புதன், 5 ஏப்ரல், 2017

வம்ப மள்ளர் வடுக மள்ளர் என்றாகாது பள்ளர் சாதி திரிபு

aathi tamil aathi1956@gmail.com

6/11/15
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
வம்ப மள்ளர் என்ற ஒரு சொல்லாடல் இருப்பதால் அவர்கள் வந்தேறிகளாம். இந்த
வம்ப என்ற சொல் வம்ப மோரியர் வம்ப வடுகர் போன்ற வந்தேறிகளுடன் வருவதால்
மள்ளரும் வந்தேறிகளாம். அடக்கிரகமே.
வம்ப மள்ளர் என்ற சொல்லாடல் வரும் பாடல் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் எதிர்த்த பாண்டிய நாட்டுக்கு அயல்நாட்டவரை குறிக்கும்.
அதாவது பாண்டிய நாட்டை தவிர்த்த தமிழர் தேயப் பகுதிகளைக் குறிக்கும்.
ஆனால் மோரியரும் வடுகரும் தமிழர் தேயத்தில் இருந்தவர்களே கிடையாது.
இப்போது இந்த வம்ப என்ற சொல் வந்த பாடல்களைப் பார்ப்போம்.
“விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர - புறம் 78
மேலுள்ள பாடலில் செழியனை சிறுவன் என எள்ளி நகையாடி எதிர்த்து வந்தவர்கள்
வம்ப மள்ளர். செழியன் எதிர்த்தவர்கள் அனைவருமே தமிழ்த்தேசத்தில் பாண்டிய
நாடு அல்லாத வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
செம்புறழ்புரிசைப் பாழி நூறி, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" - (அகம். 375)
இந்த அகப்பாடல் வம்ப வடுகர் என்ற வந்தேறி அரசர்களைக் குறிப்பது. இவர்கள்
தமிழர் தேயத்தின் வட எல்லையான வேங்கடத்தின் வடக்கில் வாழ்ந்தவர்கள்.
அதைக்காட்டும் பாடல்களும் கீழே.
வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே" (குறுந்தொகை 11::5-8)
பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்" (அகம்.211:7-8)
இந்த வடுகர் பற்றிய இரண்டு பாடல்களுமே வேங்கடத்துக்கு உம்பர் மொழிபெயர்
தேயத்து எல்லையின் வடக்கில் வாழ்ந்தவர்களே வடுகர்கள் என்பதைக்
காட்டுகின்றன. உம்பர் என்றால் அடுத்த தாண்டி போன்ற பொருள்படும்.
மௌரியர் பற்றி நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அவர்கள் மகத நாட்டை
ஆண்டவர்கள். ஆரியரைப் பொருத்தவரை அவர்கள் இமயமலைச் சாரல் அருகில்
வாழ்ந்தவர்கள் என்பதை கீழுள்ள பாடல்கள் காட்டும். இமயமலையெனில் இன்றைய
இமாலயாசு இந்துகுசு மலைகளையும் சேர்த்தே எடுத்துக்கொள்ளலாம்.
ஆக வம்ப மள்ளர் என்பது பாண்டிய நாட்டுக்கு அந்நியரான மற்ற தமிழக
அரசர்களைக் குறிக்குமே அன்றி வேங்கடத்துக்கு வடக்கில் வாழ்ந்த வடுகரையோ
கங்கைக்கரை மோரியரையோ இமயமலை ஆரியரையோ போன்ற வந்தேறிகளைக் குறிப்பது அல்ல
என்பது தெளிவு.
இந்த வம்ப மள்ளர் சொல்லாடலை பயன்படுத்தி மள்ளரை வந்தேறிகளாக
சித்தரிக்கும் நபர்களின் வரிசையில் ஆடி 18 இயக்கத்தின்
கஞ்சாக்கொடுக்கிகளும் ஆதி சங்கரன்களும் வருகின்றனர்.
இவர்களின் பின்னால் திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரும் போவது
வருந்தத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக