Friday, August 16, 2013
வந்தேறிகளும் தமிழ்நாடும்
வந்தேறிகள் யார் ?
வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ,பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான். இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு. இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள்,சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், நாயக்கர்கள் ஆவார்கள். வந்து ஆண்டு தமிழ்மொழிக்கும், தமிழ்மக்களுக்கும், தமிழர் வாழ்வியலிலும் அதிக தாக்கத்தை விளைவித்தவர்கள் இனி நாம் காணக்கூடியவர்கள்.
அ) களப்பிரர்கள்
இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்றும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம் என கருதமுடியும் .இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறக்காரணம் கி.பி. 300 காலப்பகுதிக்கு முன்னர் தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து விரிவான தகவல்கள் நம்மிடம் இல்லை. தமிழில் இயற்றப்பட்ட நூல்களோ அதன் கருத்தியல்களோ நம்மிடம் இன்று இல்லை.
ஆ) நாயக்கர்கள்
விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில், செஞ்சி, தஞ்சை, மதுரைஆகிய தமிழ்நாட்டு நகரங்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. தஞ்சையில் கி.பி. 1532 இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது,செஞ்சியில் கி.பி. 1526 இல் தொடங்கியது, மதுரையில் கி.பி. 1529 இல் தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்து, பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள். 1529 ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736 ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.
§ நாயக்க மன்னர்கள் தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர்.
§ வேளாண் தொழிற்நுட்பத்தில் வல்லவரான பள்ளர்கள், நாயக்க பிராமணரிடமும் பிற பிராமணரிடமும் பிராமணரல்லாத நாயக்கர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரிடமும் அடிமைகளாகவே மாறிய வேதனைமிக்க வரலாறு இந்த நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவானது. முக்கூடற் பள்ளு, இலக்கியம் பள்ளர்கள், நாயக்கரிடம் அடிமைகளாக வேளாண் பணி புரிந்த நிலையைப் பதிவு செய்துள்ளது.
§ முக்கூடற் பள்ளு காலத்திலும் கணியர் சாதியினர் வாழ்ந்துவந்தனர் என்பதும், அவர்கள் ‘கணியார்’ என்ற அதே பழந்தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். கணியான் என்றால், பறை அடிப்பவர் என்று பொருள். தமிழர் மரபில் அந்தணராகப் பறையர்கள் இருந்தனர். நான்கு மறைகள ஓதும் பறையர்கள் வாழ்ந்ததாக,சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.
§ பறையர், பள்ளர், கணியர், வள்ளுவர், அம்பட்டர், தச்சர் உள்ளிட்ட குலத்தவர் சங்ககாலத்தில் ‘அறிவுச் சமூகத்தவராக’வே வாழ்ந்தனர். இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால், திராவிடர் ஆட்சியில் மேற்கண்ட குலங்கள் மிக இழிவாக நடத்தப்பட்டன. சோழர் கால சதுர்வேதி மங்கலத்தில் இருந்த கிராமங்களிலேயே, நிலக் காணி பெற்றிருந்த பறையர்கள்,நாயக்கர் காலத்தில் செத்த மாடு உரிக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள்.
§ எம் மொழி அழிந்ததற்கு இந்த நாயக்கர்கள் தான் காரணம் என்று வரலாற்று கூறுகிறது, அனால் வரலாறு தெரியாமல் அதை படிக்காமல் இந்த மேதாவிகள் இப்படி பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள்.
1100 ஆண்டுகள்
சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி.2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர்களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். பல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பிராமண குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பிராமணர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.
சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர், பல்லவர் - 700 ஆண்டுகளும்,விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300ஆண்டுகளுக்கும் குறைவாகவே.
திராவிடம்
திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான். கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் ”தந்திர வார்த்திகா” என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல். இதை எழுதியவர் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர். திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு. இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை. அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் திராவிடத்தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.
திராவிடகட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் அண்ணாதுரையும் பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள் மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லிகொள்ளும் எந்தமாநிலத்திலும் தமிழனை முதல்வராக்கமாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.
எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சின் சென்னை மகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்த பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர்,ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
தமிழகத்தை ஆளும் திராவிடர்கள்
கருணாநிதி தெலுங்கர்
செயலலிதா கன்னடர்
ஆற்காடு வீராச்சாமி தெலுங்கர்
கே.என். நேரு தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெலுங்கர்
எ.வ. வேலு தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தெலுங்கர்
துரைமுருகன் தெலுங்கர்
நெப்போலியன் தெலுங்கர்
தயாநிதி மாறன் தெலுங்கர்
மு.க. அழகிரி தெலுங்கர்
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்
கி. வீரமணி தி.க. தெலுங்கர்
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்
கருணாநிதி தெலுங்கர்
செயலலிதா கன்னடர்
ஆற்காடு வீராச்சாமி தெலுங்கர்
கே.என். நேரு தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெலுங்கர்
எ.வ. வேலு தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தெலுங்கர்
துரைமுருகன் தெலுங்கர்
நெப்போலியன் தெலுங்கர்
தயாநிதி மாறன் தெலுங்கர்
மு.க. அழகிரி தெலுங்கர்
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்
கி. வீரமணி தி.க. தெலுங்கர்
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்
தமிழ் நாட்டின் நிலை
திராவிடத்தால் இழந்தவை
1956 யில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் பிற மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடம் இழந்தது 70,000 சதுர கிலோமீட்டர் ஆகும். தற்போதைய தாய் தமிழகத்தின் மொத்த பரப்பளவே 1,30,000சதுர கிலோமீட்டர் தான். அதாவது கிட்டத்தட்ட 35% நிலத்தை இழந்துள்ளோம். இதன்மூலம் குறைந்தது நமக்கு ஒரு பதினைந்து நாடளுமன்ற உறுப்பினர்கள் கூடுதலாக கிடைத்திருப்பார்கள்,குடகு,இடுக்கி,சித்தூர் உள்ளிட்ட பகுதிகள் நமக்கு இருந்திருக்கும் காவேரி,முல்லை பெரியாறு,மற்றும் வட பெண்ணையாறு பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. இந்த வரலாற்று உண்மை இன்றும் திராவிடம் பேசியவர்கள்/ பேசுபவர்களால் மூடி மறைக்கப்பட்டும் வருகிறது. திராவிடம் பேசுபவர்களை நம்பினால் இதுதான் இறுதி நிலை என்ற அறிவு தமிழருக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
ஆந்திரத்தில் தமிழர் இழந்த மண்
§ சித்தூர் வட்டம்
§ திருப்பதி (சந்திரகிரி) வட்டம்
§ திருக்காளத்தி வட்டம்
§ பாமனேறு வட்டம்
§ குப்பம் ஜமீன் பகுதி
கர்நாடகத்தில் தமிழர் இழந்த மண்
§
கோலார் தங்க வயல்
§ பெங்களூரு தண்டுப்பகுதி
§ கொல்லங்கோடு வனப்பகுதி
§ பாலக்காடு வட்டம்
§ கொள்ளே காலம் வட்டம்
கேரளத்தில் தமிழர் இழந்த மண்
§ தேவிகுளம் வட்டம்
§ பீர்மேடு வட்டம்
§ செங்கோட்டை வனப்பகுதி
§ நெய்யாற்றங்கரை வட்டம்
§ நெடுமாங்காடு கிழக்குப் பகுதி
எதற்க்காக நாம் தமிழர் ?
தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்கவில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர். தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது ? இதற்குக் காரணம் யார் ? இதில் திராவிடத்தின் பங்கு என்ன ?
1956 இல் மொழிவாரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திராவிடர் ஆட்சியில் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது, மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர். வெளி மாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத் தமிழர் தமிழ் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக்கற்கலாயினர்.
தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி தமது எண்ணிக்கை தமிழருக்கு இணையாக வர வழி செய்திருந்தனர். இதனால், வந்தேறு குடிககள் தம் தாய்மொழியான கன்னடம், தெலுங்கு கற்க, தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர். நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர்,ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே!. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான். கன்னடன் கன்னடனாக, தெலுங்கன் தெலுங்கனாக,மலையாளி மலையாளியாக வாழ்கிறான். நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா ? இது தமிழர் நாடா, வந்தேறிகளின் வேட்டைக்காடா என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் உணரவேண்டும் !
தமிழர் ஆதிகாலத்திலிருந்தே தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும் பிழையைச் செய்தனர். தமிழரின் தனித்தன்மை(?)என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும். அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.
தமிழர் ஆதிகாலத்திலிருந்தே தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும் பிழையைச் செய்தனர். தமிழரின் தனித்தன்மை(?)என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும். அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.
தமிழின் சிறப்பு - உணவைக் குறிக்கும் 27 சொற்ககள்
அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை,பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு.
தமிழகத்தில் தமிழர்க்குத் தலைமையேற்க எட்டுக்கோடி பேரில் ஒருவர்க்கு கூடவா ஆற்றல் இல்லை ?.தமிழ்நாட்டிற்கு யார்வேண்டுமானாலும் வரலாம்; வாழலாம், தமிழன் மட்டுமே ஆழ வேண்டும்.
ஆரியமே தமிழரின் முதல் பகை
திராவிடம் ஆரியத்தின் கிளை !
தமிழகத்தில் தமிழர்க்குத் தலைமையேற்க எட்டுக்கோடி பேரில் ஒருவர்க்கு கூடவா ஆற்றல் இல்லை ?.தமிழ்நாட்டிற்கு யார்வேண்டுமானாலும் வரலாம்; வாழலாம், தமிழன் மட்டுமே ஆழ வேண்டும்.
ஆரியமே தமிழரின் முதல் பகை
திராவிடம் ஆரியத்தின் கிளை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக