ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தரம்கெட வைத்து அரிசி ரேசன் கடைகளில் விவசாயம் வேளாண்மை முறைகேடு

aathi tamil aathi1956@gmail.com

5/10/15
பெறுநர்: எனக்கு
Enathi Poongkathirvel
தமிழா! நீ ஏழையாக இருப்பதால் அல்ல... கொடுங் கோழையாக இருப்பதால்த்தான்
இந்த இழிநிலை !
இந்த படம் நியாய விலைக் கடையில் கொடுக்கப்பட்ட மூன்றுவகை அரிசிகளின்
மாதிரி. இதுபோல் பலவகை அரிசிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ஒன்றாவது அரிசி ஊரில் உள்ள சொந்த பந்தம் , பஞ்சாயத்து தலைவர் அல்லது
கவுன்சிலர்களுக்கு ஜால்ரா போடுவோர் , கூடுதலாக பணம் கொடுப்பவர்கள் ,
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் , ஊரில் உள்ள நம்மைப்போல நான்குபேர்களுக்கு
வழங்கப்படும் அரிசியாகும்.
இரண்டாவது ஊரில் எதையும் கண்டுகொள்ளாமல் சோறு இருந்தால் போதும் என்று
திரியும் ஆட்களுக்காக வழங்கப்படுகிறது.
மூன்றாவது அரிசி வயதான பெரியோர்களுக்கும் , எதையும் சகித்துக்கொண்டு ,
புழுங்கிக்கொண்டு ஒதுங்கி வாழும் அப்பாவிகளுக்காக வழங்கப்படுவது.
நகரப் பகுதியில் சில ரகம் , கிராமப்பகுதியில் பல ரக அரிசிகளை
பாரபட்சத்தோடு வினியோகிப்பது ஏன் ?
ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஏழையாக்கப்பட்ட மக்களுக்காக அரசே 1997 ஆண்டு
பொது விநியோக முறை எனும் நியாய விலைக்கடை விநியோகத்தை ஆரம்பித்தது.
மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்களின் நேரடி பயன்பாட்டிற்கு
விடாமல் தடுத்து சந்தைப்படுத்தியது.
அதனை சேமிப்பு என்ற பெயரில் கிடங்குகளை அமைத்து அரும்பாடுபட்டு விளைவித்த
பொருட்களையெல்லாம் தேக்கிவைத்து குப்பைகளாக்கியத
ு. பின்னர் அதே மக்களுக்கு லாரிகளில் கொண்டுவந்து சேர்த்தது.
வயல்களில் விளைந்த நெல்லினை அறுவடை செய்து தேவையான நேரத்தில் அவித்து
அருகே இருக்கும் அரவை மில்களில் கொண்டுபோய் அரைத்து நிம்மதியாய் உண்டு
வாழ்ந்த விவசாயிகளை இப்படி குப்பை அரிசிகளை தின்று பிழைக்க வைத்ததைவிட
சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் செய்த சாதனை வேறொன்றும் இருக்க
முடியாது.
இன்றுவரை அந்நிலையை உணராமல் உழுவதும் ,விதைப்பதும் , அறுப்பதும் பின்
அப்படியே நெல்லையெல்லாம் கமிசன் கடைக்காரர்களுக்கு விற்பதுவும் கடைசியில்
ரேசன்கடை வாசலில் அரிசிக்காக காத்திருப்பதுவும் தமிழக விவசாயிகளின்
மனநோயாகிவிட்டது.
" உடனடியாக மாற்றம் தேவை. இல்லையேல் நீ உழவு செய்த இடத்தில் இன்னொரு
இந்திக்காரன் உழுவான். நீ மாட்டுக்குப் பதிலாக வயல்களில் பயன்படுத்தப்
படுவாய்.
# சிந்திக்கவும்
- ஏனாதி பூங்கதிர்வேல்
விவசாயிகள் விடுதலைக் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக