|
14/12/15
| |||
மதுரை வீரன் கதையில் வரும் பாடல்களில் ஒரு பகுதி
மதுரை வீரன் வடக்கில் உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால்
மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம்
சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . சக்கிலியர்
இனத்தவர்கள் இவரை காட்டில் கண்டெடுத்து வளர்கின்றனர் . திருச்சி பகுதியை
ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர்
என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின்
வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம்
சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .[1] காவல் பொறுப்பை ஏற்ற
மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும்
அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா
நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும்
இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை
தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில்
கள்ளர் சமூகத்தினர் திருடுவதை தொழிலாகக் கொண்டு இருந்த நிலையில் அங்கு
குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை
அடக்கினார் .
இந்த நிகழ்ச்சி வரும்பொழுது பாட படும் ஒரு பாடல் :
சத்திரியர் குலம் பிறந்தவளை
சக்கிலியன் தொடலாமா ?
கம்பளம் குலத்திலே பிறந்தவளை
கருவாயன் மாதாரி தொடலாமா ?
பொம்மி இனி நம்ம சாதி இல்ல
அந்த பொட்டபுள்ள நம்ம சாதி இல்ல
பொங்கி எழுந்திடு நாயக்கரே
போய் தேடும் போய் தேடும் ....
கண்ணிலே அவர்கள் பட்டுவிட்டால்
கண்ட துண்டமாய் ஆக்கிவிடு
எலும்பை நொறுக்கிடு சக்கிலியை
எரித்துவிடு அந்த பொம்பளையை
மாறு கால் மாறுகை வாங்கிடனும்
அவன் மச்சு பருப்பை எடுத்திடனும்
என் மச்சான் திருமலை நாயனாரிடம்
சொல்லிடடா போய் மதுரையிலே ....
கள்ள பயங்க இருக்கும் இடம்
கரிசல் நிலமாம் மேலூர்
அங்க போய் இருப்பான் அந்த சக்கிலியன்
தேடுங்கடா போய் தேடுங்கடா ...
மதுரையில் திருமலை நாயக்கர் மதுரை வீரனை கண்டுபுடித்து மாறு கால் மாறு கை
வாங்கி கொன்ற உடன் , பொம்மியும் , இரண்டாம் மனைவி வெள்ளையம்மாள்
இறந்துவிட , இந்த நிகழ்ச்சியை கரூர் பொம்ம நாயக்கரிடம் காவலர்கள்
தெரிவிக்கும் பொழுது ...
ராஜாதி ராஜ குலத்தவரே
ராஜகம்பளம் இனத்தவரே
நாயக்கரே கேளுங்கையா
நல்ல விசியம் சொல்ல போறேன் ..
சாதி கட்டுபாட்டை மீறியதால்
சண்டாளாச்சி அந்த பொம்மியையும்
சக்கிலியன் அந்த பையனையும்
நல்லவரு மதுரை நாயக்கரு
கண்டதுண்டமா ஆகிட்டாரு ....
மாறு கால் மாறு கை வாங்கிட்டாரு
அவன் குடலை மாலையாய் போட்டுடாரு
சாதி பெருமையை காத்துட்டாறு
சந்ததி பெருமையை தூகிட்டாறு
முண்டம் பரலோகம் போயிடுச்சு
அவன் கால் கண்டமனூர் போயிடுச்சு
கையோ காசிக்கு போயிடுச்சு
பொம்மியை எரிச்சி போட்டாச்சு ...
சாதிக்கு வந்த தீட்டுதனை
சக்கம்மா பூஜையில் தீத்திடனும்
கோழி வெட்டி கும்பிடனும்
கோட்டையை கழுவி முளிகிடனும்
சக்கிலியை இனி தள்ளி வையுங்கடா
அவனின் காவல் பொறுப்பை நிறுத்துங்கடா
இனி எந்த சீமையிலும் கம்பள பெண்ணை
எவன் பார்ப்பான் கூறுங்கடா....
சாதி வெறியோடு நடத்தப்பட்ட இந்த மதுரை வீரனின் கதை பாடல்கள் இன்றும்
மதுரை சுற்றுவட்டாரங்க
ளில் பாட படுவதும் , சாதியை விட்டு வேறு சாதியில் திருமணம் செய்தால் கொலை
செய்துவிடுவோம் என்ற பயத்தில் இந்த இன பெண்கள் உள்ளனர் என்பதையும்
நாட்டார் பாடல்களில் அறிய முடிகிறது ..
நன்றி : நாட்டார் பாடல்கள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக