|
8/12/15
| |||
Babugee Nadar
இது மக்கள் பணம் ஓரு பைசாவுக்கும் கணக்கு கோரிய வெள்ளையன்......
1868-ம் ஆண்டு நெல்லை மருதூர் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால்,
ஏராளமானத் தண்ணீர் கடலுக்குச் சென்றது. உடைப்பை சீரமைக்க கிழக்கிந்தியக்
கம்பெனி நிதி கொடுக்க மறுத்துவிட்டது. அப்போது சீவலப்பேரி கிராம மக்கள்
ரூ.10 ஆயிரம் திரட்டி தாங்களே உடைப்பை சரிசெய்தனர். அணையிலும் ஏரிகளிலும்
இதுபோல அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் மருதூர் அணைக்கு கீழே ஆத்தூர்
கால்வாய், தென் திருப்பேரைக் கால்வாய், கொற்கைக் கால்வாய், கீழ் பிடாகைக்
கால்வாய் ஆகியவற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்தது.
இந்த நிலையில்தான் கேப்டன் ஹார்ஸ்லி என்பவர், மருதூர் அணைக்குக் கீழே ஒரு
அணையைக் கட்ட திட்டம் வகுத்தார். ஆனால், அதற்கும் கிழக்கிந்திய கம் பெனி
நிதி தர மறுத்துவிட்டது. அதன் பின்பு திருநெல்வேலி ஆட்சியராக பக்கிள்
நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நில அளவை பதிவுத்
துறையில் பணியாற்றியவர். அதனால், அந்தப் பகுதியில் அணையைக் கட்ட வேண்டிய
அவசியத்தை அவர் உணர்ந் திருந்தார். எனவே, கம்பெனியின் தலைமைக்கு அணையைக்
கட்ட வலியுறுத்தி பலமுறை கடிதங்கள் எழுதினார். ஆனால், அசைந்துக்
கொடுக்கவில்லை கிழக்கிந்திய கம்பெனி.
அப்போது, கடம்பா ஏரியின் மூலம் பாசனம் பெற்று வந்த தென்திருப்பேரைக்
கிராம மக்கள் அணையைக் கட்ட ரூ.20 ஆயிரம் திரட்டிக்கொண்டு வந்து
பக்கிளிடம் அளித்தனர். இந்தத் தகவல் லண்டனுக்குச் சென்றது. ரூ.20 ஆயிரம்
என்பது அன்றைய நாட்களில் மிகப் பெரிய தொகை. ஏற்கெனவே மக்கள் கிழக்கிந்திய
கம்பெனிக்கு நில வரி கட்டி வரும் நிலையிலும் இந்தப் பணத்தைக்
கொடுத்திருந்தார்கள். மக் களின் பங்களிப்பைக் கண்டு நெகிழ்ந்
துப்போனார்கள் கம்பெனியின் மேலதிகாரிகள்.
உடனே, “இந்திய மக்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆச்சர்யம் அளிக் கிறது.
அவர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. எனவே, அணையைக்
கட்ட கம்பெனி அனுமதி யளிக்கிறது. மக்கள் அளித்த நிதியில் ஒரு ரூபாய்கூட
வீணாக்கப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செலவிடப்பட வேண்டும். சரியான
கணக்கு வழக்கு களை கம்பெனியிடமும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று
உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக