ஞாயிறு, 9 ஜூலை, 2017

கல்மரம் 10கோடி ஆண்டு பழமை தமிழகத்தில்

aathi tamil aathi1956@gmail.com

3/8/14
பெறுநர்: எனக்கு
பூங்காக்​கள் என்​றாலே அவற்​றில் பூக்​கள்,​​ செடி​கள்,​​
கொடி​கள்,​​ மரங்​கள் என்று உயி​ருள்ள தாவ​ரங்​கள்​தாம்
இருக்​கும்.​ பெரம்​ப​லூ​ருக்கு அருகே சாத்​த​னூர்
கிரா​மத்​தில் "தேசிய கல்​ம​ரப் பூங்கா' நம்​மைத்
திகைக்க வைக்​கி​றது.​ கல்​லில் மரங்​களா?​
என்று சற்று வியப்​பு​டன் விழி​களை உயர்த்​திப் பார்க்​
கி​றோம்.​ சாத்​த​னூர் கிரா​மத்​தில் 10 கோடி ஆண்​டு​க​
ளுக்கு முன் தோன்​றிய மரம் ஒன்று புவி​யின் தோற்ற
வர​லா​ற்றுக்குச் சான்​று​கூ​றும் தட​ய​மாக இப்​
போது படுத்​தி​ருக்​கி​றது.​
இப்​போது இந்த ஊருக்கு கிழக்கே 100 கிலோ மீட்​டர்
தொலை​வில் கடல் அமைந்​துள்​ளது.​
ஆனால் 12 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் இவ்​வூ​ரின்
மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்​டர் வரை கடல் பர​வி​யி​
ருந்​த​தா​கப் புவி​யி​யல் ஆய்​வு​கள் கூறு​கின்​றன.​
புவி​யி​யல் வர​லாற்​றின்​படி இக்​கா​லம் "கிரி​டே​சஸ்
காலம்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றது.​ இக்​கா​லத்​தில்
இன்று இருப்​பது போன்று கட​லில் பல்​வேறு உயி​ரி​னங்​
கள் வாழ்ந்​தி​ருக்​கின்​றன.​
இவ்​வி​லங்​கு​கள் இறந்த பின்பு ஆறு​க​ளி​னால் அடித்​து​
வ​ரப்​பட்ட மணல்,​​ களி​மண் இவற்​றால் மூடப்​பட்டு கட​லின்
அடி​யில் அமிழ்ந்​தன.​ கட​லோ​ரப் பகு​தி​யி​லும் அதன்
அரு​கி​லும் தழைத்து வந்த மரங்​க​ளும் ஆற்று வெள்​ளத்​
தி​னால் அடித்​து​வ​ரப்​பட்டு இவ்​வி​லங்​கு​க​ளு​டன் கட​
லில் அமிழ்ந்​தன.​ காலப்​போக்​கில் வெப்​பம்,​​ அழுத்​தம்
ஆகி​ய​வற்​றால் பசு​ம​ரங்​கள் கல்​ம​ரங்​க​ளாக உரு​மா​றின.​
இவ்​வூ​ரில் காணப்​ப​டும் கல்​லு​ரு​வா​கிய பெரிய அடி​
ம​ரம் ஏறத்​தாழ 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய
திருச்​சி​ராப்​பள்ளி பாறை​யி​னப் பகு​தி​யில் அமைந்​
தி​ருக்​கின்​றது.​ இது "கோனி​பெ​ரஸ்' வகை​யைச் சார்ந்​த​
தா​கக் கரு​தப்​ப​டு​கி​றது.​
இம்​ம​ரம் 18 மீட்​டர் நீள​மு​டை​யது.​ சாத்​த​னூ​
ருக்கு அரு​கில் வர​கூர்,​​ ஆனைப்​பாடி,​​ அலுந்​த​
ளிப்பு,​​ சார​தா​மங்​க​லம் ஆகிய ஊர்​க​ளின் அருகே நீரோ​
டைப்​ப​கு​தி​க​ளி​லும் சில மீட்​டர் நீள​முள்ள கல்​ம​ரங்​கள்
காணப்​ப​டு​கின்​றன.​
இந்​திய புவி​யி​யல் துறை​யைச் சார்ந்த டாக்​டர்
எம்.எஸ்.கிருஷ்​ணன் அவர்​க​ளால் 1940-ம் ஆண்​டில் இக்​கல்​ம​
ரங்​கள் பற்​றிய செய்தி முத​லில் தெரி​விக்​கப்​பட்​டது.​
புவி​யி​யல் தோற்​றத்​தின் வர​லாற்று கல்​வெட்​டா​கக்
காணக்​கி​டைக்​கும் இக்​கல்​ம​ரங்​கள் பற்றி "மழை மண் மரம்
மானு​டம்' என்ற அமைப்​பின் மூலம் சமத்​துவ சமூ​கச்
சுற்​றுச்​சூ​ழ​லுக்​கான செயல்​பாட்​டா​ள​ரான கட​லூர்
மாவட்​டம்,​​ இரா​ம​நத்​தம் கிரா​மத்​தைச் சேர்ந்த இர​
மேசு கருப்​பை​யா​வி​டம் கேட்ட போது அவர் நம்​மி​டம்
பகிர்ந்து கொண்​டவை:​
""இந்​தக் கல்​ம​ரங்​க​ளைப் போன்றே திண்​டி​வ​னத்​
துக்கு அருகே திரு​வக்​க​ரைப் பகு​தி​யி​லும் கல்​ம​
ரங்​கள் காணப்​ப​டு​கின்​றன.​ இது​போன்ற கல்​ம​ரங்​கள் பல
இடங்​க​ளில் கிடைத்​தா​லும் தொடர்ச்​சி​யாக 18 மீட்​டர்
நீளம்​கொண்ட அடி​ம​ரம் இது என்​பது சிறப்பு.​ இதன் அரு​
கில் முன்பு நடப்​பட்ட ஒரு புளி​ய​ம​ரத்​தின் வேர் இக்​
கல்​ம​ரத்​தின் தொடர்ச்​சிக்கு இடை​யூ​றாக அமைந்து கல்​ம​
ரத்​தைத் துண்​டாக்கி நிற்​கி​றது.​ இடை​யூ​றான இந்த
மரத்தை அங்​கி​ருந்து அகற்ற வேண்​டும்.​
இக்​கல்​ம​ரம் திறந்த வெளி​யில் இருப்​ப​தால் வெயி​லி​
லும்,​​ மழை​யி​லும் பாதிக்​கப்​பட்டு சிறு​துண்​டு​க​ளா​
கச் சிதை​வு​றும் வாய்ப்பு இருக்​கி​றது.​ எனவே இந்த
வர​லாற்​றுச் சின்​னத்​தைப் பேணிக் காக்க மேற்​
கூரை ஒன்றை நிறு​வுவது அவ​சி​யம்.​ வரும் பார்​வை​
யா​ளர்​கள் தொட்​டுப் பார்ப்​ப​தை​யும்,​​ அதன்
மீது ஏறி நடக்​கா​மல் இருக்​க​வும் அதைக் கண்​ணா​டிப்
பெட்​டிக்​குள் வைத்​துப் பாது​காக்க வேண்​டும்.​
இதைப் புவி​யி​யல் அறி​வும்,​​ அனு​ப​வ​மும் கொண்​ட​வர்​க​
ளைக் கொண்டு பரா​ம​ரிக்க வேண்​டும்.​ இது​கு​
றித்து விளக்​கம் அளிக்க சரி​யான ஒரு​வர் இல்​லா​த​
தால் வரு​கின்ற உள்​நாட்டு,​​ வெளி​நாட்டு சுற்​று​லாப்
பய​ணி​கள்,​ ஆய்​வா​ளர்​கள்,​​ மாண​வர்​க​ளுக்குப் பல அரிய
செய்​தி​களை உணர்த்த முடி​யா​மல் போகி​றது.​
பெரம்​ப​லூர்,​​ அரி​ய​லூர் பகுதி புவி​யின் தோற்​றத்​
தைப் பற்​றி​யும் பல்​வேறு உயி​ரி​னங்​கள் பற்​றி​யும்
ஆய்வு மேற்​கொள்​ளத்​தக்க வகை​யில் காலக் கரு​வூ​ல​மாக
இந்​தக் கல்​ம​ரங்​கள் இருக்​கின்​றன '' என்​றார் இர​
மேசு கருப்​பையா.
-​நீதி​செங்​கோட்​டை​யன
அகழ்வாராய்ச்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக