ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நாஞ்சில் வெள்ளாளர் உருது வம்சாவழி குமரி மாடத்தி

aathi tamil aathi1956@gmail.com

3/1/16
பெறுநர்: எனக்கு
கல்குளம் மங்கலம் என்ற ஊர் தொட்டு அகஸ்தீஸ்வரம் மணக்குடி
காயல்வரையிலான நெல்கொழிக்கும் நீர் வள நாட்டை “நாஞ்சில் நாடு”
என்கின்றனர். இந்நாட்டை நாஞ்சில் வள்ளுவனும் அவன் வழியினரும் ஆண்டு
அனுபவித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை. வடுகர்களான நாயக்க
மன்னர்களின் வஞ்சனையால் மதுரையில் பாண்டியப் பேரரசு முடிவுக்கு வந்ததைத்
தொடர்ந்து, விசுவநாத நாயக்கனின் அமைச்சனான அரியநாத முதலியாரின்
முயற்சியால் இந்த நாஞ்சில் நாட்டிலும் முதலியார்களை குடியமர்த்தினார்.
இவர்கள் 12 பிடாகைகளில் குடியமர்ந்தனர். இவ்வாறு குடியமர்ந்தவர்கள்
பிந்திய காலத்தில்
“வெள்ளாளர்” என்ற உழுதுண்போரின் குலப்பெயரை பிடுங்கியெடுத்து, “நாஞ்சில்
வெள்ளாளர்கள்” என்ற சிறப்புப் பெயரை எடுத்துக்கொண்டனர்.
இதனால் முதலியார்கள் வெள்ளாளர்கள் ஆயினர். இவர்கள் குடியிருக்கின்ற
இடத்தை “பிடாகை” என்றும் வகுத்துக்கொண்டனர். இந்த பிடாகை என்ற சொல் துளுவ
நாட்டு மொழியில் உள்ள ‘படாகை’ என்ற சொல்லின் மருஊ ஆகும். ‘படாகை’ என்ற
சொல்லுக்கு தமிழில் ‘பொரிய’ என்று பொருள்படும். எனவே இந்த
சொல்லால், இன்றைய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் எந்த ஊர்
என்பதை வெளிச்சமிடுகிறது. இவர்கள் துளுவ நாட்டில் உருதுமொழி
பேசப்படுகின்ற நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற  உண்மையையும் இதன்பால் காண
முடிந்தது. இந்த விளக்கத்தை ‘தமிழறிஞர்கள் பார்வையில் கவிமணி’ என்ற
தொகுப்பு நூலில் ‘கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம், ஒரு கருத்தாய்வு’
என்ற கட்டுரையில், பக்கம் 134-ல் எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே நாஞ்சில்
நாட்டு வெள்ளாளர்களின் பூர்வீகம் துளுவ மொழி பேசுகின்ற துளுவ நாடு
என்பதையே இது சுட்டி நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக