ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கல்வி பற்றி சங்ககால நூல்கள் வலியுறுத்தல் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

28/9/15
பெறுநர்: எனக்கு
Palani S N
கல்வியும் தமிழர்களும் தமிழ்நாடும்..
பெரியாருக்கு பின்பு தான் தமிழர்களுக்கு கல்வியே கிடைத்தது. இல்லையெனில்
இவர்கள் வெறும் தற்குறிகளாகத்தா
ன் இருந்திருப்பார்கள் என ஒரு பேச்சினை முகநூலில் கேட்க நேர்ந்தது.
அவர்களின் கவனத்திற்கு.
1. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட புறநானூற்றுப்
பாடல். எழுதியவனே ஒரு பாண்டிய மன்னன்.
” உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே...”
2. கல்வியின் பெருமையை உலகில் யாரும் சொல்லாத அளவிற்கு வற்புறுத்தி
சொல்லி, அதற்கென நான்கு அதிகாரஙகளை வகுத்த திருவள்ளுவர். கல்வி, கேள்வி,
கல்லாமை, அறிவுடைமை.
” கற்க கசடற...”
3. அதனைத் தொடர்ந்து நாலடியார். தொடர்ந்து வந்த தமிழின் உரையாசிர்களின்
கல்வி புலமை.
4. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஔவையார், தமது கொன்றைவேந்தனில்,
”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி”
ஆத்திச்சூடியில், ”இளமையில் கல்”
5. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட உலகநீதியில், உலகநாதனார்,
”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்...”
6. 700 ஆண்டுகளுக்கு முன்பு அதிவீரராம பாண்டியனார் எழுதிய நறுந்தொகையில்,
” கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே...” என்றும்
”எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்றும் கூறிச்செல்கிறார்.
7. பிற்கால ஔவையார் தமது மூதுரையில்,
” கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்கிறார்.
8. நீதிவெண்பாவில், ”கற்றோர்க்கு மூன்று விழி” என அழகான உவமையோடு
கல்வியின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறது.
9. கடந்த நூற்றாண்டில் தோன்றிய பல தனிப்பாடல்களிலும் கல்வியின்
பெருமையும் கல்லாததின் இழிவும் இடித்துரைக்கப்ப
டுகின்றன.
மேலும், தமிழில் தோன்றிய அத்தனை காப்பியங்களிலும் கல்வியின் பெருமையை
சொல்லாத காப்பியங்கள் இல்லை.
10. சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த புதுக்கவிதை ஒன்றிலும் மிக அழகாக
கல்வியின் சிறப்பு வியந்தோதப்படுகிறது.
” இயமையில் கல்... நீ கற்கும் வரைதான் உந்தன் இளமை”
ஆக இந்த அளவிற்கு உலகின் எந்த இனமும், கல்வியின் பெருமையைக்
கூறிச்சென்றதாக வரலாறு இல்லை. இது தமிழுக்கும் , தமிழ் இனத்துக்குமே உள்ள
தனிப்பெரும் பெருமையாகும்.
இப்படி தமிழும் தமிழர்களும் தோன்றிய நாளிலிருந்தே கல்வியின் சிறப்பு
பாரட்டப்பட்டே வந்திருக்கிறது. இதில் இவர் இல்லையெனில் தமிழர்களுக்கு
கல்வியே இல்லை என்பது... தமிழர்களை இதைவிட யாரும் இழித்துரைக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக