|
16/9/15
![]() | ![]() ![]() | ||
Palani S N
உயர்ந்த மொழி.
மகாகவி பாரதி பாடுகிறான்.
”சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதை
தொழுது படித்திடடி பாப்பா...”
இங்கு பாரதி சொல் என்பதனை ”மொழி” என்கிற பொருளில் ஆண்டு உள்ளார். இதனை
இன்னும் தெளிவாக படிப்பதானால்,
”மொழியில் உயர்வு மொழி தமிழே - அதை
தொழுது படித்திடடி பாப்பா...” எனலாம்.
இங்கு ”சொல்லே” என்பதில் உள்ள ”ஏ” காரம் கவனிக்கத்தக்கது.
இந்த ”ஏ” காரமானது கவிஞன் ஒன்றனை உறுதியாக, ஐயத்திற்கு இடமின்றி,
கணக்குப் போல சொல்ல வரும்போது பயன்படுத்தும் ஒரு சிறப்பு எழுத்தாகும்.
அதாவது பாரதி சொல்ல வருவது, எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி உலக
மொழிகளிலேயே உயர்ந்த மொழியானது தமிழ் மொழியே என்பதாகும்.
இதனை பாடியவன் ஒரு கிணற்றுத் தவளை கவிஞனல்ல. தமது தாய் மொழியில் உள்ள
அறிவைப்போலவே, சமத்கிருதம், இந்தி, ஆங்கிலம் போன்ற 10 மொழிகளின்
அறிவினைப் பெற்றவன்.
எனவே, பாரதியின் மேற்படி கவிதை வரிகளே, தமிழ்ப்பகைவர்கள
ுக்கு இன்றுவரை சிம்ம சொப்பன வரிகளாக அமைந்து அவர்களை பயமுறுத்தி கொண்டிருக்கின்றன.
இதற்கு எதிர்வினையாக என்னென்வோ உளறிப்பார்த்தார்கள் எடுபடவி்ல்லை.
வாய்மைதானே வெல்லும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக