புதன், 5 ஏப்ரல், 2017

நாயக்கர் ஆட்சி சாளுவர் துளுவர் பாண்டியர் பலிஜா தொடர்பு பேரரசு விரிவடைதல் சுல்தான் ஆட்சி முடிவு

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் வரும்
முன்னும் தமிழகத்தின் பெரும்பகுதிகள்வேறு இரு அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்தன.
அவ்வரசுகள் வடபகுதியை ஆண்ட கன்னட ஹொய்சளர்கள் (கி.பி.1225-1343) மற்றும்
தென்பகுதியை ஆண்ட மாபார் சுல்தான்கள் (கி.பி.1335-1378). அவ்வாட்சிக் காலம்
தனியே ஆராயத் தக்கது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியை அறிய விஜயநகரப் பேரரசின்
முக்கியநிகழ்வுகளை அறிய வேண்டியுள்ளது.
விஜயநகரப் பேரரசை நிறுவிய சங்கம மரபினர் ஹொய்சள அரச வம்சத்தோடு மணவுறவு
கொண்டிருந்த யாதவ வம்சத்தார் என்று பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் ஏற்கின்றனர்.
சங்கம மரபினர் மட்டுமின்றி ,சாளுவ, துளுவ மரபினரும் தங்கள் மரபினரோடு
மட்டுமின்றி ஆந்திர அரச மரபினரான ராஜு குலத்தாரோடும், வேளாண் மரபிலிருந்து
அரசியல் தொடர்புகளினால் நிலவுடைமையிலும் வணிகத்திலும் எழுச்சி பெற்றுவந்த பலிஜ
குலத்தாரோடும் மணவுறவு கொண்டனர். குமார கம்பணனின் மனைவி கங்காதேவியை பலிஜ
குலத்தவர் என்றும் நூல்கள் தெரிவிக்கின்றன.பலிஜ குலத்தார் விஜயநகர அரசர்களின்
மெய்க்காவல் துவங்கி படைத்தலைமை, நாயக்கஸ்தானம் வரை பெற்று அரசியலில் பலிஜ
குலத்தார் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர். இறுதியில் அரசாண்ட ஆரவீட்டு
மரபிற்கு பலிஜ குலத்தாரே உரிமை கோருகின்றனர். விஜயநகரப் அரசின் இலச்சினை
சாளுக்கிய மரபிற்குரிய 'வராகமே' என்பதால், விஜயநகர அரசமரபைச் சாளுக்கிய மரபோடு
இணைத்து ஊகிக்கவும் இயலும்.
கங்காதேவியின் மதுரா விஜயத்தில் பின்வரும் புனைவு ஒன்று உண்டு:
"சம்புவராயனை
வென்றதும் குமார கம்பணன் காஞ்சியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரது
கனவில் தேவ வடிவில் மதுரை மாதேவி (மீனாட்சி?) மதுரையின் அலங்கோல நிலையை
வருணித்து, மனித உலகம் கண்டிராத ஒரு ஒளி மிக்க வாளைக் கம்பணன் கையில் தந்து
மறைந்தாள்". தமிழர்களைத் தெலுங்கர் ஆள அங்கயற்கண்ணியே ஆசி தந்திருக்கிறாள்
போல.
முதலாம் புக்கனுக்குப் பின் ஆட்சிக்கட்டிலேறிய இரண்டாம் ஹரிஹரராயர்
(கி.பி.1377-1404)
காலத்திலேயே மதுரைப் பகுதிகளிலிருந்து சுல்தான்கள் ஆட்சிமுற்றிலும்
துடைக்கப்பட்டது. தமிழகப் பகுதிகளை வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை என நான்கு
மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை
நியமித்தார் ஹரிஹரராயர். இவர்களும் ராயரது அரச மரபினரே.
இரண்டாம் ஹரிஹரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு
வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் தேவராயர் (கி.பி.1426-144
6).
கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர்.
இப்போர்களில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர்கள் பேரரசுக்குப் பணிந்து அப்போது
கொற்கையிலிருந்தும் தென்காசியிலிருந்தும் சிற்றரசர்களாக நேர்ந்த பாண்டிய அரச
மரபினரே ஆவர். இவர் காலத்துத் தமிழக மண்டலங்களுக்கான
மகாமண்டலேசுவரர்
(தண்டநாயகர்) இலக்கண்ணராயர்.
இந்த இரண்டாம் அரிகரர் காலத்திலேயே தமிழகம் படைவீடு ராஜ்யம் (வேலூர்),
சந்திரகிரி ராஜ்யம் (சந்திரகிரி), சோழ ராஜ்யம் (தஞ்சை), மதுரை ராஜ்யம்,
திருவதிகை ராஜ்யம் (செஞ்சி) என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு, ராய
அரசமரபைச் சாராதவர்களும் மண்டலாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருக்குப் பின்
வந்த இச் சங்கமப் பரம்பரையினர் திறமையற்றவர்கள்.
கி.பி. 1485 இல் சந்திரகிரி ராஜ்ய மண்டலாதிபதியாக இருந்த சாளுவ நரசிம்மன்
பேரரசரானார். இவருக்குப்பின் இவர் மகன் இம்மடி நரசிம்மன். இவர்களைச் சாளுவப்
பரம்பரையினர் என்பர். இவர்களுக்குப் பின் பேரரசைக் கைப்பற்றியவர் இவர்களிடம்
படைத்தலைவராயிருந்த நரச நாயக்கர். இவரே துளுவப் பரம் பரையின் முதல்வர்.
துளுவப் பரம்பரையினரும் சாளுவரை ஒத்த மரபினரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக