திங்கள், 3 ஏப்ரல், 2017

சிபி மன்னன் கிமு 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் சோழன் சோழர்

aathi tamil aathi1956@gmail.com

27/11/15
பெறுநர்: எனக்கு
Puli Vamsam - புலி வம்சம்
சிபி...
இவன் சங்கப் புலவர் பலராலும், பிற்காலத்தில் வந்த ஏனைய புலவராலும், சோழ
மரபின் முன்னோரைப்பற்றிக் குறிப்பிடப்படுகையிலெல்லாம் தவறாமல்
குறிப்பிடப்பட்டுள்ளான். அவ்வளவுஏன், இராமாயணம், மாபாரதம்
போன்றவற்றில்கூட இவனைப்பற்றிப் புகழப்பட்டுள்ளது. பருந்திற்கு அஞ்சித்
தன்னிடம் அடைக்கலம் புகுந்த புராவோன்றினைக் காக்கத் தன தொடைச்சதையையே
அரிந்து கொடுத்தவனாகப் புகழப்படுகிறான்.
"புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன் மருக"
"தன்னகம் புக்க குறுநடைப் புறாவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை
உரவோன் மருக"
புரவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் இடம்பரிந்த கொற்றவன்"
"துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச் சோணாடு"
"உடல்க லக்கற வரிந்து தசையிட்டும் ஒருவன் ஒருதுலைப் புறாவொ டொக்கநிறை
புக்க புகழும்"
"உலகறியக் காக்கும் சிருபுறவுக் காகக் களிகூர்ந்து நூக்கும் துளைபுக்க தூயோன்"
என்றெலாம் புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா,
பெரியபுராணம், விக்கிரம சோழனுலா போன்றவற்றிேலெல்லாம் இவன் வானளாவப்
புகழப்பட்டுள்ளான்.
இவன் காலம் இத்தகையது என்று தெரியாமற் போனாலும்,
காவிரி நாட்டைச் 'சிபிதேசம்' என்று தண்டி, தமது தசகுமார சரித்திரத்தில்
கூறியுள்ளமை கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். ஏனெனில், தண்டி, கி. மு.
ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவராவார்.
இதன்மூலம், அதற்கும் முன்னவனே இந்தச் சிபிச் சோழன் என்பது விளங்குகிறதல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக