறியைப் பொறித்தான்; மீண்டு வந்து ஆம்பல் என்னும் எண்ணளவு தம் பகைவர் பணிந்துகொடுத்த பெருமைமிக்க நல்ல அணிகலன்களோடு, பொன்னாற் செய்த பாவையினையும் வயிரங்களையும் மரந்தை என்னும் ஊரில் உள்ள தன் மனைக்கண் முற்றத்திடமெல்லாம் நிறையும்படி கொண்டு வந்து குவித்தான்; அன்று அவ்விடத்து நிலம் தின்னும்படி கைவிட்டுப்போன அந்நிதியம் போன்ற பெரும் பொருளை ....... (மரந்தை – சேரனின் நகரம்- மாந்தை பாடமும் உள்ளது) முந்நீர் – கடல், மூன்று செய்கை- மண்ணைக் காத்தலும் படைத்தலும் அழித்தலும் என்பார் அடியார்க்குநல்லார், சிலம்பு17:31-யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீரும்,புறம் 9:10 விசேட உரை.முன்னீர்-நிலத்திற்கு முன்னாகிய நீரென்று உரைப்பாரும் உளர்.
kalappal.blogspot.com சங்ககால இலக்கியம்
kalappal.blogspot.com சங்ககால இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக