வெள்ளி, 7 ஜூலை, 2017

பெண்கள் உடல் அழகு பற்றி திருவள்ளுவர் குறள்

aathi tamil aathi1956@gmail.com

14/9/14
பெறுநர்: எனக்கு
தகையணங்குறுத்தல், களவியல் , காமத்துப்பால்,
குறள் 1081-1090,
வள்ளுவரின் சிந்தனைக்குள் தோன்றிய
திருக்குறளின் பாகங்கள் நான்கு . அவை அறம்
பொருள் இன்பம் வீடு என்பதுதான், வள்ளுவர்
எழுதிய குறளில் வீடு பற்றிய பகுதியில் அவர்
என்ன சொல்லி இருப்பார் என்று நாம்
அறியமுடியாதபடி அந்த பகுதி எங்கள்
கைகளுக்கு எட்டாமல்
தொலைந்து போயுள்ளது .
அது நமது துரதிஷ்டம் .
ஆனாலும் வள்ளுவர் இன்பத்துபாலுள் களவியல்
காமத்துப்பால் பகுதியில் இல்லற வாழ்வின்
வாழ்வின் இன்பம், காமம், காதல் தரும்
உணர்வுகளால் மனிதனுக்குள் எழும்
உணர்வுகளை வெளிப்படையா சொல்லி உள்ளார் .
கவிஞன் ஒருவன் தன் மனதில் உள்ளதை மிக
தெளிவாக ஒழிவின்றி சொல்லும்
பொழுது அதன் அழகு மிகவும் உன்னதமானதாக
அந்த பாடல்களில் தெரியும் . அந்த
வகை பாடல்கள் மனதில் பசுமரத்தி ஆணிகள்
போன்று பதிந்து விடுகின்றன .
ஒரு பெண் அழகுடையவாளாயின் அவளை அவள்
அழகை ஆடவனிரின் கண்கள் பருகும் .அந்த
முதல் பருகல் அவள் முன்னே அவளை நீ
அழகு என்று சொல்லி விடவேண்டும்
என்று மனதுள் ஆசைகளை துடிக்கவைக்கும் .
அதை அவள் வேறு கோணத்தில்
பார்த்து தன்னை காமன் என்று நினைத்து. பின்
அவள் தன்னுடன்
பேசுவதை பழகுவதை நிறுத்தி விடுவாள் ,
தன்னை ஒதுக்கி விடுவாள் என்று மனதுக்குள்
தான் நினைப்பதை ஆடவர்
மறைத்து வைத்துகொண்டு வேறு விதமாக அவள்
மீது தான் கொண்டுள்ள
ஈர்ப்பை வெளிக்கட்டுவான் , தன
உண்மை உருவத்தை மறைத்துவிடுவான்.
இதுதான் ஒழுக்கம் என்று வகை படுத்த
படுகின்றது . ஒரு பெண் விரும்பாத
விடையத்தை அவளுடன் பேச கூடாது . அவள்
அனுமதி இன்றி அவளை வர்ணிக்க கூட
கூடாது .
இத்தகைய சூலில் ஒரு ஆணுக்குள் இருக்கும்
உணர்வுகளை . தலைவியின்
அழகு தலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும்
அகத்துறை பகிர்வை வள்ளுவர் ...தகையணங்குறுத
்தல் என்று வடிவமைகின்றார் .
உணர்வினை மெளனமாக மனதுள்
வைத்து மதுபோதையிலும் அவள் இதழ்
போதை தருகின்றது என்று வெதும்பும்
ஆடவரின் உள்ளத்தை . அதில் உள்ளதை வள்ளுவர்
தன முதல் குறளில் இவாறு கூறுகின்றார் ...
அணங்குகொல் ஆய்மயில்
கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
அணங்குகொல் ஆய்மயில். என்கின்றார்
வள்ளுவர் . அணங்கு என்றால் பெண்
என்று சாதாரணமாக அர்த்தம் சொல்லி விட
முடியாது. பெண் என்பதற்கு பெண்ணினின்
ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப தமிழில் பல
சொற்கள் உண்டு . இங்கு வள்ளுவர்
அணங்கு என்கின்றார் அதன் அர்த்தம் ஆழமானது .
அணங்குஎன்னெஅவள் என்று மாணிக்கவாசகர்
பாடுகின்றார் பெண்ணா இவள்
என்னை கொல்லும் அழகு மயிலா இவள், இவள்
சக்தியின் வடிவம் , ஆசையின் தெய்வம் ரதியாவள்
அவளே இவள் , தேவர்க்காடும்
கூத்து அதை ஆடும்
ரம்பா ஊர்வசி துலோதுமை அவர்கள்
போன்றவள் , என்னை காமத்துள்
இழுத்து மனதை கொல்கின்றாள் இந்த
அணங்கு ஆய்கின்றாள் என் மனதை . மாதர்
கொல் .. பெண்களே இவள் அழகில்
மயங்கிடுவார் , இவள் சாதாரண பெண் இல்லை.
எல்லா உயிர்களையும் நேசிக்கும்
கொல்லா நோன்பு இருக்கும் தெய்வப்
பெண்ணோ! மயிலோ, மயில் இனத்தில்
ஆய்ந்து சிறந்த மயில் இவள். மயிலின்
அழகு இவளை மிஞ்சிவிடாது
கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்;.
மழைநனைந்த கனமான கரும்
குழலை குழைத்து முடிந்து அணிந்த
படி நேரில் வருகின்றாள் , இவள் மனிதப்
பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.அவள்
காதணிகள் அவள் கன்னத்துடன் உரசுவது அவள்
என்னை உரசுவதுபோல் அல்லவா இருக்கிறது .
இவள் உள்ளம் அறியமுடியாது என் உள்ளம்
கலங்கி மயங்குகின்றதே .
பூவையின் மேனி அற்புதம் பூ
க்களால் செய்த புத்தகம்
என்கின்றான் இன்று ஒரு கவிஞசன்.....
தகையணங்குறுத்தல் மூலம் வள்ளுவர்
தன்மானத்தை விட்டு மிக வெளிப்படையாக பல்
விடையங்களை சொல்கின்றார் அதை நான்
இங்கு சொல்லமுன் உங்களின்
பார்வை இலக்கிய
ரசனைக்கு மட்டுமே என்மீது கோபத்தை கொட்ட
அல்ல
என்று சொலிக்கொண்டு தொடர்கின்றேன் ...
நான் பகிரங்கமாக எழுதபோகின்றேன் விரசம்
என்றால் மன்னிக்கவும் . வள்ளுவரின் குறளின்
இன்பம் அது இது காமத்துப்பால் பருக விரும்பின்
பருகுங்கள் ..
பெண்ணின் மார்பகங்களை வர்ணிப்பதில்
வள்ளுவருக்குதான் எவ்வளவு ஆனந்தம்.
எல்லா ஆண்களுக்கும் பெண்களிடம்
பிடித்தவிடையமும் அதுதான் . பெண்கள்
ஆண்களை கவருவதற்கு தலை முலை இடை நடை அழகை காட்டவேண்டும்
என்பார்கள் . இங்கு வள்ளுவர் அதை ஒரு குறளில்
சொல்லி உள்ளார் . குறளின் அமுதம்
அள்ளி பருகும் பொழுது கிடக்கும் இன்பம்
எதிலும் இல்லை .வள்ளுவன் தீட்டிய கோலங்கள்
எல்லாம் எம் எண்ணங்கள்தான் . நாம்
சொல்லதுணியாத விடையங்களை வள்ளுவர்
ஈராயிரம் ஆண்டுகள் முன் மிக தெளிவாக
சொல்லி உள்ளார் .
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
பெண்ணின் மார்பகங்கள்
ஆண்களை வருத்துகின்றது என்கின்றார்
வள்ளுவர் . வள்ளுவர் இதை சொல்லும்
துணிவை எப்படி பெற்றார் .அன்று அவரை மற்றவர்கள்
எப்படி பார்த்தார்கள் .
திருக்குறளை மதுரை தமிழ் சங்கள் முதலில்
ஏற்க்கவில்லை . பல திருத்தங்களை செய்யுங்கள்
என்று சொல்லி உள்ளார்கள் .ஆனால் வள்ளுவர்
அதை ஏற்கவில்லை . பின்
ஒளவை அதை படித்து பார்கின்றார் , அவர்
அற்புதம் அற்புதம் என்கின்றார் .
இந்தபாடலை கூட .ஆக என் பாட்டி புரிந்த
இலக்கிய சுவை இன்றும்
இங்கு சுவைக்கட்டும் .
பெண்களின் சரியாத மார்புகள் . மனிக்கவும்
இது அழகின் ரசனை நிமிர்ந்த மார்புகள் மதம்
கொண்டு திமிறி நிற்கும் ஆண்
யானை போன்றது . அதை மூடிய ஆடைகள்
இரு மதங்கொண்ட யானையின் மத்தகத்தின்
மேலிட்ட முகபடாம்
பெண்களுடைய சாயாத கொங்கைகளின் மேல்
முலைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த
யானையின் அசைவுக்கு ஏறறதுபோல்
அசைந்து விலகி யானனையின் மத்தகத்தின்
பெரும் பாகங்களை காட்டுகின்றது போல
கண்ணில் பெண்ணின் மார்பின் பெரும்
பகுதியை காட்டி கொல்கின்றது ,அவள்
அழகு இன்னும் அதிகமாகின்றது . அவள் என்
இப்படி என்னை வதிக்கின்றாள் . அந்தப்
பெண்ணின் அழகை நான் அவளிடம் சொல்லும்
பொழுது , பல விடையங்களை ஒழித்து, சாயாத
அவள் முலைமேல் இருக்கும்
சேலை பற்றி பேசாது எப்படி இருப்பேன் .
அவள் முலைகளினாய என் வருத்தம்
பற்றி அவளிடம் கூறிட
முடியாது ,அவ்வாறு சொல்வது அவளுக்கு கோபத்தை தூண்டிவிடும் .
மாதர் கண்படா முலை மேல் என் கண்டுகின்றது.
மனம் வேகுது மோகத்திலே
இதையே இன்று ஒரு கவிஞன்
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெரும்பு பூந்திடிச்சு
கட்டெரும்ம்பு அதுக்குள்ள வெல்லம்
இருக்கென்று புரிஞ்சிருச்சு ...
ஒரு ஆணின் பதில் எப்படி இருக்கிறது..இது
தான் தகையணங்குறுத்தல்
தகை அணங்கு உறுத்தல்
அழகுள்ள பெண்ணின் உறுத்தல்
வள்ளுவர் நல்லாவரா கெட்டவரா ...
அதனை ரசித்து சொல்லிய நானும் அவர்
பேரன் ...

திருக்குறள் காமத்துப்பால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக