ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

காணாமல் போன ஏரி சென்னை பழைய வரைபடம் தொலைந்த

aathi tamil aathi1956@gmail.com

8/12/15
பெறுநர்: எனக்கு
Dev Endran
1909 ல் சென்னை....
100 வருசத்தில் மிகப்பெரிய ஏரியை தொலைத்துவிட்டோம்.....
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், டி.நகர், சைதாபேட்டைன்னு
மத்திய சென்னையின் பெரும்பகுதியாய் இருந்த ஒரு ஏரியை காணோம்...
இதற்கு முன்னும், பின்னும் பல ஏரிகளை சென்னை தொலைத்திருக்கிறது...
அதற்கு ஒரே காரணம் வந்தாரை வாழ வைக்க... நகரை மாநகரமாக்க...
அவர்களுக்கும் இடம் கொடுக்க....
பலரும் சென்னையின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் விட்டுக்கொடுத்தனர்...
பலரும் ஒத்துழைத்தனர், பலரும் கண்டும்காணாமல் இருந்தனர்... பலரும்
வந்தமர்ந்தனர்....
ஒருசிலர் பலனடைந்தனர்....
இன்று அங்கங்களை இழந்த சென்னை...
மழை நீரை எங்கு சேமிப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது...
யாருக்ககாக அங்கத்தை அறுத்து இடம் கொடுத்ததோ அவர்களே பலித்து
கொண்டிருக்கிறார்கள்....
அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களும் இப்போது அலுத்துக்கொள்கி
றார்கள்...
ஏறத்தாழ எல்லா ஊரிலும் இதே நிலைதான்...
பாதுகாத்திருக்க வேண்டிய அரசும் பாதுகாக்கவில்லை...
கவனித்திருக்க வேண்டிய மக்களும் கவனிக்கவில்லை...
நகரமயமாக்கலின், அதன் கோரமுகத்தின் மூக்கின் நுனியை தான் நாம் பார்த்து
கொண்டிருக்கிறோம்...
தற்போதைய வெள்ள நிவாரணமும், இழப்பீடும், ஒருவேளை இன்னும் தீவிரமாகும்
பட்சத்தில் வரும் அந்நிய உதவிகளும் அந்த கோரமுகத்தை நாம் உணர்ந்துவிடாமல்
இருக்க நமக்கு கொடுக்கப்படும் டானிக் மட்டும் தான்...
நகரமயமாக்கலின் மூக்கின் நுனிக்கே இப்படின்னா... மூக்கு, முகம்னு
பார்த்தா.... பார்ப்போமான்னே தெரியல.....
அதனால....
"பெரியவங்கெல்லாம்" நல்லா சிந்திச்சு எதாவது செய்ங்க.... உண்மையான
தொலைநோக்கு பார்வையோடு...
இல்லைன்னா என்னைக்காவது ஒருநாள் மொத்தமா நம்மள செஞ்சிருவாங்க....
https://m.facebook.com/photo.php?fbid=1017087071687138&id=100001575649978&set=a.746112328784615.1073741830.100001575649978&refid=52&_ft_=top_level_post_id.1642104319390952%3Atl_objid.1642104319390952%3Athid.100007741983412&__tn__=E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக