புதன், 5 ஏப்ரல், 2017

ராமாயணம் மகாபாரதம் சோழர் தொடர்பு முசுகுந்தன்

aathi tamil aathi1956@gmail.com

24/10/15
பெறுநர்: எனக்கு
Puli Vamsam - புலி வம்சம்
இந்தக் 'குரங்கு முகம்' கொண்ட முசுகுந்தன் என்பவன் யார்? அவனுக்கும்
சோழர்களுக்கும் என்ன தொடர்பு?
முசுகுந்தனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன்
ராஜரிஷியாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும்
போற்றப்படுகிறான
். அவனோடு தொடர்புபட்ட இடங்கள் எல்லாம் கங்கைக் கரையில் இருக்கின்றன.
எனில் அவனுக்கும் புகார் நகருக்கும் எப்படித் தொடர்பு இருந்திருக்க
முடியும்?
ஒரு முறை தேவலோகத்திலிருந்த அமிர்தம் கவர்ந்து செல்லப்பட்டதாம். அதனை
மீட்டுக் கொண்டு வர தேவர்களுக்குத் தலைவனாகச் சொல்லப்பட்ட இந்திரன்
செல்கிறான். அவன் இல்லாத நேரத்தில் அவனது ஊரான அமராபதியை, அசுரர்கள்
தாக்கக்கூடும் என்று கருதி, பாதுகாப்புக்கு யாரை வைக்கலாம் என்று
யோசித்துக் கொண்டிருந்த போது, முசுகுந்தன் என்னும் அரசன், தான்
காப்பதாகக் கூறினானாம். அவனைக் காவலுக்கு வைத்த போது, கூடவே, அவனுக்குப்
பக்கபலமாக ஒரு பூதத்தை நிறுவினானாம் இந்திரன்.
எதிர்பார்த்தது போல அசுரர்கள் அமராபதியைத் தாக்கினார்கள். அவர்களால் அந்த
நகரம் இருள் அடைந்தது. அப்பொழுது அந்தப் பூதம் இருள் நீக்க உதவியது.
அதனால் முசுகுந்தன் அசுரர்களை வெல்ல முடிந்தது. திரும்பி வந்த இந்திரன்
நடந்ததைக் கேள்விப்பட்டான். பூதம் முசுகுந்தனுக்கு உதவியதை அறிந்து
மகிழ்ந்து, அந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கே அளித்து விட்டான். அப்படி
பெறப்பட்ட பூதத்தைப் புகார் நகரில் நிறுவினான். அந்தப் பூதமே நாளங்காடிப்
பூதம் எனப்பட்டது.
இந்த நாளங்காடிப் பூதம் என்றால் என்ன?
நாளங்காடி என்பது ஒரு கடைவீதி. அந்தக் கடைவீதியில் நாளங்காடிப் பூதம்
என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் பேய், பிசாசு போன்ற மூட
நம்பிக்கையாய்ச் சொல்லப்பட்டது அல்ல. வழி வழியாய்ச் சோழநாட்டு மக்கள்
அதனைத் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். பொங்கலிட்டுப் பூசையும் செய்து
வந்தனர். இதனை இளங்கோவடிகள் இந்திர விழாவூரெடுத்த காதையில்
விவரித்துள்ளார்.
இப்படி நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற இச்செயலை, 'அமரனிற் பெற்று, தமரில்
தந்து" என்று சிலப்பதிகாரம் சொல்லுகிறது. அதாவது, அமரன் என்று
சொல்லப்படும் இந்திரனிடமிருந்து பெற்ற இந்த நாளங்காடிப் பூதத்தை,
முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத் தந்தான்
என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனில் சோழர்கள் முசுகுந்தனோடு
தொடர்புடையவர்கள் என்று தெரிகிறதல்லவா? இந்தத் தொடர்பு பற்றி 1905 -ஆம்
வருடம் கண்டெடுக்கப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம்
அறியப்படுகிறது.
இராஜேந்திர சோழன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆறாம் ஆண்டு எழுதப்பட்டவை இந்தத்
திருவாலங்காட்டுச் செப்பேடுகள். பல கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட
தானங்களைக் குறிக்கும் அத் தகடுகளில், சோழர் வம்சாவளி என்று ஒரு பட்டியல்
எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு நாம் அறிந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள்.
சிலப்பதிகாரம் நடந்த காலத்திற்கு மிகவும் பிறகு வந்தவர்கள். ஆனால் சோழர்
வம்சம், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எங்கோ நீண்டு கொண்டே
போகிறது. அப்படிச் செல்லும் இந்தப் புலிவம்சத்தில், முசுகுந்தனைப்
பற்றியும் அந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன.
செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள
்ள வம்சாவளி:
சூரியன்
மனு
இக்ஷ்வாகு
விகுக்ஷி
புரஞ்சயன்
இக்ஷ்வாகு
ககுஸ்தன்
அர்யமன்
அனலப்ரதாபன்
வேணன்
ப்ரித்து
துந்துமாரன்
யுவனாச்வன்
மாந்தாதா
முசுகுந்தன் (இவனே நாளங்காடிப் பூதத்தை இந்திரனிடமிருந்து பெற்றவன்)
வல்லபன்
ப்ரிதுலக்ஷன்
பார்திவசூடாமணி
தீர்கபாஹு
சந்த்ரஜீத்
சங்க்ருதி
பஞ்சபன்
சத்யவ்ரதன் (ருத்ரஜீத் எனப்பட்டான். இந்தப் பெயர்களுக்கெல்லாம் காரணம் இருக்கிறது )
உசீனரன்
சிபி (இவனே புறாவுக்காகத் தன் தசையை அரிந்து கொடுத்தவன். இவனை முன்னிட்டே
, சோழர்கள் தங்களைச் 'செம்பியன்' என்றழைத்துக் கொண்டனர்.)
மருத்தன்
துஷ்யந்தன்
பரதன்
சோழவர்மன் (இவன்தான் தமிழகத்தில் சோழ நாட்டை ஸ்தாபித்து, சோழர்கள்
ஆட்சியை ஆரம்பித்து வைத்தான்.)
ராஜகேசரிவர்மன்
பரகேசரி
சித்ரரதன்
சித்ரச்வன்
சித்ரதன்வன் (இவன் காவேரி ஆற்றைக் கொண்டு வந்தவன் என்கிறது செப்பேடு )
சுரகுரு
வ்யக்ரகேது (த்ரேதா யுகத்தின் கடைசி மன்னன்.இவன்தான் புலிச் சின்னத்தை
சோழர்கள் கொடியில் பொறித்தவன்.)
திருவாலங்காட்டுச் செப்பேட்டின் விவரம், இங்கே:
http://www.whatisindia.com/inscriptions/
south_indian_inscriptions/volume_3/
no_205b_aditya_ii_karikala.html
சோழ நாடு ஸ்தாபிக்கப்படட் போது காவேரி என்னும் நதியே இன்நாட்டில்
ஓடவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் சோழ நாட்டின் தொன்மை
எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! கி-மு- 1.500 -வந்ததாகச் சொல்லப்படும்
சிந்து சமவெளி மனிதன் எங்கே, மலை தோன்றியும், நதி தோன்றாத காலத்திலேயே
நகரம் நிர்மாணித்த சோழ வர்மன் எங்கே! எது தொன்மை வாய்ந்தது?
ஆக, காவேரி நதி ஆரம்பித்த காலத்தை அறிவியல் முறைகள் மூலம் நிர்ணயம்
செய்தால், மிகத் துல்லியமாகச் சோழர்களது ஆரம்பமும், அதன் மூலம் தமிழனது
தொன்மையையும் கணக்கிடலாம்.
இனி அந்தச் செப்பேடுகள் தொடர்ந்து சொல்லும் வம்சாவளியைப் பார்ப்போம்.
த்ரேதா யுகம் முடிந்ததும் நரேந்த்ரபதி என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான்.
அப்பொழுது நடந்த யுகம் த்வாபர யுகம். அந்த யுகத்தின் முடிவில்தான்
கிருஷ்ணன் அவதரித்தான். மகாபாரத யுத்தம் நடந்தது.
இந்தச் செப்பேடுகளும் சோழ பரம்பரையைப் பற்றி இந்த யுகத்தில் அதிகம்
சொல்லவில்லை. ஆனால், நாம் ஆச்சரியப்படும் வண்ணம், போன கட்டுரையில்
பார்த்தோமே, வட சேடியை ஆண்ட உபரிசர வஸு என்னும் மன்னன் - அவனைச் சோழன்
மன்னன் என்று குறிப்பிட்டுள்ளது. செப்பேடுகள் தரும் இந்த செய்தி, பல
முடிச்சுகளை அவிழ்க்கிறது போல் தெரிகிறதே!
மனுவின் பரம்பரையில் வந்த மன்னர்கள் இமயம் முதல், புகார் வரை, ஏன்
அதையும் தாண்டி, இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள்
அண்ணன் தம்பிகளாக இருந்திருக்கலாம். அவர்கள் ஆங்காங்கே திக் விஜயம்
சென்று புது இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்க
வேண்டும். அப்படித் தமிழகப் பகுதிக்கு வந்து தனக்கென நாட்டை நிறுவியவன்
சோழவர்மன். அவன் பெயரை ஒட்டி சோழ நாடு என்னும் பெயர் வந்திருக்கிறது.
கண்ணகியின் காலக்கட்டத்தில், இந்திர விழா நடந்த சமயத்தில் இளங்கோவடிகளால்
சொல்லப்படும் ஒரு சுவையான தகவல்...
விழா நடந்த புகார் நகரில் பண்டசாலை என்ற சந்தை இருந்தது. அங்கே, வெளி
நாட்டு வணிகர்களும், உள் நாட்டு வணிகர்களும், விற்பனைக்குக் கொண்டு வந்த
பொதிகளை இறக்கியிருப்பார்கள். இன்னும் பிரிக்கப்படாமல், மூட்டை மூட்டையாக
அவை அங்கே குவிக்கப்பட்டிருந்ததாம்.
அந்த இடத்துக்கு பாதுகாப்பாக சுவரோ அல்லது காவலோ கிடையாதாம். யாராவது
திருடி விட மாட்டார்களா என்றால், திருடுவதற்குப் பயமாம். திருடன்
மாட்டிக் கொண்டால், அவன் கழுத்து முறியும் வரை அவன் தலையில் அந்தப் பொதி
மூட்டைகளை ஏற்றுவார்களாம்.
அந்தத் தண்டனையை நினைத்து நடுங்கியே, யாரும் அந்தப் பொதிகளைத் தொட மாட்டார்களாம்.
இது சோழன் சொன்ன நீதி.
இன்னும் வரும்
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள், பல்வேறு தளங்களிலிருந்தும்,
செப்பேடுகள் போன்றவை தரும் தகவல்களிலிருந்த
ும் பெறப்பட்டவை. இன்னும் இதுபற்றி நண்பர் சந்திரசேகரன் ஆறுமுகம்
அவர்களின் கருத்திற்காகக் காத்திருக்கிறேன்.
South Indian Inscriptions Volume_3 - Tiruvalangadu copper-plates of
Rajendra-Chola Inscriptions...
whatisindia.com
15 டிசம்பர் 2014 இல் 03:22 PM ·
தொகுத்தது · பொது
விரும்பாத பக்கம் · மேலும்
Go Greenமற்றும் வேறு 63 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
நண்பர்களைக் குறிப்பிடவும்
Chandrasekaran Arumugam
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள், பல்வேறு தளங்களிலிருந்தும்,
செப்பேடுகள் போன்றவை தரும் தகவல்களிலிருந்த
ும் பெறப்பட்டவை. இன்னும் இதுபற்றி நண்பர் சந்திரசேகரன் ஆறுமுகம்
அவர்களின் கருத்திற்காகக் காத்திருக்கிறேன். கிடைத்தவரை முன்னரே பல
இடுகைகளில் கொடுத்துவிட்டேன்! ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கும்
முசுகுந்தன் குறித்த தகவல்கள் உங்ளது பார்வைக்குக் கிடைக்கவில்லையோ! அது
கபிலரின் குறிஞ்சிப்பாட்ட
ு குறித்த அடிக்குறிப்பில் "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப்
பாடியது" என்ற வராற்றுக்குறிப்பிலிருந்தது துவங்குகிறது! பிரகதனும்
முசுகுந்தனும் சேர்ந்து நடத்திய நாடகமே முசுகுநதனின் முகரிப்பகுதியைப்
பிரகத்தன் என்ற சம்பரன் [செல்யுக்கஸ் நக்கந்தன்] தாக்கியதாகக்
குறிப்பிடப்பட்டது! இதனையே இராமாயணமும் குறிப்பிடுகிறத! சமாலிக்கமுடியாத
இந்திரன் [முசுகுந்த பரசுராமன்] தசரதனின் [உருவப்பல்ர் சேத்சென்னியின்]
உதவியை நாடினான் என்று! அப்போது முசுகுந்தனுக்குக் கொடுக்ப்பட்ட வேளிர்
படைகளின் சில பிரிவினரே ஒட்டுமொத்தமாகப் பூதம் எனப்பட்டது! பூதம்
காக்கும் புகழரும் கடிநகருக்குள் இப்படியாகத்தான் பிரகத்தனும் முசுகுந்த
பரசுராமனும் திட்டமிட்டு; அல்லாவின் - அலெக்சாந்தர்களின் - நந்தர்களின்
சூழ்ச்சியைச்செயல்படுத்தக் கொள்ளையர்களான இவர்களெல்லாம் சோழநாட்டுக்குள்
நுழைந்தனர்! கபிலரிடம் கல்வி கற்பவர்கள்போல் நடித்துச் சோழனின் பெண்ணைக்
கெடுத்தனர்! அந்தப் பெண்ணின் துயரால் விளைந்த அனைத்துமே வரலாறாகத்
தொல்தமிழ்ப்பாடல
்களில் மிகநீண்டதாகக் கொடுக்கப்பட்டுள்ளன! அந்தச் சோழச்சிறுமியின்
துயரங்கள் 2000 பாடல்களுக்குமேல் உள்ளன! காணத்தான் எவருமில்லை! எத்தனை
தமிழ்ப்பல்கலைக்கழகங்களும் முனைவர்களும் விரிவுரையாளர்களும்
வரலாற்றாய்வாளர்களும் தமிழர்களாக இருக்கிறார்களா? தேடித்தேடி
ஓய்ந்துவிட்டோம். எங்குமே திராவிட நெடியால் தமிழனின் வரலாறு
நொடித்துப்பொய்க் கிடக்கிறது!
தொகுத்தது · பிடிக்கவில்லை · 6 ·
பதிலளி · புகாரளி · 24 ஜனவரி
அனைத்து 2 பதில்களையும் பார்க்கவும்
கூர்ங்கோட்டவர்
இந்த முசுகுந்தன் போன்ற தொன்மவியற் சோழர்கள் பல சோழ அரசர்களின்
தொகுப்புப் பாத்திரமாகும். இவை காப்பியங்களிலும் கலிங்கத்துப்பரண
ி போன்ற பேய்கள் பேசும் படலம் முதலிய சுவையூட்டப்பட்ட கருத்துள்ள
இலக்கியங்களில் மட்டுமே இவர்கள் பெயர் காணப்படும். இவர்களோடு தொடர்பு
படுத்தப்படும் குழுமங்களுக்கான கதைகளும் அப்படித்தான் இருக்கும். எ.கா.
க்கு கார்காத்த வேளாளரில் 259 குடும்பங்கள் இருந்தன. அவர்களில் 64
குடும்பங்களை முசுகுந்தன் பாண்டிய நாட்டில் இருந்து வரவழைத்து முசிறியில்
குடி வைத்தான். இது காராண்மை என்னும் மீயாட்சிமுறை வளர்ந்த காலத்தில்
அதாவது கி.பி. 3-4ஆம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழ அரசனின் செயல். ஆனால்
கி.பி.450களில் களப்பிரர் படையெடுப்பு நடக்க கி.பிக்களில் ஆண்ட மூவேந்தர்
வேளி குறிப்புகள் சரியாக பதியப்படாமல் போகின்றன. அதனால் அக்காலத்தில்
நடந்த நிகழ்வுகளை எல்லாம் புராண பாத்திர பாண்டிய சோழரோடு
ஒப்பிட்டுக்கூறுவது வழக்கமாகும்.
காராண்மையை காத்ததால் கார்காத்தார் என இருந்த பெயர் களப்பிரர்
காலத்துக்கு பிறகு சரியாக சான்றின்மையால் நான்கு மேகங்களுக்கு பிணை
கொடுத்ததால் கார்காத்தார் என புரானக் கதை புணையப்பட்டதை அறியலாம். அந்த
96 குடும்பங்கள் இப்பொழுது வீரக்கொடி வேளாளர் எனத் தனிச்சாதியாகி ஏய்
நான்தான்டா பெரியவன்னு நீதான்டா பெரியவன்னு சண்டைப்போட்டுக்கிட்டுட்டு
இருக்குறாங்க.
பிடிக்கவில்லை · 5 · பதிலளி ·
புகாரளி · 19 டிசம்பர் 2014
3 பதில்கள்
Rathakrishnan RK
Thank u
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 2 மார்ச்
Chozhan Karikalan
The Indian National People's Federation.
Just now ·
(112). நாள்:28-12-14; ஆன்மீகம்.
தமிழரின் இந்துமதத்தில் வருணங்கள், சாதிகள், ஏதுமில்லை. கருமை மற்றும்
பழுப்பு நிற மனிதர்கள்.சிவன், முருகன், சிவலிங்கம், இயற்கை, மூதாதையர்
ஆகியோரை இறைவழிபாடு செய்யும் முறை
இருந்துள்ளது.
கணிதம், அறிவியல்,மொழி, சிறந்த நாகரீத்துடன் இந்தியா முழுமையும்
தமிழர்களே வாழ்ந்துள்ளனர்.
சித்தர்களும், முனிவர்களும் அனைத்து துறைகளிலும், முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
விவசாயமும் சிறந்த நிலையில் இருந்துள்ளது.
சிவலிங்கம் எதிர்மறை சக்தியாக, சிவமாக போற்றி, வணங்கினர் ! ஆண்மை -
பெண்மை, Organic - Inorganic, Positive - Negative, என உலகில் அனைத்து
விஷயங்களிலும் எதிர் மறை தத்துவமே இருக்கும்.
அணு அமைப்பு முதல் அண்டம் அமைப்பு வரை, ஒரே விதமான ஈர்ப்பு விசை தத்துவமே
என்பதை சிந்தித்தால் புரியும். ஓம் எனும் ரீங்காரத்துடன், கருவைச் சுற்றி
சுழன்று வரும்.சமஸ்கிருத மொழி தோன்றாத காலமது ! விதை ஒன்று, விளைவுகள்
பல. தொடர் நிகழ்வுகள். மனித இனத்தின் நீட்சி பரவியது.
மானுடவியல் தத்துவங்களும், முடிவுகளும், நவீன அறிவியல் வளர வளர
மாறுகிறது. தவறல்ல. உலகில் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதிருப்பது !
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 29 டிசம்பர் 2014
Manu Neethi Cholan
ARUMAI
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 16 டிசம்பர் 2014
Sethu Sathu
மகாபாரதம், இராமயணம் ஒரு கற்பனை கதை! என்பதை முதலில் புரிந்துக்கொள்ள
வேண்டும்! தேவலோகம், சொர்க்கம், அமிர்தம் என்பதெல்லாம் வடிகட்டிய புனைவு
என்பதை வரலாறு நிருபித்துவருகிறது! ஆரிய குப்பைகளை ஆராய்ச்சி செய்து
உங்கள் அருமையான நேரத்தை வீணாக்காதிர்! உங்கள் காலடிஇடமும் களவுபோகுது!
கஞ்சிக்கு வழியில்லாத கூட்டம் பெருகுது! அன்றைய அமிர்தம் இன்று
டாஸ்மாக்காக ஓடுது! அன்றைய தேவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்! நேற்றைய
அசுரர்கள் இன்றைய உழைப்பாளிகள்! உம்மை களவாடிய கூட்டத்திடமே
கைகட்டிநிற்காதிர்! விழித்துக்கொள்! இல்லாவிட்டால்
உறங்கநேரமிருக்காது!!!!!!!!!
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 3 பிப்ரவரி
Chandrasekaran Arumugam
அவனுடைய உண்மைபெயரை எப்படியெல்லாம் மாற்றியுள்ளனர் என்பதை அறிந்தால்
மயக்கமே வந்துவிடும் நண்பரே! முசு குந்தம் என்பது ஒரு படைக்கருவி என
எண்ணுகிறேன். குந்தம் என்பது வேல்போன்ற ஒரு படைக்கருவி; முசு என்பது
அந்தப்படைக்கருவ
ியின் ஒரு முனையில் இணைக்கப்பட்டதன் உருவம் குரங்குமுகம்போன்று
இருப்பதாகத்தெரிகிறது! ஆனால் இந்த முசுகுந்தனின் வரலாறு தெளிவாக இல்லையே!
கூர்ங்கோட்டவர்
இந்த முசுகுந்தன் போன்ற தொன்மவியற் சோழர்கள் பல சோழ அரசர்களின்
தொகுப்புப் பாத்திரமாகும். இவை காப்பியங்களிலும் கலிங்கத்துப்பரண
ி போன்ற பேய்கள் பேசும் படலம் முதலிய சுவையூட்டப்பட்ட கருத்துள்ள
இலக்கியங்களில் மட்டுமே இவர்கள் பெயர் காணப்படும். இவர்களோடு தொடர்பு
படுத்தப்படும் குழுமங்களுக்கான கதைகளும் அப்படித்தான் இருக்கும். எ.கா.
க்கு கார்காத்த வேளாளரில் 259 குடும்பங்கள் இருந்தன. அவர்களில் 64
குடும்பங்களை முசுகுந்தன் பாண்டிய நாட்டில் இருந்து வரவழைத்து முசிறியில்
குடி வைத்தான். இது காராண்மை என்னும் மீயாட்சிமுறை வளர்ந்த காலத்தில்
அதாவது கி.பி. 3-4ஆம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழ அரசனின் செயல். ஆனால்
கி.பி.450களில் களப்பிரர் படையெடுப்பு நடக்க கி.பிக்களில் ஆண்ட மூவேந்தர்
வேளி குறிப்புகள் சரியாக பதியப்படாமல் போகின்றன. அதனால் அக்காலத்தில்
நடந்த நிகழ்வுகளை எல்லாம் புராண பாத்திர பாண்டிய சோழரோடு
ஒப்பிட்டுக்கூறுவது வழக்கமாகும்.
காராண்மையை காத்ததால் கார்காத்தார் என இருந்த பெயர் களப்பிரர்
காலத்துக்கு பிறகு சரியாக சான்றின்மையால் நான்கு மேகங்களுக்கு பிணை
கொடுத்ததால் கார்காத்தார் என புரானக் கதை புணையப்பட்டதை அறியலாம். அந்த
96 குடும்பங்கள் இப்பொழுது வீரக்கொடி வேளாளர் எனத் தனிச்சாதியாகி ஏய்
நான்தான்டா பெரியவன்னு நீதான்டா பெரியவன்னு சண்டைப்போட்டுக்கிட்டுட்டு
இருக்குறாங்க.
பிடிக்கவில்லை · 5 · புகாரளி · 19 டிசம்பர் 2014
கூர்ங்கோட்டவர்
இந்த புராணப்பாத்திரக் குழப்பம் சோழரை விட பாண்டியருக்கு அதிகம்.
https://ta.wikipedia.org/s/6he
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
19 டிசம்பர் 2014
Chandrasekaran Arumugam
இராமாயணத்தில் மாறிசன் பரசுராமனும் இராவண செழியனும் சோழநாட்டை ஆள்வதற்கான
ஆரங்களையும் மாலைகளையும் திருடிசென்றபோது:
புறநாநூறு:378: ஊன்பொதி பசுங்குடையார் :
"தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடையி இய விடுபரி விடுப்பின்
நற்றார்க் கிள்ளி சோழன் கோயில்
.. ..விரல்செறி மரபின செவிதொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொழிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழைந்ததன் தலையே"என தென்பரதவர்க்கு எதிரான பலரையும்
வேளிர் உதவியுடன், வட வடுகரையும் அடக்கிய இளஞ்சேட் சென்னியால் சோழர்
மேன்மை பெற்றதைக் குறிப்பதாயினும்; பல அடிகள் நீக்கப்பட்டு,
எழுத்துக்களைச் சிதைத்து, மாற்றி, இராமாயணக் காட்சியொன்றைப் புகுத்தி;
செழியனையும், முசுகுந்தனையும் காட்டுகிறது.
மாறிச மசுகுந்த பரசுராமன் சோழநாட்டு இளவரசியைப் புணர்ந்து கெடுத்துக்
கடதிச்சென்றபோது: அகம்-7ல்:
.. .தன்சிதைவு அறிதல் அஞ்சி இன்சிலை .. .
தொலைவில் வெள்வேல் விடலையொடு என்மகள்
இச்சுரம் படர்தந் தோளே; ஆயிடை
அந்தக் கள்வர் ஆதொழு அறுத்தென
பிற்படு பூசலின் வழிவழி ஓடி
மெய்த்தலைப் படுதல் செல்லேன் இத்தலை
நின்னொடு வினவல் கேளாய்; பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி
.. .துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே" என சேட்சென்னி, மற்றும் புலவனின்
கூற்றாக வெளிப்படுத்துகிறது.
முசுகுந்த பரசுராமனால் புணர்ந்து கெடுக்கப்பட்ட இளவரசி: 151: "நல்நுதல்
பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்
கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மருக் கொண்ட வெண்கோட்டு யானை
கல்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற் கதில்ல தோழி கடுவன்
முறுஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சி
கறிவளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த
செம்முக மந்தி செய்குறி கருங்கால்
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன்
புந்தலைப் பாறுமயிர் திருத்தும்
குன்றக நாடன் இரவி னானே" என முசுகுந்தன் பாவையுடன் கொண்ட
களவுப்புணர்வினால்; இருவேறுபட்ட குடும்ப நெறிகள் கொண்டோரின்
தொடர்பால்; பாழ்பட்ட பெண்களின் துயர்தான் வரலாறாக மறைந்துள்ளது.
இப்பாடல்களில் காணப்படும் கானகவிலங்குகள் என்பவை விலங்குகள் அல்ல!
மாந்தரே என்பதைக் காண்கிறோம்!

Chandrasekaran Arumugam
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள், பல்வேறு தளங்களிலிருந்தும்,
செப்பேடுகள் போன்றவை தரும் தகவல்களிலிருந்த
ும் பெறப்பட்டவை. இன்னும் இதுபற்றி நண்பர் சந்திரசேகரன் ஆறுமுகம்
அவர்களின் கருத்திற்காகக் காத்திருக்கிறேன். கிடைத்தவரை முன்னரே பல
இடுகைகளில் கொடுத்துவிட்டேன்! ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கும்
முசுகுந்தன் குறித்த தகவல்கள் உங்ளது பார்வைக்குக் கிடைக்கவில்லையோ! அது
கபிலரின் குறிஞ்சிப்பாட்ட
ு குறித்த அடிக்குறிப்பில் "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப்
பாடியது" என்ற வராற்றுக்குறிப்பிலிருந்தது துவங்குகிறது! பிரகதனும்
முசுகுந்தனும் சேர்ந்து நடத்திய நாடகமே முசுகுநதனின் முகரிப்பகுதியைப்
பிரகத்தன் என்ற சம்பரன் [செல்யுக்கஸ் நக்கந்தன்] தாக்கியதாகக்
குறிப்பிடப்பட்டது! இதனையே இராமாயணமும் குறிப்பிடுகிறத! சமாலிக்கமுடியாத
இந்திரன் [முசுகுந்த பரசுராமன்] தசரதனின் [உருவப்பல்ர் சேத்சென்னியின்]
உதவியை நாடினான் என்று! அப்போது முசுகுந்தனுக்குக் கொடுக்ப்பட்ட வேளிர்
படைகளின் சில பிரிவினரே ஒட்டுமொத்தமாகப் பூதம் எனப்பட்டது! பூதம்
காக்கும் புகழரும் கடிநகருக்குள் இப்படியாகத்தான் பிரகத்தனும் முசுகுந்த
பரசுராமனும் திட்டமிட்டு; அல்லாவின் - அலெக்சாந்தர்களின் - நந்தர்களின்
சூழ்ச்சியைச்செயல்படுத்தக் கொள்ளையர்களான இவர்களெல்லாம் சோழநாட்டுக்குள்
நுழைந்தனர்! கபிலரிடம் கல்வி கற்பவர்கள்போல் நடித்துச் சோழனின் பெண்ணைக்
கெடுத்தனர்! அந்தப் பெண்ணின் துயரால் விளைந்த அனைத்துமே வரலாறாகத்
தொல்தமிழ்ப்பாடல
்களில் மிகநீண்டதாகக் கொடுக்கப்பட்டுள்ளன! அந்தச் சோழச்சிறுமியின்
துயரங்கள் 2000 பாடல்களுக்குமேல் உள்ளன! காணத்தான் எவருமில்லை! எத்தனை
தமிழ்ப்பல்கலைக்கழகங்களும் முனைவர்களும் விரிவுரையாளர்களும்
வரலாற்றாய்வாளர்களும் தமிழர்களாக இருக்கிறார்களா? தேடித்தேடி
ஓய்ந்துவிட்டோம். எங்குமே திராவிட நெடியால் தமிழனின் வரலாறு
நொடித்துப்பொய்க் கிடக்கிறது!
தொகுத்தது · பிடிக்கவில்லை · 6 ·
புகாரளி · 24 ஜனவரி
Puli Vamsam - புலி வம்சம்
இன்னும் வரும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே. இன்னும் அனைத்துத்
தகவல்களையும் ஒவ்வொன்றாய்ச் சேர்த்து படிப்பவர்களின் ஆர்வத்தினைத்
தூண்டிவிட்டு அவர்களையும் இதுகுறித்து ஆராய வைக்கவேண்டும் என்பதே என் அவா
நண்பரே. இன்னும் சரியான முறையில் இதனை ஆரம்பித்துத் தரவேண்டும். உங்கள்
தகவல்களையும் பொறுமையாய்ப் படித்து வருகிறேன்.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
16 டிசம்பர் 2014
Chandrasekaran Arumugam
இந்த முசுகுந்தன் சேரனுமல்ல, சோழனுமல்ல, பாண்டியனுமல்ல! ஆனால்
சோழநாட்டைக் கைப்பற்ற அலெக்சாந்தனின் துணையுடனும் பிரகத்த சம்பர -
செல்யுக்கஸ்நக்க
ந்தனின் துணையுடனும் சூழ்ச்சிசெய்தவன்! இரும்போரை எனவும் இவனுக்கு ஒரு
பெயருண்டு; மேலும் கொங்கன், தொண்டையன், திறையன், திரையன் எனவும்
பரசுராமன் எனவும் பல பெயர்கள் உண்டு. இந்த கணையன் இரும்பொரையே சேரனின்
வஞ்சியையும் சோழனின் உறையூரையும் கைப்பற்றியதோடு முன்னரே சோழ இளவரசியான
கரிகால்சோழனின் தங்கையையும் கெடுத்ததால் சோழன் எனவும் பாண்டியனெனவும்
வரலாறறியாத வரலாற்றாளர்களால் பிற்காலச்சோழரைப்போலவே
குறிக்கப்பட்டுள்ளான். நிச்சயாமாக இவன் செரனோ சோழனோ அல்ல! சேரநாட்டைப்
பரசுராமக்ஷேத்ரம் என்று சொல்கிறார்களே; அதற்கான வரலாறு எங்காவது
இருக்கிறதா என்று பாருங்கள்! அத்தோடு திருமாலின் அவதாரமாகவும்
குறிப்பிடுகிறார்களே; அதற்கான வரலாறு எங்காவது உள்ளதா என்றும் பாருங்கள்!
தெளிவற்ற இந்த முசுகுந்தனின் வரலாற்றை எங்குத்தேடினாலும் கிடைக்காது!
ஆனால் அவனது பெயரில் ஒரு ஊரும் அவனதுவழிவந்தோராக ஒரு மக்கள்கூட்டமும்
தென்னகத்தில் உள்ளனர். மோரியனை; முகரியன், முகரியரசன் என்றெல்லாம்
மாற்றிவிட்டனர். பிம்பிசாரனே இந்த முகரியரசன், அஜாதச்சத்ரு எனப்பட்ட
செவ்வேல் முருகன் - செங்குட்டுவனான அசோகனின் தந்தையான காலாஅசோகனே இந்த
முகரியரசன்! மாறீசன், துர்யோதனன் என்றெல்லாம் புராண இதிகாசங்களிலும்
வேதங்களிலும்கூட இந்திரனாக இடம்பெற்றவன்! பெருமலையரசன் - இமையவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக