ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

டேவிட் ஐயா கட்டடக்கலை மாதிரிப் பண்ணைகள் வேளாண்மை விவசாயம் அறிவியல் ஐயா

aathi tamil aathi1956@gmail.com

12/10/15
பெறுநர்: எனக்கு
Athiyaman Thamuka
கட்டிடக் கலை வல்லுனரும் தலைவர் பிரபாகரனின் உயிரைக் காப்பாற்றியவருமான
மூத்த அறிஞர் டேவிட் ஐயா (எஸ்.ஏ.டேவிட் சாலமன் அருளானந்தம் டேவிட்)
அவர்கள் கிளிநொச்சியில் காலமானார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை
தமிழர்களின் நல்வாழ்வுக்கென உழைத்த பெருந்தகை ஐயா டேவிட் அவர்கள்.
அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர்
தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட
கட்டடங்களிலொன்று. யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது
வடிவமைப்பில் உருவானது. அவரது அறிவையும், திறமையையும் பயன்படுத்தி
அரசாங்கத்திலோ வெளிநாடுகளிலோ வேலை வாய்ப்பைப் பெற்று பணக்காரராக
எண்ணியதில்லை. தனது அறிவும், உழைப்பும் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும்
என்று எண்ணி உழைத்தார்.
இலங்கை அரசாலும், கெடுமதி கொண்ட துரோகிகளாலும் கொலை செய்ய ேடவிட்
ஐயாவைத் தேடிக் கொண்டிருந்த நிலையில் நீண்டகாலத்தை தமிழகத்தில்
கழித்தார். 1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி
நோக்கிப் புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது ஐயா அவர்களே.
நாவலர் மாதிரிப் பண்ணை போன்ற மாதிரிப் பண்ணைகளை உருவாக்கி அவற்றின்
மூலம் தமிழர்கள் தங்களது சொந்தக் கால்களில் நின்று உழைத்து பொருளீட்ட
முடியும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் டேவிட் ஐயா.
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் டேவிட் ஐயாவின் பங்களிப்பினை
மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல்
வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு
, நினைவு கூரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக