சனி, 22 ஏப்ரல், 2017

நாடார் பற்றி பனை தொழில் சங்ககால நூல்களில் வட புராண பனை குறிப்பு இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
Prasanth PS
நாடார் குமரி மாவட்டதிண் குடிகளே.
சாண்றோர் சாதியிண் ஒரு பிரிவே சாணார். சாணார் எண்றால் சிவணிண் மறு பெயர்
அறிவீர்களா. சாணார் போர் படையிண் பயிற்ச்சியாளர்கள் அறிவுர்களா. சாணார்
சாண்றோர்களில் கலந்து விட்டண

சாணார்கள்(நாடார்கள்) இலங்கையிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில்
குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது அங்கிருந்து
பனங்கொட்டைகளை கொண்டுவந்தனர் தமிழகம் முழுவதும் விதைத்தனர். அதற்க்கு
முன் இந்தியாவில் பனைகள் கிடையாது. இலங்கையிலிருந்து பனையேறிப்
பிழைப்பதற்காக வந்தவர்கள் நாடார்கள், என்று அறிவுகெட்ட ஆங்கிலேயன்
கால்டுவெல் கூறுவதை நம்பும் அடிமுட்டாள்களே..
இதை முழுவதும் படியுங்கள்.
பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
பனை ஓலையில் தான் சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்டன மறந்துவிட்டீர்களா? இந்த
அடிப்படை அறிவுகூட இல்லையா? அப்படியென்றால் பனை இழைகள் இலங்கையிலிருந்து
இங்கு இறக்குமதி செய்யப்பட்டு. அதை சந்தையில் வாங்கி அறிஞர்கள் இலக்கியம்
இயற்றினார்களா?
அந்த இலங்கை பனையதான் பலராமன் கொடியாகக் கொண்டானா?
“அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்”
“வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்” –(கலித்தொகை 104-7,8)
(நாஞ்சில் – கலப்பை ; கலப்பை ஆயுதத்தையும் பனைக்கொடியையும் உடைய பலராமன்)
“பானிற வுருவிற் பனைக்கொடியோனும்” - (புறநானூறு 33-2,3)
பனை பற்றிய வேறுசில பாடல்கள்.
“பனைநுகுப் பன்ன சினைமுதிர் வராலோடு” –புறநானூறு 148-5
(வரால் மீனுக்கு பனம்பாளை உவமையாகக் கூறப்பட்டது)
“பனைத்திர ளன்ன” – அகநானூறு 148-1
“முழாவரைப் போத்தை” –புற 85-7.357-4.
(முழவைப் போன்று பெருத்த அடியை உடைய பனைமரம்)
“ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளறையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்..” – புற 288- 1,2,3
(இரவில் தோன்றும் அனுடத்தின் ஆறு நட்சத்திரங்களும் பனை போன்று தெரிவதால்
அனுடத்திற்கு முடப்பனை என்று பெயர்)
“பனைத்தலைக் கருக்கு நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்” –குறுந்தொகை 372-1,2,3
(பனையின் உச்சியிலுள்ள கருக்குடைய நீண்ட மடல்களை,காற்றினால் வீசப்படும்
மணல் மறைக்கும். அத்தகைய மணல்மேடுகலை உடைய கடற்கரையில்..)
இவ்வளவு ஏன்? இராமபிரான் பரிசாக பெற்ற பனைமரம் தெரியுமா?
இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு
விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன
ஏழு பனை மரங்கள்" என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இராமன் ஒரே அம்பில்
ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம்
பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.
கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆராய்ச்சிப்
புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M
Gupta) ராமபிரான்
ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில்
இருப்பதாக அவர் எழுதி இருந்தார். அதுவே இப்போது நீங்கள் பார்க்கும்
புகைப்படம்.
ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப்
பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம்
அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.
அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட
என்றும் தால என்றும் எழுதப்படும்.
இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம்..
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் (பெருந்தலைவர் காமராஜரைப்போல
அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர்) அவருடைய கொடியில் இருந்த
சின்னம் பனைமரம்.
இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன்
சின்னம் தங்கப்பனை.
சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை.
இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனை....ஏதோ
இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு
முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள்
என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று
தமிழர்கள் நினைத்து விடக்கூடாது.
நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு
இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன காத்திருங்கள் தருகிறேன்.
nadarsonline.blogspot.in/2015/03/blog-post_30.html?m=1

5 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு
  3. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசர் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.

    பாணப்பெருமாளுக்கு அரபு ஆதரவு

    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலத்திரி வம்சத்தை நிறுவினார்.

    மஹோதயபுரம் சேரரின் தலைநகர் மாற்றம்

    கி.பி 1075 முதல் அலுபா இராச்சியத்தின் துளு படையினரால் கேரளா தாக்கப்பட்டது, கடைசி கொடுங்கலூர் தமிழ் சேர மன்னர ராமவர்மா குலசேகரப்பெருமாள் தமது தலைநகரத்தை கொல்லத்திற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியது. ராமவர்மா சேரா-ஆய் வம்சத்தின் ராஜாவாக ராமர் திருவடியாக மாறினார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை ஒருபோதும் பிரிக்கவில்லை. கொல்லத்தின் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார். இது பிற்கால சேர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வில்லவர் குலங்கள் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தன.

    கி.பி 1310 இல் பாண்டியன் இராச்சியத்துடன் மாலிக் காஃபூரின் போர்

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது.
    இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையில் நடந்த போரில் டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டார். 2 லட்சம் வலுவான டெல்ஹி இராணுவத்தின் தளபதி மாலிக் கஃபூர், 50000 போர்வீரரகளை மட்டுமே கொண்டிருந்த பாண்டிய நாட்டை ஆக்கிரமித்தார். பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் டெல்ஹி படைகளால் வேட்டையாடப்பட்டனர்.

    கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.

    துளு சாமந்தா ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கேரளா

    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமூதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்

    கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு தமிழ் வில்லவர் இடம்பெயர்வு

    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    வேளாளர் நாயருடன் சேர்ந்தனர்

    கி.பி 1335 இல் துளு ஆட்சி நிறுவப்பட்டபோது
    வேளாளர் மருமக்கத்தாயம் மற்றும் பெண்வழி வாரிசுரிமை என்னும் நாயர் பழக்கவழக்கங்களை ஏற்றுகொண்டனர். பல கணவருடைமை சம்பந்தம் என்னும் சம்பிரதாயங்ஙளையும் கடைப்பிடித்து வந்தனர்.
    நாயர் தாய்மார்களின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்துவதால், இப்போது பல நாயர்களில் வெள்ளாளரின் பிள்ளை குடும்பப்பெயர் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. துளு படையெடுப்பு

    துளு பிராமணர்
    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

    துளு பிராமணரின் ஆதிக்கம்

    துளு பிராமணர்கள் கி.பி 1335 இல் நிலப்பிரபுக்களாக மாறினர். மேலும் 500 நம்பூரி சங்கேதங்கள் கேரளாவில் பயிரிடக்கூடிய பெரும்பாலான நிலங்களை கட்டுப்படுத்தின. பல நம்பூதிரி குடும்பங்கள் 5000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வைத்திருந்தன.

    ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக
    மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.

    துளு வம்சத்திற்கு டெல்ஹி படையெடுப்பாளர்களால் கேரளா வழங்கப்பட்டது

    பரசுராமனால்தான் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டதாக நம்பூதிரிகள் கூறுகிறார்கள். அவர்கள் உண்மையில் துளு படையெடுப்பாளரான பாணப்பெருமாளுடன் கி.பி 1120 இல் கேரளாவுக்கு வந்தனர். அரேபிய ஆதரவோடு பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார்.

    பரசுராமனால் கேரளா தங்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பபூதிரிகள் கூறினர். ஆனால் கேரளாவை துளு-நேபாள மக்களுக்கு அதாவது சாமந்தா, நம்பூதிரி மற்றும் நாயர் ஆகியோருக்கு கி.பி 1311 இல் மாலிக் காபூர் வழங்கினார். பாண்டிய வம்சத்தின் கீழ் உள்ள தமிழ் படைகள் மாலிக் கஃபூரால் தோற்கடிக்கப்பட்டன. அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானேட்டின் கூட்டாளிகளான நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களுக்கு கேரளா வழங்கப்பட்டது.


    கி.பி 1120 இல் கேரளா மீது படையெடுத்த போது அரேபியர்கள் பாணப்பெருமாளை ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத் தழுவி அரேபியா சென்றார். பாணப்ப்பெருமாளின் இராணுவம் படைமலை நாயர் (கிருஷ்ணன் முன்ஜாத்) தலைமையில் இருந்தது. படைமலை நாயர் மாலத்தீவுக்குச் சென்று, இஸ்லாம் மதத்தைத் தழுவி, ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பல நாயர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பாணப்பெருமாளின் மருமகன் தர்மடத்தின் மன்னராக இருந்த மகாபலி. மஹாபலி இஸ்லாம் மதத்தைத் தழுவி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னர். வடக்கு கேரளாவில் ஒரு பெரிய குடியேற்றத்தை மேற்கொண்ட அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். இவ்வாறு கி.பி 1120 இல் கடலோர கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் வடக்கு கேரளாவை கைப்பற்றினார்.

    பதிலளிநீக்கு
  5. துளு படையெடுப்பு

    1156 முதல் 1314 வரை துளு மக்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் மீது ஆட்சி செய்தனர் . டெல்லி சுல்தானேட் இராணுவத் தலைவர் மாலிக் கபூர் பாண்டிய சாம்ராஜ்யத்தைத் தாக்கியபோது துளு கோலாத்திரி வம்சம் அவருக்கு ஆதரவளித்தது. பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு துளு வம்சமும் அதன் நாயர் வீரர்களும் நம்பூதிரிகளும் தெற்கே நகர்ந்து முழு கேரளத்தையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது கேரளாவில் நான்கு துலு-நேபாளி ராஜ்யங்கள் நிறுவப்பட்டன.

    இதனால் கேரளா நேபாளத்தின் அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளு சாமந்த க்ஷத்ரியர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் ஆகியோரின் கைகளில் விழுந்தது. துளு-நேபாளி மக்கள் தங்களை சவர்ணர் என்று அழைத்தனர். கேரளாவின் பழங்குடி திராவிட மக்கள் அவர்ணர் என்று அழைக்கப்பட்டனர்.

    இதன் பின்னர் கேரளா கோயில்கள் அனைத்தும் துளு-நேப்பாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன .. போர்த்துகீசியர்கள் வந்தபோது கொச்சி மன்னரும் அவரது நாயர் வீரர்களும் இடுப்பு துணிகளை, (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தனர்.

    ஆனால் ஐரோப்பியர்கள் துளு படையெடுப்பாளர்களை ஆதரிக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேப்பாளி இராச்சியங்களை 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். கேரளாவின் வில்லவர் மக்கள் பழங்காலத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்திருந்தனர். ஆனால் கி.பி 1310 க்குப் பிறகு வில்லவர் ஒடுக்கப்பட்டனர்.

    ஆனால் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வில்லவரின் எதிரிகளை ஆதரித்தனர். வில்லவர் தங்கள் நிலத்தையும் சுதந்திரத்தையும் இழந்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் வில்லவர்களுக்கு கேரளாவில் பூர்வீகம் இல்லை என்றும் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதினர். கி.பி 1120 முதல் 1947 வரை கேரளா வெளிநாட்டு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. வில்லவர் மக்கள் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    இன்று மலையாள மொழியின் பாதி நேபாள மொழியைக் கொண்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் "சமஸ்கிருதம்" உண்மையில் நேபாள மொழி என்பதை மலையாளிகள் ஒருபோதும் உணரவில்லை.

    இது 600 ஆண்டுகளாக கேரளாவை ஆண்ட துளு-நேபாள ஆட்சியின் விளைவாகும்.
    அரேபியர்களும், டெல்லி சுல்தானேட்டும் பலவீனமான துளு ஆட்சியாளர்களை ஆதரித்தனர். அதனால்தான் ஒரு போர் கூட இல்லாமல் அவர்களுக்கு கேரளா கிடைத்தது.

    பதிலளிநீக்கு