புதன், 5 ஏப்ரல், 2017

நாயக்கர் ஆட்சி தெலுங்கு கன்னடர் கூட்டு குமார கம்பணன் மதுரை வரை கைப்பற்றிய நூல்

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
விஜய நகரப் பேரரசு
கி.பி.1336-இல் முதலாம் ஹரிஹரனும் முதலாம் புக்கனும் குரு வித்யாரண்யரின்
துணையோடு விஜய நகரப் பேரரசை நிறுவினார்கள் என்பதைப் பள்ளிப் பாடநூல்களில்
படித்திருப்போம். இன்று கருநாடக மாநிலத்தில் பெல்லாரியிலிருந
்து 56 கி.மீ.
தொலைவிலும், ஹாஸ்பெட் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் சிதைந்த
நிலையில் இருக்கிறது விஜயநகரம். விஜயநகரத்தைச் சங்கமர், சாளுவர், துளுவர்,
ஆரவீட்டார் ஆகிய நான்கு மரபினர் ஆட்சி புரிந்தனர். சங்கம, சாளுவ, துளுவ
மரபினர் கன்னடத்தையும், ஆரவீடு மரபினர் தெலுங்கையும் தாய்மொழியாகக்
கொண்டவர்கள் என்பர். எனவே கன்னடமும், தெலுங்கும் பேரரசின் ஆட்சி மொழிகளாக
இருந்தன. இராஜ நாராயணச் சம்புவராயர்
இக்காலத்தே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த
இராஜ நாராயணன் (கி.பி.1339-1363) என்பவர். சம்புவராயர்களின்
அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர்
மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம்.
சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா
நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில்
ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு
நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத்
தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.
குமார கம்பண உடையார்
சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் புக்கனின் மகனான குமார கம்பண உடையாரே தமிழகத்தைக்
கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். இவரது மனைவியான கங்கா தேவி
எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமஸ்கிருதக் காப்பியம்
குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது. கி.பி.1362 நவம்பர்
மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயருடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக்
கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார
கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமி
ருந்தும்,மதுரையைச்
சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம்
முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான
மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக