ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நீதிக்கட்சி புறக்கணித்த தமிழர் நடேசன் முதலியார் ஜஸ்டிஸ் திராவிட

aathi tamil aathi1956@gmail.com

24/12/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
நீதிக்கட்சியில் புறக்கணிக்கப்பட்ட தமிழர் சி. நடேசனார்
பார்ப்பனரல்லாதோர் அரசியல், கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட
ுவதை எதிர்த்து வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டு உருவான இயக்கமே
நீதிக்கட்சி. சென்னை மாகாணத்தை ஆறு முறை நீதிக்கட்சி ஆண்ட போதிலும் மொத்த
மக்கள் தொகையில் 52.42% உள்ள தமிழர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்
வழங்க முன் வரவில்லை.
இதில் நீதிக்கட்சி உருவாக்கத்திற்க
ு ஆணிவேராக விளங்கிய தமிழராகிய சி. நடேச முதலியார் என்பவர்
புறக்கணிக்கப்பட்டார். இந்த உண்மையை திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல,
பெரியாரும் கூட சொல்ல மறுத்தார்.
பெரியார் கூறுகிறார்: "ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது யார்? சர்.பி.டி.
செட்டியார்- தெலுங்கர். டி.எம்.நாயர்- மலையாளி. நான்- கன்னடக்காரன்.
தமிழன் யார் இதைச் செய்தான்? (கலை மகள் இதழ் பேட்டி பிப்.1973)
பெரியாருக்கு ஏனோ நீதிக்கட்சியின் மூலவராகத் திகழ்ந்த தமிழராகிய நடேசனார்
பெயர் நினைவுக்கு வரவில்லை.
1912இல் பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களின் நலனுக்காக "சென்னை ஜக்கிய
சங்கம்" உருவாக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய சி. நடேச
முதலியார் இச்சங்கத்தின் பெயரை சென்னை "திராவிடச் சங்கம்" என்று பெயர்
மாற்றம் செய்தார்.
நடேச முதலியார் பிராமணரல்லாத மாணவர்கள் தங்குவதற்காக திருவல்லிக்கேணியில்
திராவிடர் விடுதியையும் நடத்தி வந்தார். இந்நிலையில் பிராமணரல்லாத
பிரமுகர்களை இணைத்து அரசியல் இயக்கம் காண ஆசைப்பட்டார். அப்போது சென்னை
மாநகராட்சி உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் பிட்டி தியாகராயச் செட்டி.
மற்றொருவர் தறவாடு மாதவன் நாயர். முன்னவர் ஆந்திரத் தெலுங்கர். பின்னவர்
மலையாளி. இருவரும் எலியும், பூனையுமாக மாமன்ற கூட்டத்தில் மோதிக்
கொள்வார்கள்.
இவர்கள் அன்றைக்கு முக்கியப் புள்ளியாக விளங்கியதால் இருவரையும் இணைக்க
நடேச முதலியார் விரும்பினார். அதன்படி இருவரையும் சந்தித்து பிராமணர்
அல்லாதாருக்கான அரசியல் தேவையை வலியுறுத்தினார். நடேச முதலியாரின்
முயற்சி வெற்றி பெற்றது. அது 1916இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற
பெயரில் அரசியல் இயக்கமாக பரிணாமம் பெற்றது.
1920இல் சென்னை மாகாணத் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி போட்டியிட்டு
வெற்றி பெற்றது. அப்போது நீதிக்கட்சிக்கு தலைவராக இருந்த பிட்டி
தியாகராயச் செட்டி வெற்றி பெற்றார். நடேச முதலியார் தேர்தலில்
போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடேச முதலியாரின் தோல்விக்கு பிட்டி
தியாகராயச் செட்டி தான் காரணம் என்று அப்போது கடுமையாக குற்றச்சாட்டு
எழுந்தது.
அந்த தேர்தலில் 'ஹோம் ரூல்' இயக்கம் சார்பில் வெற்றி பெற்ற ராமசாமி ஐயர்
என்பவர் பதவி விலகிய காரணத்தால் மறுதேர்தல் நடைபெற்றது. அதில் நடேச
முதலியார் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் சட்ட மன்றத்தில் முதலமைச்சராக பதவியேற்க தியாகராய செட்டிக்கு
ஆளுநர் லார்டு வெலிங்டன் அழைப்பு விடுத்தார்.
அப்போது தியாகராயச் செட்டி பதவியேற்க முன்வர வில்லை. அவருக்கு இணையான
தலைவராக விளங்கிய தறவாடு மாதவன் நாயர் (டி.எம்.நாயர்) அன்றைக்கு உயிரோடு
இல்லை. அடுத்த கட்டத் தலைவராக விளங்கிய நடேச முதலியாரை முதலமைச்சராக
அறிவிப்பார் என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில் தியாகராயச்
செட்டிக்கு ஆந்திரத் தெலுங்கு பாசம் விளையாட ஆரம்பித்தது.
கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியை முதல்வராக அறிவித்தார். அடுத்த அமைச்சர்
பதவியும் தமிழனுக்கு வாய்க்க வில்லை. இரண்டாவது அமைச்சராக பனகல் அரசர்
என்று அழைக்கப்படும் பானகண்டி ராமராய நிங்கரும் , மூன்றாவது அமைச்சராக
ஸர் கே.வி.ரெட்டியும் பதவி ஏற்றனர்.
பிறகு பதவி ஏற்ற ஆறு மாதத்தில் உடல் நலமின்மை காரணமாக முதல்வர்
சுப்புராயலு ரெட்டி பதவி விலகினார். பனகல் அரசர் முதல்வராக பதவியேற்றார்.
அவர் இருந்த இடத்தில் தெலுங்கரான அனிப்பூ பரசுராம பாத்ரோ என்பவர்
அமைச்சராக்கப் பட்டார். இரண்டாவது முறையும் நடேச முதலியாருக்கு பட்டை
நாமம் போடப்பட்டதைக் கண்டு நீதிக்கட்சியில் உள்ள தமிழர்கள்
கொந்தளித்தனர்.
1923ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடேச முதலியார் தமிழ்ப் பிரமுகர்கள்
மாநாட்டைக் கூட்டினார். மாநாட்டில் இராமநாத புரம் அரசர் தலைமை வகித்தார்.
பெத்தாச்சி செட்டியார் வரவேற்புக் குழு தலைராகப் பொறுப்பு வகித்தார்.
மாநாட்டில் பிட்டி தியாகராயச் செட்டியும், பிற அமைச்சர்களும்
பங்கேற்றனர். அந்த மாநாட்டில் அமைச்சரவையில் தமிழர்களுக்கு
பிரதிநிதித்துவம் வழங்காதது குறித்து காரசாரமாக பேசப்பட்டது. அடுத்து
வரும் தேர்தலில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கட்டாயம் வழங்க
வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடேச முதலியாரின் கோரிக்கையை செவி சாய்ப்பதைப் போல நாடகமாடிய தியாகராயச்
செட்டி அடுத்து வந்த தேர்தலில் நடேச முதலியாருக்கு ஆப்பு வைத்தார்.
1923ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடேச முதலியாருக்கு
போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாக நடேச முதலியாக
சுயேட்சையாக போட்டியிட்டார்.
அவரைத் தோற்கடிக்க தியாகராய செட்டி செய்த முயற்சிகள் பலனளிக்க வில்லை.
நடேச முதலியார் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையும் பனகல்
அரசரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக மீண்டும்
ஏ.பி.பாத்ரோ அமர்த்தப்பட்டார். மூன்றாவது அமைச்சராக தமிழராகிய சிவஞானம்
பிள்ளை என்பவர் முதன் முறையாக அமர்த்தப்பட்டார்.
இவருக்கும் நீதிக்கட்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இவர் ஓய்வு பெற்ற
அரசு அதிகாரி ஆவார். இவரிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு பனகல் அரசர் பதவி
கொடுத்து விட்டதாக மாஜி அமைச்சர் கே.வி.ரெட்டி குற்றம் சாட்டினார்.
எப்படியோ, நடேச முதலியார் முதல் அமைச்சராக முடியாவிட்டாலும் தமிழருக்கு
பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அவர் எழுப்பிய போர்க்குரல் வெற்றி
பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏறிய ஏணி மரமாக விளங்கிய தமிழராம் நடேச முதலியாரை எட்டி உதைத்து விட்டு
ஆந்திரத் தெலுங்கர்களுக்கு பாடுபட்ட தியாகராய செட்டியை தமிழர்களாகிய நாம்
எப்படி கொண்டாட முடியும்? — Gowtham P ,
கலை செல்வன் , Chembiyan Valavan ,
ராசசேகரன் மன்னை , பாரதிசெல்வன் இலரா, நான் இராவணன் பேரன் , Manju
Manjunathan, நாம் தமிழர் பாண்டியன்,
சிற்றரசன் நாம் தமிழர் , பா.அன்பழகன் நாம் தமிழர் தேனி , நாம் தமிழர்
தனசேகரன், நாம் தமிழர் செந்தில்குமார் , நாம்தமிழன் போடிமீனாட்சிபுரம் ,
நாம் தமிழர்கரூர் சேகர் , மு.ரவிந்திரன் நாம்தமிழர் , செ.அரவிந்தன் நாம்
தமிழர் , நாம் தமிழர் ராஜேஷ் குமார்,
தமிழ்த் தேசிய இளைஞர் இயக்கம் ,
தமிழ்த் தேசிய இளைஞர் இயக்கம் ,
தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை,
தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியம் ,
நாம் தமிழர் வெற்றிவேந்தன் மாதவரம் , மாணிக்கம் நாம் தமிழர் ,
நாம் தமிழர் அருள் , நாம் தமிழர் ரூபன் , நாம் தமிழர் மகேந்திரன் ,
Palanivel Vemban , Rama Krishnan , Pavian Kavi, தமிழ் அறிவன் தே,
Arunachalam Subramaniyan , Aathimoola Perumal Prakash,
இராசு இரத்தினம் , Thiyagalingam,
இரா.எதிர்வன் தியாகு , நாம் தமிழர் ஆசைதம்பி, நாம் தமிழர் வெல்வோம்,
நாம் தமிழர் சுந்தர் , நாம் தமிழர் சூசை விசயகுமார் , இரா.வினோத் நாம்
தமிழர் , நாம்தமிழர் செந்தில்குமார் , நாம் தமிழர் பாக்கியராஜ் மற்றும்
நாம் தமிழர் மாதவரம் இரா.ஏழுமலை உடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக