சனி, 22 ஏப்ரல், 2017

பரதவர் பாண்டியர் போர்

aathi tamil aathi1956@gmail.com

19/8/15
பெறுநர்: எனக்கு
paravarmedia.blogspot.in/2015/07/blog-post.html?m=1
 பார்ப்பனியத்தால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மட்டும் அல்ல,கடற்க்கரை
#பரதவர்களும் உள்வாங்கப்பட்டனர்.பழைய திருவான்கூர் சென்சஸ் ஆவணங்களில்
#பரதவர்கள் சத்திரியர்கள்,பிராமணர் வீடுகளில் தான் உணவருந்துவார்கள்
என்று உள்ளது.நாயக்கர் வருகைக்கு முன்னர் ஆண்ட
பாண்டியர்கள்,#பரதவர்களே.மதுரை
யில் பாண்டியன் மறைந்ததும்,கொற்கை
பாண்டியர் அங்கு சென்று பதவி ஏற்றதாக பதிவு உள்ளது.மதுரை
காஞ்சியில்,#பரதவர்,#மறவர் ஆகிய இரு குடிகளையும் பற்றியே அதிகம்
பாடப்படுகிறது.அதில்,போரில் வெற்றி கொண்டு திரும்பும் நெடுசெழியனை "பரதவ
மகளிர் குரவையோலித்து" வரவேற்கின்றனர்."#தென்பரதவர் போரேறே " என்று
அழைக்கபடுகிறான்.சோழன் இளஞ்சேட்சென்னியின் மெய்கீர்த்தியில் "தென்
#பரதவர் மிடல் சாய,வடவடுகர் வாளோட்டிய" என்ற வரிகளையும் ஆழ்ந்து
பார்க்கவேண்டும்.சோழனும் பாண்டியனும் பரம எதிரிகள்,பாண்டியன் தான்
சோழனுக்கு தெற்க்கே ஆண்டவன்,வடக்கில் வடுகரும் தெற்கில் #பரதவரும் என்று
கூறுவதன் மூலம்,தெற்க்கே பாண்டியரை வென்றமையையே தென் #பரதவர் மிடல் சாய
என்று கூறுகின்றார்.சேரன் செங்குட்டுவனும் "பணித்துறை பரதவன்" என்று
அழைக்கப்படுகிறான்.சிலப்பதிகாரம்,"அரசகுமரரும்,பரதகுமரரும்","அரசர்
முறையோ,#பரதர்முறையோ",பரதவ குமரன் என்று கோவலன் அழைக்கப்படுகிறான்.
கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியது மருத நிலத்தில் என்றும்,பள்ளர்களே
பாண்டியர்கள் என்று சிலர் கூறுகிறார்கள்..கழார் பெருந்துறையை,#பரதவர்
கோன் மத்தி என்பவன் ஆள்கிறான் (புகாருக்கு அருகில் அமைந்த பகுதி ),அவன்
எழினி என்ற குறுநில மன்னனை வென்று அவனது பற்களை தனது வெண்மணி கோட்டை
சுவற்றில் பதிக்கிறான்..ஆக நெய்தல் நிலத்தில் கோட்டையமைத்து #பரதவர்
ஆட்சி செய்தது உறுதியாகிறது.பாண்டியகளின் முதல் இரண்டு சங்ககால
தலைநகரங்களும் நெய்தல் நகரங்களே தென்மதுரை ,கபாடபுரம்
(கபாடம்-முத்து)...இரு நகரங்களையும் கடற்கோளால் இழந்த பாண்டியன் மூன்றாம்
தலை நகரை அன்றைய கூடல் நகர்,இன்றைய மதுரையில் நிறுவினான்..தனது
முத்துகுழி தொழிலையும் காக்க கொற்கையில் தங்கினான்.நிர்வாக
தலைநகரம்,வர்த்தக தலைநகரம் என்ற யுக்தியை கையாண்டான்.#பரதவர் வரலாறு மிக
தொன்மையானது,மிக நெடியது..இன்று அரசாண்ட பரமபரை என்று சொல்லிகொள்ளும்
எவராலும் இத்தகைய தொன்மையான ஆதாரங்களையோ,வரலாற்று ஆதரங்கலையோ கொடுக்க
முடியாது..நமக்கு இணையாக வரலாற்றில் அதிகம் பேசப்படும் இனம் மறவர்
என்னும் இனம்,அவர்கள் கூட நமது போர் தளபதிகளும்,போர்
வீரர்களும்,சிற்றரசர்களும் தான்.இன்னும்
சொல்லப்போனால்,மறவர்களும்,உள்நாட்டு #பரதவர்களின் (பாண்டிய அரசவம்சம்
நீங்கலாக) மணஉறவு கூட கொண்டிருந்தனர்.பந்தளம்,பரவூர் மகாராஜாக்கள் கூட
பாண்டியகளிடம் தான் மணஉறவு கொண்டிருந்தனர்.அவர்களும் மீன் சின்னத்தை
தங்கள் அரச முத்திரைகளில் பயன்படுத்தி உள்ளார்கள்.மண்டைக்காடு கலவரம்
நடந்ததே,அந்த பகவதி அம்மன் கோயில் மீனவர் கோயில்,மீனபரணி நாள் தான் அங்கே
விசேஷம்.ஐயப்ப பக்தர்கள் #பரவர்களுடன் மோதினார்களே.அந்த ஐயப்பன்,பந்தளம்
மகாராஜாவின் மகன்..சுற்றி சுற்றி,ஒரே முடிச்சை தான் அவிழ்க்க சொல்கிறது
இந்த நிகழ்வுகள்.மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ
வீதி,#பரதர்களுக்கானது,கன்னியாகுமரி பகவதியின் கிழக்கு வாசல் #பரதவர்
வாசல்..இவை இன்று நமக்காக காத்திருந்து அடைக்கப்பட்டுள்ளது.திருசெந்தூர்
முருகனுக்கு தேர்வட உரிமை நம்முடையது..இன்று அது சிவந்தி ஆதித்தனாரின்
முன்னோர் கட்டியதாக நம்மிடமே கதையளக்க படுகிறது.பழனி முருகனின் பத்தாம்
நாள் மண்டகப்படி #பரதவருடயது..இதெல்லாம் நான் சொல்லவில்லை இந்து மக்கள்
கட்சி தலைவரே ஒப்புக்கொள்கிறார்.கன்னியாகுமரி பகவதி நம் #பரதவர்
தெய்வம்,அந்த கோயில் #வில்லவராயர்களுக்கு சொந்தமானதென்று திருவாங்கூர்
செசன்ஸ் சொல்கிறது.கன்னியாகுமரி #வில்லவராயனை "தம்பி" என்று மார்த்தாண்ட
வர்மா அழைக்கிறார்."#பரத வர்மா" என்ற பெயர்களும் நம்மவர்கள் பயன்படுத்தி
உள்ளார்கள்."வர்மா" என்ற பெயர் பார்பனிய வழக்கப்படி சத்திரியர்களுக்கு
சொந்தமான பெயர்.மார்தண்ட வர்மாவின் ஆட்சிகுட்பட்ட பகுதியில்,#பரதவர்மா
என்ற பெயர் கொண்டு சத்திரியன் அல்லாதோர் வாழ்திருக்கவே முடியாது.குமரி
மண்ணில் ஏகப்பட்ட வரலாறு புதைந்திருக்கின்றது..நம் வரலாற்றை யார் யாரிடமோ
விட்டுகொடுத்து விட்டு தாழ்ந்தோர் என்று நம்மை நாமே
நினைத்துகொண்டிருகிறோம்."குல தாழ்ச்சி,உயர்ச்சி சொல்லல் பாவம்" ஆனால்,நம்
சுயத்தை இழந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது மூடத்தனம்.
நன்றி: பரதவர் பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக