திங்கள், 1 மே, 2017

புறநானூறு சிறப்புகள் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

20/3/15
பெறுநர்: எனக்கு
கார்த்தி கேய பாண்டியர்
புறநானூற்றின் சிறப்பியல்புகள்.
சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரால் பல
காலங்களில் பல சூழ்நிலைகளில் பாடப்பட்ட
புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பே
புறநானூறு என்னும் சங்கத்தமிழ் நூலாகும்.
இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார்
என்று தெரியவில்லை.
400 புறநானூற்றுப் பாடல்களில்
138 பாடல்கள் 43 மூவேந்தர்களைப் பற்றியதாகவும்
141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப்
பற்றியதாகவும்
121 பாடல்கள் பாடப்பெற்றவர்களின் பெயர்
தெரியாதவைகளாகவும் அமைந்துள்ளன.
138 மூவேந்தர் பற்றிய பாடல்களில்
27 பாடல்கள் சேர வேந்தர்களைப் பற்றியும்
37 பாடல்கள் பாண்டிய வேந்தர்களைப் பற்றியும்
74 பாடல்கள் சோழ வேந்தர்களைப் பற்றியும்
பாடப்பட்டுள்ளன.
141 குறுநில மன்னர்கள் பற்றிய பாடல்களில்
23 பாடல்கள் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றியும்
17 பாடல்கள் வேள் பாரியைப் பற்றியும்
14 பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியும்
7. பாடல்கள் பேகனனைப் பற்றியும்
7. பாடல்கள் குமணனைப் பற்றியும்
6 பாடல்கள் காரியைப் பற்றியும்
5. பாடல்கள் நாஞ்சில் வள்ளுவன் பற்றியும்
5.பாடல்கள் பிட்டங்கொற்றன் பற்றியும்
4. பாடல்கள் எழினியைப் பற்றியும் இடம்பெற்றுள்ளன.
4 குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும்
6 குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும்
29 குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடலிலும்
பாடப்பட்டுள்ளனர்.
157 புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப்
பாடியுள்ளனர். இவர்களில்
15 பேர் பெண்பாற் புலவர்கள்
142 பேர் ஆண்பாற் புலவர்கள்.
12 பாடல்களைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக