ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கிளித்தட்டு ஈழத்திலும் கிளியான்தட்டு அறிவியல் விளையாட்டு இயற்கை

aathi tamil aathi1956@gmail.com

28/9/15
பெறுநர்: எனக்கு
ஆனந்தன் ராஜகோபாலன் மங்காவிளை
கிழியான்தட்டும்,தமிழர் பண்பாடும்,விவசாயமும்:
==============================
===============
கிளியான்தட்டு(கிளித்தட்டு).......... பண்டைய தமிழர்களின் முக்கிய
விளையாட்டுகளில் கிழியான்தட்டும் ஒன்று
கிளியான்தட்டு விவசாயத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும்
விளையாட்டாகும். நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளை பொறுக்க
வரும் கிளிகளை,காவக்காரன் வரப்புகளில் ஓடிவந்து கலைத்து வயலை காப்பதே
இந்த விளையாட்டு சுட்டிக்காட்டுக
ிறது.காப்பவர்-காவக்காரன், புகுவோர் - கிளிகளாகவும்,தட
்டுகள்- வயல் நிலங்களாகவும், கோடுகள்-வரப்புகளாகவும் பாவனை செய்யபடுகிறது.
இந்த விளையாட்டிற்கு ஒரு அணிக்கு குறைந்தபட்சம் ஆறுபேர் தேவை. அணியின்
தலைவர் கிளியாவார்.
இந்த விளையாட்டு சுறுசுறுப்பு,கூட்டுமுயற்சி, உடல்வலிமை,மனவலிமை
ஆகியவற்றிற்கு வித்திடுகிறது.ச
ிறுவர் முதல்முதியவர்கள் வரை வெளியில் இருந்து ஆரவாரம் செய்து ரசித்து
தங்கள் யுகங்களை வீரர்கள் மீது திணிக்க முயற்சி செய்வார்கள்.கபடிக்கு
அடுத்த எனக்கு மிகவும் பிடித்து விளையாடி மகிழ்ந்த விளையாட்டு
கிழியான்தட்டுதா
ன்.
இந்த புகைப்படம் நான் பிறந்த மண்ணில்(எனது கிராமத்தில்) எடுக்கப்பட்டது
என்பது கூடுதல் தகவல்............அன்புடன் பாலைவன தேசத்திலிருந்து
மங்காவிளை ரா.ஆனந்தன்
Suhi Kavi
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் கழகங்களூக்கிடையில் கிளித்தட்டு வி ளையாட்டு
சுற்றுப்போட்டிய
ாக நடத்தப்பட்டு வெற்றிக்கேடயம் வழங்கப்படுகிறது யாழில் கிளித்தட்டு
விளையாட்டு நீண்டகாலமாக விளையாடப்படுகிற
து
அன்பு வந்தியத்தேவன்
நானும் சிறுவயதில் விளையாடியது. எங்கள் ஊரில் இந்த விளையாட்டுக்கு பெயர் கொந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக