புதன், 5 ஏப்ரல், 2017

மலேசியத் தமிழர் மலேயா மலேசியா புள்ளிவிபரம் தலைவர்கள்

aathi tamil aathi1956@gmail.com

27/10/15
பெறுநர்: எனக்கு
கேளிர்ப் பிரியலன்
# மலேசியத்_தமிழர்
.
*மொத்த மக்கள்தொகை:20 இலட்சம் மலேசிய மக்கள் தொகையில் 7%.
*குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்: பினாங்கு, பேராக்,
சிலாங்கூர், சிங்கப்பூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், ஜொகூர்,
மலாக்கா, கெடா
*மொழி(கள்) : தமிழ்,ஆங்கிலம், மலாய்.
.
*வரலாறு :
மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு
மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் ஆவர். 10ம் நூற்றாண்டில் சோழர்கள்
காலத்தில் இருந்தே மலாய் நாட்டோடு தமிழர்கள் வாணிபம் செய்து
வருகின்றனர்.இன்று மலேசியாவில் ஏறத்தாழ 20 இலட்சம் தமிழர்கள்
வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும்
தமிழர்களுக்கும் தொடர்புகள் இருந்தாலும், குடியேற்றவாத காலப்பகுதியில்
பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச்
செல்லப்பட்டவர்களின் குடிவழியினரே, பெரும்பாலான மலேசியத் தமிழர்கள்
ஆவார்கள். இங்கு வேலைக்கு வந்த ஈழத்தமிழர்களும் இவர்களில் கணிசமான
தொகையினர் ஆவர். மலேசியா நாட்டினை மிகவும் வளப்படுத்தியதில் பெரும் பங்கு
தமிழர்களேயே சாரும்.
*உரிமைப் போராட்டங்கள்:
தமிழர்கள் வளப்படுத்திய மலேசியா நாட்டில் தமிழர்களுக்கு என்று சரியான
உரிமை வழங்கப்பட்டதா என்றால் அது இல்லை.
'இண்ட்ராப் ' எனும் இயக்கத்தின்வழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதற்கு பொ.வேதமூர்த்தி, பொ.உதயகுமார் எனும் இரு மனித உரிமை வழக்கறிஞர்கள்
தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கின்றனர். தற்சமயம் அவ்வியக்கத்தின் தலைவர்
திரு.பொ.வேதமூர்த்தி லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.
*பிரபலமானவர்கள்:
1.வீ. தி. சம்பந்தன், மலேசியக் கூட்டுறவுத் தந்தை
2.பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பினாங்கு
3.ஜானகி ஆதி நாகப்பன், விடுதலை போராளி
4.ஆதி நாகப்பன், அரசியல்வாதி
5.ஜான் திவி, மலேசியாவின் முதல் மலேசியா.இந்தியா.காங்கிரஸ் தலைவர்
6.வி. சிவகுமார், மலேசிய அரசியல்வாதி
7.எம். மனோகரன், மலேசிய அரசியல்வாதி
8.அம்பிகா சீனிவாசன், மனித உரிமைப் போராட்டவாதி
9.வி. மாணிக்கவாசகம், அரசியல்வாதி
10.தம்புசாமி பிள்ளை, மலேசிய தமிழ் சமூக ஆர்வலர்.
11.சாமிவேலு, அரசியல்வாதி
12.எம். தம்பிராஜா, மலேசிய தமிழ் சமூக ஆர்வலர்.
13.மலேசியா வாசுதேவன், தமிழ்ப் பாடகர்
14.திலிப் வர்மன், தமிழ் இசையமைப்பாளர், பாடகர்
15.சீனிவாசகம் டி.ஆர், அரசியல்வாதி
16.சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா, அரசியல்வாதி
17.ஜெயக்குமார் தேவராஜ், மனித உரிமைப் போராட்டவாதி
18.ச. சுப்பிரமணியம், அரசியல்வாதி
19.எம். குலசேகரன், மலேசிய அரசியல்வாதி
20.எஸ்.கே. தேவமணி, மலேசிய அரசியல்வாதி
21.ஆர். ஆறுமுகம், விளையாட்டாளர்
22.சிபில் கார்த்திகேசு, மனித உரிமைப் போராட்டவாதி
24.ராஜாமணி, விளையாட்டாளர்
25.சந்திரமலர், காவல்துறை அதிகாரி
26.ராசம்மா பூபாலன், பெண்ணுரிமை போராட்டவாதி
27.டோனி பெர்னாண்டஸ், மலேசியத் தொழிலதிபர்
28.கா. கலியபெருமாள், மலேசியக் கல்வியாளர்
28.இரா.பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் ஆர்வலர்
29.ப.மு.அன்வர், கவிஞர், எழுத்தாளர்
30.பி. சி. சேகர், மலேசிய அறிவியலாளர்
31.இ. இ. சி. துரைசிங்கம், அரசியல்வாதி
32.மணி ஜெகதீசன், மலேசிய அறிவியலாளர்
33.ஜாக்லின் விக்டர், மலேசியப் பாடகி, நடிகை
34.டெபோரா பிரியா, மலேசிய அழகி 2011
35.தனுஜா ஆனந்தன்,மலேசிய அழகி 2009
36.சுஜாதா கிருஷ்ணன், மலேசிய தமிழ்த் திரைப்பட நடிகை
37.கே.ஆர். சோமசுந்தரம், மலேசியத் தொழிலதிபர்
38.சிம்மாதிரி, மலேசிய அரசியல்வாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக