செவ்வாய், 11 ஏப்ரல், 2017

விநாயகர் சதுர்த்தி எப்படி தொடங்கியது

aathi tamil aathi1956@gmail.com

18/9/15
பெறுநர்: எனக்கு
இடும்பாவனம் கார்த்திக்
பிள்ளையார் சிலை ஊர்வலம் எப்படி வந்தது?
------------------------------------------------------------
1897இல் புனே, மும்பை போன்ற பகுதிகளில் பிளேக் நோய் பரவி நூற்றுக்கும்
மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள்.
இதனால், பிளேக் நோய்க்கு காரணமாகயிருக்கிற எலிகளை ஒழிப்பதற்கு பிளேக்
நோய்த்தடுப்பு ஆணையம் அமைக்கிறது அன்றைய வெள்ளைக்கார அரசு.
அந்த ஆணையத்திற்கு அன்றைய உதவி கலெக்டராக இருந்த ராண்ட் மற்றும்
அயெர்ஸ்ட் தலைமையில் வெள்ளைக்காரர்கள் குழு அமைக்கப்படுகிறது.
'எலி பிள்ளையாரின் வாகனம்; அதனைக் கொல்வது இந்துக்களின் உணர்வுகளைக்
கொல்கிற செயல்' என பாலகங்காதர திலகர் தனது 'கேசரி' பத்திரிக்கையில்
எழுதுகிறார்.
அதனை பொருட்படுத்தாது ராண்ட் , அயெர்ஸ்ட் குழு எலிகளை ஒழிக்கிறது.
இதனால், இருவரும் பார்ப்பனர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள்.
மத உணர்வைத் தூண்டியதற்காக திலகர் கைதுசெய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைப்படுத்தப்ப
டுகிறார்.
பிறகு, வெளியே வந்த திலகர் 1898ஆம் ஆண்டு தொடங்கி வைத்ததுதான் இந்த
பிள்ளையார் சிலை ஊர்வலம்.
இதே திலகர்தான், ‘பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் கல்வி கற்கக்கூடாது’ என்று
கூறியவருமாவார்.
# இந்துத்துவா இயக்கங்கள் தங்கள் அரசியலை இந்த மண்ணில் வேரூன்றச்
செய்வதற்கு இந்த ஊர்வலத்தை முன்னெடுக்கிறது.
இந்த ஊர்வலத்தால் ஒரு தாய் பிள்ளையாய் வாழும் மக்களிடையே மதக்கலவரமும்,
தேவையற்ற பதற்றமும் ஏற்படுகிறது. இது அரசியல் ஆதாயத்திற்காகத்
திட்டமிட்டு இந்த மண்ணில் உருவாக்கப்படுகிறது.
நம்மை ‘இந்து’ என்று சொல்லி மத உணர்வைத் தூண்டுகிற இதே இந்துத்துவா
இயக்கங்கள்தான் இந்துவாக வாழ்ந்த இலட்சம் தமிழர்களை இலங்கையில் கொன்ற
பெளத்த மதத்தினரான சிங்களர்களுக்கு ஆதரவாய் நிற்கிறது.
காரணம், இந்துத்துவா இயக்கங்கள் தமிழர்களை இந்துவாக ஒருபோதும்
ஏற்பதில்லை. சூத்திரராகத்தான் பார்க்கிறது. அதாவது, தேவடியாள் மகனாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக