சனி, 22 ஏப்ரல், 2017

தோள்சீலை போராட்டம் அய்யா வைகுண்டர் கு முன்பே நாடார் விரிவான பதிவு பல தகவல்கள் கிறித்துவ பதிவு

aathi tamil aathi1956@gmail.com

19/8/15
பெறுநர்: எனக்கு
https://marshalnesamony.wordpress.com/2012/09/06/திருவிதாங்கூர்-தோள்-சீலை/

முத்துக்குட்டிக்கு முன்பே 1822ல் போராட்டம்

 கலகம் எது உண்மை? எது பொய்?
******************************
***************************************************
அண்மையில் (டிசம்பர் 2010) திருவாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும்
அ.கணேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் “தோள் சீலைக் கலகம்: தெரிந்த
பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூல் என்ற தோரணையில்
வெளிவந்ததைக் காண நேர்ந்தது. இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத
உண்மைகள்தான் என்ன? என்பதற்கு திட்டவட்டமாக விளக்கங்கள் எதுவும்
காணப்படவில்லை.
தவிரவும், ‘தோள்சீலைக் கலகம்’ என்ற மக்கள் போராட்டம் தென்
திருவிதாங்கூரில் 1859 முதல் 1922 வரை பல்வேறு நிலைகளில் நாடார்
சமுதாயத்திற்கும், நாயர் சமுதாயத்துக்கும் இடையில் நடந்தது ஆகும். இது
குறித்த ஆய்வு நூல்கள் பல பிரசுரமாகியிருந்தாலும், 1975-ல் திரு.ஆர்.என்.
இயேசுதாஸ் அவர்கள் ஆய்ந்து எழுதி பிரசுரித்த “A people’s Revolt in
Travancore” என்ற நூல்தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று
(Authoritative book). இந்நூல்லில் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளை
எதிர்த்தோ, தாங்கியோ ஒரு நூலை எழுதி மேலே குறிப்பிட்டிருக்கின்ற
ஆசிரியர்கள் வெளியிட்டிருந்தால் அதில் பொருள் இருந்திருக்கும். அதை
விட்டுவிட்டு இந்த போராட்டத்தின் நோக்கங்களை திருவிதாங்கூருக்கு வெளியில்
நடந்தவைகளுடன் ஒப்பிட்டு உண்மை, பொய் என்று விமர்சனம் செய்திருப்பது
பொருத்தமானதாக இல்லை.
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு
முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால்
மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட
நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப்
பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த
சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும். தீண்டாமை,
காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில்
திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக