ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கணபதி ஸ்தபதி மாயன் நாகரீகம் கள ஆய்வு மயன் தமிழரே மெக்சிகோ ஆசாரி சிற்பம் பெருந்தச்சன் நாகரீகம்

aathi tamil aathi1956@gmail.com

18/10/15
பெறுநர்: எனக்கு
டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 3
உங்களுக்கு ’மச்சு பிச்சு’ தெரியுமா?” ஸ்தபதியார் கேட்டதும் நான் ‘அச்சு
பிச்சு’ போல் விழித்தேன்.
காரணம் நான் அப்போது ’மச்சு பிச்சு’ பற்றி அறிந்திருக்கவில்லை. (ஆனால்
இப்போது தெரியும். அது மாயன்களின் நாகரிகம் உச்சத்தில் அமைந்த ஓரிடம்.
அங்கு உள்ள சூரியனுக்கான கோயில் மிக முக்கியமானது. மச்சு பிச்சுவின் அழகை
நீங்கள் கீழே பார்க்கலாம் ;-)
”மச்சு பிச்சு மாயன்களின் முக்கியமான வழிபாட்டுத் தலம். அங்கே முக்கியமான
பல கோயில்கள் உள்ளன. அவர்கள் ‘பச்சமா’ என்ற தெய்வத்தை வழிபட்டுள்ளனர்.
’பச்சையம்மன்’ என்ற தெய்வ வழிபாடு நம்மிடம் உள்ளது. அதுபோல அங்குள்ள
கட்டிடங்களை நான் அளந்து பார்த்த போது அச்சு, அசல் அவை அப்படியே நமது
பாரம்பரிய அளவீட்டு முறைகளை, அதாவது 8க்கு8 என்ற அளவு முறைகளைக்
கொண்டிருந்தன. குறிப்பாக ‘சிலம்பலம்’ என்ற பகுதி ஆகாய வெளி
வழிபாட்டுக்கானது. அது நமது சிதம்பரத்தை எனக்கு நினைவூட்டியது. சூரியக்
கடவுளுக்கான கோயிலும் உள்ளது. அவர்கள் கட்டிய பிரமிடுகள், அவற்றின்
அளவுகள் எல்லாம் நமது ஆலய அமைப்பை, மயன் எங்களுக்கு விதித்துச் சென்றுள்ள
மரபை அப்படியே ஒத்திருக்கின்றன. மாயன்கள் நம்மைப் போலவே குரங்குக்
கடவுளை, கருடனை, பாம்புகளை வழிபட்டுள்ளனர். அங்கு அவற்றின்
சிற்பங்களையும் பார்த்தேன்.
நமது வழிபடும் கடவுள்களுக்கும் அவர்களது கடவுள் வழிபாட்டிற்கும் தொடர்பு
உள்ளது. ’யானை’ ஓவியம் சிற்பம் கூட ஓரிடத்தில் இருந்தது. அதுபோல
மாயன்களின் பெயர்களும், சில இடங்களின் பெயர்களும், பொதுவான யோகா,
குண்டலினி போன்றவற்றிற்கு அவர்கள் குறிப்பிடும் பெயர்களும் நம் பாரம்பரிய
பெயர்களோடு ஒத்துப் போகின்றன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்,
மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளுக்கும், அவர்களுடைய
வேலைப்பாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு, ஒற்றுமை இருக்கிறது. இப்படி
நான் செய்த பல ஆராய்ச்சிகள் மூலம் ’மாயன் நாகரிகம்’ பண்டைய தமிழ்
நாகரிகமே என்ற முடிவிற்கு வந்தேன். அதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளும்
சமர்ப்பித்திருக்கிறேன். நூல் ஒன்றும் எழுதியிருக்கிறேன். வெளிநாட்டில்
இருக்கும் பல ஆய்வாளர்கள் என் ஆய்வோடு ஒத்துப் போகின்றனர். மாயன் இன
மக்கள் இங்கிருந்து அங்கு சென்றவர்கள். இது குமரிக் கண்ட அழிவையொட்டி
நடந்திருக்கலாம். அதனால் தான் இத்தனை திறமையுடன் இருந்திருக்கின்றனர்”
என்றார் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி.
மாயன் கலாசாரம் பற்றி ஸ்தபதி எழுதிய நூல்
“ஆக, மாயன்கள், என்பவர்கள் ’மயன்’ வழி வந்தவர்கள். தமிழர்கள்
என்கிறீர்கள். சரிதானே!”
”ஆமாம்”
“சரி, அவர்களுடைய காலண்டர் பற்றிச் சொல்லுங்கள். அது டிசம்பர் மாதத்தில்
21ம் தேதியோடு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு அதில் தேதிகளே இல்லை.
அதனால் அன்றோடு உலகம் அழிந்து விடும் என்று சிலர் நம்புகிறார்கள்.
அதுபற்றிச் சொல்லுங்கள்.”
“இப்படியெல்லாம் யார் சொன்னது? உங்களைப் போன்ற பத்திரிகைக்காரர்கள்,
மீடியா ஆசாமிகள்தான் இப்படிச் சொல்லி வருகின்றனர்”
“இல்லை. வெளிநாட்டில் சிலர் இப்படி பேசி, எழுதி வருகின்றனர். வருடங்கள்
ஆக ஆக இது இன்னமும் தீவிரம் ஆகும்”
“கணக்குத் தெரியாத சில விஞ்ஞானிகள் குழப்பத்தில் இப்படிச்
சொல்லியிருக்கலாம். ஏனென்றால் மாயன்கள் பல காலண்டர்களைப்
பயன்படுத்தியிருக்கின்றனர். நம்முடைய பஞ்சாங்கத்தையே எடுத்துக்
கொள்ளுங்கள். சக ஆண்டு இருக்கிறது, சாலிவாகன சகாப்தம் என்கிறோம்.
வர்த்தமானம் என்கிறோம். அப்புறம் பசலி, கொல்லம், வள்ளுவர் ஆண்டு, தமிழ்
ஆண்டு, தெலுங்கு வருடம் இஸ்லாமியர் வருடம், கலியப்தம் என்று நிறைய
கணக்குகள் இருக்கிறது. நாம் பொதுவாக கிறிஸ்து பிறந்ததை வைத்து
கி.மு.கி.பி என பயன்படுத்துகிறோம். அதுபோல மாயன்களும் பல காலண்டர்களைப்
பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் ஒன்று டிசம்பர் 2012ல் முடிகிறது.
அவ்வளவுதான்.
நமக்கு பிரபவ, விபவ என 60 வருடங்கள். கடைசி ஆண்டு அக்ஷய. அது முடிந்ததும்
மீண்டும் பிரபவ, விபவ என சுழற்சி ஆரம்பிக்கும். அதுபோலத் தான் மாயன்
காலண்டரும் சுழற்சி முறையிலானது. டிசம்பர் 21ல் அது முடிந்தால் மறுநாள்
அது ’0000’ என்று அவர்களது பாரம்பரியப்படி புதுநாளை அடைகிறது. உலகம்
நிச்சயமாக அன்று அழியாது. கெட்டதையே பேசிக் கொண்டிருப்பவர்கள் ’சும்மா’
இது போன்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மாயன் காலண்டருக்கும் நம்முடைய
கலி சகாப்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. 5, 10 என கொஞ்ச வருஷ
வித்தியாசம் வருகிறது. சதுர்யுகக் கணக்குப்படி கலி பிறந்தது 5000
வருஷத்திற்கு மேல் ஆகிறது. அது முடிய இன்னமும் ஆயிரக்கணக்கான வருடங்கள்
இருக்கிறது. ஆக உலகம் 2012ல் அழிந்து விடும் என்றுகவலையே பட வேண்டாம்.
அதெல்லாம் கட்டுக்கதை. ஆனால்…”
“ சொல்லுங்க”
“உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றிலிருந்து கொஞ்சமாக அழிந்து கொண்டுதான்
வருகிறது. அழிவு என்றால் நான் முழுமையாக அழிந்து போவதைச் சொல்லவில்லை.
ஒன்று மற்றொன்றாக மாறுவதைச் சொல்கிறேன். நம்முடைய தமிழகத்திலேயே கூட சில
பகுதிகள் கடலுக்குள் இருந்திருக்கின்றன. இப்போது அவை நிலப்பகுதிகளாக
உள்ளன. அது போல பூம்புகார், குமரி என பல பகுதிகள் கடலுக்குள் போய்
விட்டன. நான் நிறைய இது பற்றி, பேசி இருக்கிறேன். எழுதி இருக்கிறேன்”
– இப்படியாக மாயன் காலண்டர் படி டிசம்பரில் உலகம் அழியாது என
தெளிவுபடுத்தினார் பத்மபூஷன் டாக்டர் (அமரர்) வை. கணபதி ஸ்தபதி அவர்கள்.
[அதன்பின் அடிக்கடி என்னோடு பேசுவார். மின்னஞ்சல்களும் வரும். தான் நாடி
ஜோதிடம் பார்த்த அனுபவங்களையும் கூட என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்
கள்ளமில்லா அந்த மாமேதை. அவர், கடந்த 06-09-2011 அன்று மறைந்தார்.
அவருடைய நினைவுகளும், அவர் சொன்ன தகவல்களும் இன்னமும் நீங்காது என்
நெஞ்சில் உள்ளன]
கட்டுரைக்கு வருவோம்.
மாயன்கள் பற்றி நன்கு ஆராய்ந்த சிற்ப குரு கணபதி ஸ்தபதி டிசம்பர் 21,
2012 அன்று உலகம் நிச்சயம் அழியாது என்று சொல்லி விட்டார். சரி, இனி
மாயன் வழி வந்த மாயன் இன மக்கள் என்ன சொல்கிறார்கள், அன்று ஏதாவது
நடக்கப் போகிறதா, நடக்கும் என்றால் என்ன நடக்கும் என்பதை இனிமேல்
பார்ப்போமா?
(தொடரும்)
அரவிந்த்
மேலும் விவரங்களுக்கு:
கணபதி ஸ்தபதி செய்த மாயன் ஆய்வுகளைப் பற்றி
http://www.vastu-design.com/ht-article.php இங்கே படிக்கலாம்.
ஸ்தபதி மச்சு பிச்சுவில் செய்தது என்ன?
http://www.tamilbrahmins.com/web-resources/2097-what-did-sri-ganapati-stapathi-find-machu-pichu-peru.html
மாயர்கள் தமிழர்களா? : http://viewzone2.com/ancientturksx.html
மாயன்ஸ் VS இந்தியன்ஸ் :
http://www.rethinkhinduism.com/the-indo-mayan-connection-indias-south-american-relatives-part-1/
http://frontiers-of-anthropology.blogspot.in/2011/09/lacandon-mayas-and-malay-mayas.html
மாயன் நாகரிகம், இந்து நாகரிகமே : http://www.portraitofindia.com/article4.htm
மாயன் பிரமிடுக்ள் :
http://kimbriggs.com/photos/mexico/chichen-itza-mayan-pyramid-ruins/
http://www.hiddenhistoryhumanity.com/8A%20Shamballa%20Mayans%20Brazil%206th%20RR%20I.htm
http://sun-nation.org/sun-maya-hunab-ku.html
http://www.guatemalaweb.com/witz.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக