ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மழை அறிவியல் நீர் சங்ககால இலக்கியம் நீர்மேலாண்மை

aathi tamil aathi1956@gmail.com

22/12/15
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
சமஸ்கிருத நூல்கள்: யாகத்திலிருந்து வரும் புகை மேகமாகி மழை பெய்கிறது.
தமிழ் நூல்கள்: கடல் நீர் ஆவியாவதால் மேகம் உருவாகி மழை பொழிகிறது.
திருப்பாவை-3
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். "
மழைப்பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத்தமிழர்கள் மிக முன்பே
அறிந்து கொண்டுள்ளனர் கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையாக
கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே
நிலைப்பட்டுவிட்டது.
பட்டினப்பாலையில்"வான்முகந்த நீர் மலைப்பொழியும் மலைப்பொழிந்த நீர்
கடற்பரப்பும் மாரிபெய்யும் பருவம் போல"{பட்டினப்பாலை:126}என்று
குறிப்பிட்டுள்ள
து,அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின்மீது பொழிந்து மலையில்
பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது இந்த நீர் சுழற்சியை{hydrogical
cycle}இன்றைய அறிவியல் உலகம் விளக்கிறது. இதுபோல "மறந்து கடல் முகந்த
கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
{நற்றிணை-99}என்றபாடல் வரிகள் கடல்நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழை
பொழியும் அறிவியலை கூறுகிறது. அகநானூறு "மாக்கடல் முகந்து மாதிற்று இருளி
பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை" என்று கூறுகிறது இதுவும் கடலில்
இருந்து நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலை கூறுகிறது,,,
இவ்வளவு அறிவியலோடு வாழ்ந்த எம் மூதையர்களை காட்டுமிராண்டிகள் என்று
தமிழ்மொழி நீச்சபாஷை என்றும் தமிழில் அறிவியல் இல்லை என்றும் சொல்லும்
அறிவிலிகளை என்ன சொல்லுவது.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக