ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஒரிசா தமிழர் தொடர்பு கலிங்கம் பாலு ஒடியா 500 வேர்ச்சொல் பள்ளர் பாணர்

aathi tamil aathi1956@gmail.com

17/10/15
பெறுநர்: எனக்கு
Orissa Balasubramani
கலிங்க – தமிழ் உறவுகள்
தமிழ் மொழி மற்றும் பண்பாடுகளை உள்ளடக்கிய இன்றைய ஒரிசா மாநிலம் 1,55,705
சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 30 மாவட்டங்களையும் உடையது.
மகாநதி, ஸ்வரணரேகா, பைதரணி, பிராமணி, சாலிய, தெல், ருஷிகல்யா,
மகேந்திரத்தன்யா, வம்சதாரா போன்ற வற்றாத நதிகளையும்,
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தொடக்கமாக இருந்து நீலகிரி, கிருஷ்ணகிரி,
மகேந்திரகிரி போன்ற வரலாற்றுத் தொடர்புடைய மலைகளையும்
தண்டகாரண்யத்தில் தொடங்கிப் தண்டபுக்தி வரை மிகப்பெரிய காடுகளையும்
இந்தியாவின் மிகப் பெரிய உப்பு ஏரியான சில்காவையும்
தென்கிழக்கு ஆசியாவின் கடல்சார் தொடர்புகளைக் கொண்ட கலிங்கப்பட்டினம்,,
பஹுடமுகன், பாலூர், மாணிக்கப்பட்டினம், பணிகப்பட்டினம், சொல்கத்தாபட்டின
ம், தேவிப்பட்டினம், தமரா, பிப்பிலி, தாமிரளிப்பி போன்ற பல
துறைமுகங்களையும் கொண்டது.
தென்வட கலிங்கத்தின் சில பகுதிகள், தென்கோசலம் மற்றும் உத்கல தேசத்தின்
பகுதிகளில் வாழும் ஒரிய மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து 01.04.1936ஆம்
ஆண்டு ஆங்கிலேயரால் முதல் மொழி வாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது ஒரிசா
மாநிலமாகும்.
இன்றைய தமிழகப் பகுதிகளில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர
மாநிலத்தைத் தாண்டி இருந்தாலும் அந்த மாநிலத்தில் வேருன்றி உள்ள தமிழரின்
வரலாற்றுத் தொடர்புகள் அதற்கான தடயங்கள் ஆயப்பட வேண்டும்.
ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட அகண்ட இந்தியா முழுவதும் தமிழரின்
தமிழ்மொழியின் பண்பாட்டுக்கூறுகள் காணக்கிடக்கின்றன.
இன்றைய இந்தியாவின் வற்றாத இயற்கை வளங்களைக் கொண்ட ஒரிசா மாநிலம் மிகச்
சிறந்த வரலாற்றுச் சிறப்புகளைத் தமிழ் பண்பாட்டுக் கூறுகளுடன்
கொண்டுள்ளது.
அதிகப் பழங்குடிகளைக் கொண்டது ஒரிசா மாநிலம். திராவிட மொழிகளைப் பேசும்
பழங்குடிகள் கந்த, குய்குவி, பரோஜா பெங்கோ, கிசான் குடியா, மல்டோ கடபா,
கோல, ஓரான்குறுக் போன்றவை.
கடற்கரைப் பகுதிகளில் நுலியா மற்றும் கயல் வர்த்தகர் என்ற தமிழ்மொழிக்
கூறுகள் அடங்கிய மக்களும் வாழ்கின்றார்கள்.
ஜைனமதம், புத்தமதம் ஆகிய இரண்டும் கலிங்கம் என்ற ஒரிசா வழியாகத்தான்
தமிழகத்தை வந்து அடைந்தன. தமிழகத்தில் இருந்து இமயம் சென்ற அரசர் மற்றும்
மக்கள் கலிங்கத் தேசத்தைக் கடந்துதான் சென்றார்கள்.
தென் இந்தியாவையும் வட இந்தியாவையும் இணைக்கும் பகுதியாகவும் கலிங்கம் விளங்கியது.
கலிங்கப் போருக்குப் பிறகு மனம் மாறிய அசோகனின் கல்வெட்டுகளில்
குறிக்கப்பட்ட தமிழக அரசர்கள் பற்றிய செய்திகள் அடங்கிய கல்வெட்டு கஞ்சம்
மாவட்டத்தில் பண்டிய என்ற ஊரில் இருக்கிறது. சேதி வம்சத்தில் பிறந்த
கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டுகளில் உள்ள தமிழகத் தொடர்புகளும் மாதர
வம்ச மன்னர்களுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் உள்ள தொடர்புகளும்
தெலுங்குச் சோழர்கள் அரசாண்ட சோன்பூர் தொடர்புகளும், கீழைக் கங்கர்களின்
கலிங்கத் தொடர்புகளும் நூற்றுவர்கன்னர்களின் ஒரிசா கலிங்கத் தொடர்புகளும்
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை சொல்லும் கலிங்கத் தொடர்புகளும் சேர சோழ
பாண்டிய பல்லவ வைதும்பா என்று பல மன்னர்களின் தொடர்பில் இருந்த கலிங்கத்
தொடர்புகளின் எச்சங்களும் தமிழகத்தில் இருந்தன.
இன்று வழக்கத்தில் இருக்கும் ஒரிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ச்
சொற்கள் இருக்கின்றன. ஒரியாவின் உழவுச் சமூகத்தில் தமிழ் இலக்கியத்தில்
பேசப்பட்ட மள்ளர் என்ற வேளாண்குடிகளும் மற்றும் பாணர் என்ற மருத
நிலக்குடிகளும் இன்றும் இருக்கின்றார்கள்.
இன்றைய ஒரிசா மாநிலத்தில் தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்களைப்பற்றி
விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கலிங்க உட்கல் தொடர்புகள்:
தமிழகத்தில் கலிங்கம், உட்கலம், கோசலம் போன்ற நிலப்பகுதிகளில் வாழ்ந்த
மக்களின் தொடர்பு தமிழகத்தில் ஒட்டர், போயர், சாலியர், சேதிராயர் போன்ற
மக்களின் மூலமாக வெளிப்படுகிறது.
கலிங்கராஜபுரம், மேல்கலிங்கம், கீழ்கலிங்கம், கலிங்கமலை, கலிங்கப்பட்டி,
குளித்தலை கலிங்கப்பட்டி, கரூர்க் கலிங்கப்பட்டி என்ற ஊர்களும் உக்கல்,
ஒட்டன் சத்திரம், ஒட்டபிடாரம், ஒட்டசேரி, ஒட்டறபட்டி போன்ற பல ஊர்களும்
ஒட்டரத் தேசத் தொடர்பைக்குறிக்கின்றன.
கலிங்கச் சம்பா, ஒட்டற சம்பா போன்ற நெல் வகைகள் கலிங்க மீன் .ஒரியா மீன்
போன்ற மீன் வகைகள் பல கோயில்களில் உள்ள கலிங்கச் சிற்ப வகைகள் நம் உறவைச்
சுட்டுவன.
ஆறாம் நூற்றாண்டில் இருந்தும் இன்று வரை தமிழக கலிங்க உறவுகள் உள்ளன.
கலிங்கத்துப் பரணிக்குப் பிறகும் சோடகங்கா மற்றும் கஜபதி மன்னர்களின்
மூலமாகத் தொடர்ந்தன.
மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட கலிங்க தமிழ் உறவுகளை அங்கு இருபது வருடம்
வாழ்ந்து தமிழ்ச் சங்கச் செயலர் வரை பதவி வகித்து,
பின் ஆர்வம் கொண்டு வரலாற்றைத் தேடிய என் போன்றவர்களால் ஒரிசா வரலாற்றுப்
பேரவை போன்ற பல்வேறு அமைப்புகளின் தொடர்பைக் கொண்டு முறையான தமிழ்த்
தொடர்புகளைத் தேடித் தர முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக