வியாழன், 13 ஏப்ரல், 2017

அசோகன் புத்தமத கொலை பௌத்தம் அப்பாவி மக்கள் கொலை மதம் புத்தர்

aathi tamil aathi1956@gmail.com

3/9/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனத்தின்
படி, அசோகன் பௌத்த நெறியைப் பின்பற்றிய பின்புகூடக் கொல்லாமையைப்
பின்பற்றவில்லை எனக் குறிப்பிடுகிறது.
பிற்காலத்தில் சிறிது சிறிதாக பௌத்த நெறியில் நாட்டம் கொண்ட அசோகன்,
புந்தரவர்தனம ்(Pundravardhan
a) எனும் இடத்தில் பௌத்த நெறியைச் சேராத ஒருவர், புத்தரை நிர்கரந்தா
ஜனதிபுத்திரர் எனும் மகாவீரரின் காலில் விழுந்து வணங்குவதைப் போன்றதொரு
ஓவியத்தை வரைந்ததைத் தொடர்ந்து, பௌத்தர் ஒருவர் அசோகரிடம் முறையிட்டார்.
இதனால் அசோகர், அவ்வோவியத்தை வரைந்தவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்து,
பின்பு புந்தரவர்தனத்தில் இருந்த 18,000 ஆசீவகர்களைக் கொன்றான்.
சிறிது காலம் கழித்துப் படலிபுத்திரத்தில் (Pataliputra) மற்றொரு
நிர்கரந்தாவைப் பின்பற்றுபவர், இதேப்போன்றதொரு ஓவியம் வரைந்ததால், அசோகர்
அவரையும் அவரது முழு குடும்பத்தையும் சேர்த்து வீட்டோடு எரித்தார். இதைத்
தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு
ஒரு தினாரா (வெள்ளி நாணயம்) பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.
ஆகப் பௌத்தத்தைப் பின்பற்றுவதற்கு
முன் போரில் மட்டும் கொலை செய்தவன், பௌத்தத்தைப் பின்பற்றியபின் மதவெறி
கொண்டு அப்பாவி மக்களையும் கொலை செய்தான் என்பது உறுதியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக