ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

களப்பிரர் சாதனைகள் தமிழ் நூல்கள் அக்காலத்தில்

aathi tamil aathi1956@gmail.com

16/10/15
பெறுநர்: எனக்கு
உங்கள் தோழன் சவரிமுத்து
ஆரியப் பார்ப்பணர்களுக்கு மிக மிக உன்னதம் கொடுத்த ஆட்சி பிற்காலச்
சோழர்கள் ஆட்சி! அதுவரை ஆலய வழிபாடு தமிழ் வழிபாடு! வடக்கே போய்
வடநாட்டைக் காப்பி அடித்து வடமொழியைப் பார்ப்பணர்களை ஆலயத்தில் உள்ளே
நுழைத்தது. நாய்க்க மன்னர்கள் மராட்டியத் தீவிரமாக்கினர். குழியும்
வெட்டி குப்புறவும் தள்ளிய கதை! களப்பிரர்கள் காலம் ,கடைச் சங்கக்
காலங்களில் இந்தநிலை இல்லை. ஆனாலும் வேள்வி செய்ய மட்டும் வட ஆரியப்
பார்ப்பணர்கள் அழைக்கப்பட்டனர்.அந்த நல்ல செயலை முதன் முதல் செய்தவன்
பாண்டியன் முதுகுடுமி பெருவழுதி ஆவான். அந்த வேள்விக்காகப்
பார்ப்பணர்களுக்கு ஊர்கள் தானம் தரப்பட்டன. அதை ஒழித்து பொதுவாக்கியவர்
கோக்கலி கொங்கணவர்மன். ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடு.
10 மணிகள் · பொது
மேலும்
கேளிர்ப் பிரியலன்மற்றும் வேறு 11 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
உங்கள் தோழன் சவரிமுத்து
வேள்விக்குடி செப்பேடுவில் பிட்டன் கொற்றன் என்னும் பார்ப்பான்
வேள்விக்காகப் பாண்டியன் முதுகுடுமி தந்த ஊர்தானத்தைக் களப்பிரர்
கலியரசன் பிடுங்கி நிலங்களைப் பொதுவில் கொடுத்தான் என்று பாண்டியன்
கடுங்கோன் களப்பிரர்களை மதுரையில் விரட்டிய பின்னர் ,பாண்டியன் அவணி
சூளாமணி வந்து கெஞ்சி சொல்லி மீண்டும் பெறுகிறான். ஊர்தான் என்பது ஒரு
குறிப்பிட்ட எல்லாவளங்களும் உள்ள மங்கலமாய் ஊரை வேள்வி செய்த
பார்ப்பணர்களுக்குத் தானமாகத் தருவது. இந்த ஊர்கள் சதூர்வேதி மங்கலம்
எனப்படும். அவ்வூரில் பார்ப்பணர்களுக்கு யாவரும் அடிமைகள். ஆண்டான்
அடிமை!ப் போக்கு. இதைக் களப்பிரர் ஒழித்தனர்.மீண்டும்
பல்லவ.சோழர்,பாண்டியராட்சியில் வந்தது.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
உங்கள் தோழன் சவரிமுத்து
அதனால் களப்பிரர்களை வரலாற்றில் இருந்து நீக்கி களப்பிரர்காலம் இருண்டக்
காலம் என்று கி.பி.225 முதல் கி.பி575 முடிய உள்ள
சான்றுகள்,ஆதாரங்கள்,சுவடுகள், கல்வெட்டுகள் அழித்து ஒழித்து விட்டு
வரலாறு இல்லாத இருண்டக் காலம் மாக்கினார்கள். இந்த காலத்தில்தான்
திருக்குறள் தவிர மீதி17பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின.
கலித்தொகைத் தோன்றியது. சிலப்பதிகாரம்,ம
ணிமேகலைத் தவிர சீவகச் சிந்தாமணி, வளையாபதி,குண்டல
கேசி தோன்றின.இதில் வளையாபதி,குண்டலகேசி அழிக்கப்பட்டன.கல்லாடம் என்ற
இலக்கணநூல் எழுதப்பட்டன.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
உங்கள் தோழன் சவரிமுத்து
அப்போது கட்டப்பட்ட சமணக் கோயில் புத்தர்கோயில்கள் ஒன்று
இடிக்கப்பட்டன.அல்லது மூலத்தானம் அருகரோ,புத்தரோ இருந்தால் அந்த
உருவங்கள் களையப் பட்டு ஈசுவரர் உருவங்கள் புகுத்தப் பட்டன. பெயரோ
தான்தோன்றிய ஈசுவரன் என்றழைக்கப்பட்டார்கள். பற்பல கோயில்களில்
மூலவிக்கிரம் நகர்த்தப்பட்ட சுவடுகள் இருக்கக் காணலாம். காரணம் புத்த
சமணம் நீக்கவே செய்த செயல். இன்றும் களப்பிரர் என்று பார்ப்பணர்களிடம்
சொன்னால் துட்டர்கள் என்பர். தமிழர்களும் ஆமாம் போடுவர். களப்பிரர்
குறிஞ்சி,முல்லை உள்ள எருமையூரானின் மைசூர்,கோலார்,பெங்களூர் ,நன்னனின்
ஊரான பாலக்காடு பகுதியில் இருந்து வந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக