புதன், 5 ஏப்ரல், 2017

கங்கை தமிழ்ப் பெயர் சோழ மன்னன் வெட்டியது

aathi tamil aathi1956@gmail.com

29/10/15
பெறுநர்: எனக்கு
Arutchelvan Thiru
கங்கையாற்றை வெட்டியவன் பகீரதன் என்றழைக்கப்பட்ட பஃறேர் செம்பியன் என்ற
பழந்தமிழ்ச்சோழமன்னனே-அறிஞர் குணா.
கங்கையாறு என்றபெயர் எப்படி வந்தது?
கங்குல்=இருட்டு,கருமை.
கங்கையாற்றின் நீரோட்டம் கன்னங்கரேலென்று கருப்பு
நிறமாக இருந்ததால் கருமை என்றுபொருள்படும் கங்குல் என்றசொல்லின்
அடிப்படையில் கங்கை என்று
பெயரிட்டிருக்கிறான் சோழமன்னன்.அதற்கு அவன் மேற்கொண்ட கடும்முயற்சியைய
ே பகீரதமுயற்சி என்கின்றனர்.
எகிப்தில் ஓடும் நைல்ஆற்றின் உண்மைப்பெயர் நீலஆறு
என்பதேயாகும்(neel>nile).அதன் நீரோட்டம் நீலநிறமாக
இருந்ததால் கடல்கோளின்போது அங்குக்குடியேறிய
தமிழர்கள் நீலஆறு என்று பெயரிட்டிருக்கின்றனர்.
நெல்லைப்பகுதியில் ஓடும் தாமிரவருணியின் சரியானபெயர் தாமிரவண்ணி என்பதேயாகும்.
அந்த ஆற்றின் நீரோட்டம் செம்மண்கலந்து செம்பு அல்லது தாமிரவண்ணத்தில்
இருப்பதால் தாமிரவண்ணி
என்று பெயரிட்டிருக்கின்றனர்.
Ramasamy Arumugam Slm
== இன்றைய இந்திய மண், பண்டைய பரதவர் கண்டம் அல்லது நாவலந்தீவு என்னும்
குமரிக்கண்டத்தின் மீந்த பெருநிலப்பரப்பு வடக்காசிய பகுதிகளுடன்
இணைந்ததால் உருவாகி நின்ற பழந்தமிழர்பூமி என்பதும், `வடதிசை கங்கையும்
இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி ` என சங்க இலக்கியங்கள்
பாடுவதும். ஒட்டுமொத்த இந்திய பகுதியயும் தமிழ் மன்னர்களின் ஆளுகையில்
இருந்ததற்கான சான்றுகள். கங்கையைக் கொண்டுவந்தான் என்றால்,அங்கிருந்து
தென்தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்தான் என்று பொருள் கொள்ளா
மல்,மலையிலிருந்து தாறுமாறாக சென்ற ஆற்றை தேவையான பகுதிகளில் வெட்டி
முறைப்படுத்தி சீரான சமவெளி ஓட்டத்துக்கு வழி செய்தான் என்று கொள்ள லாம்;
இன்று பரந்து விரிந்திருப்பதுபோல் அல்லாமல், அன்று சாதாரண் நீரோட்டமாக
கங்கை இருந்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இமயம் முதல் குமரிவரை
தமிழர் பூமியாக இருந்தது இன்று வந்தேறிகளால் அபகரிக்கப் பட்டுவிட்டது
என்பதுதான் எல்லோரும் உணரவேண்டிய உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக