|
13/10/15
![]() | ![]() ![]() | ||
வடமொழிச் சாசனங்களைப் பொறுத்தவரை அயோத்தியில் கிடைத்த
கல்வெட்டுச்சாசனமும் கோசுண்டிசாசனமும் ஹாதிபாடா சாசனமும் மிகப்
பழமையானவையாகக் கருதப்பெறுகின்றன (Indian Epigraphy by Rechord Solomon,
Page 86). இந்தக் கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்று எழுத்தமைதியைக் கொண்டும் மற்றைய காரணிகளாலும்
நிர்ணயிக்கப்பெற்றிருக்கின்றன. அதன் பிறகு கிபி 1-2 நூற்றாண்டுகளைச்
சேர்ந்த கல்வெட்டுக்கள் மதுரா முதலிய இடங்களில் கிடைத்துள்ளன.
தென்னகத்தைப் பொறுத்தவரை நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்த கிபி மூன்றாம்
நூற்றாண்டு கல்வெட்டே வடமொழிக் கல்வெட்டுக்களில் பழமையானது. அதன்
பிறகமைந்த வடமொழிச்சாசனங்களில் பல்லவர்தம் சாசனங்களே சிறப்பான இடத்தை
வகிக்கின்றன. கி.பி நான்காம் நூற்றாண்டு துவங்கி சாசனங்களை வெளியிட்ட
பல்லவர்கள் முதலில் பாகதத்திலும் பிறகு வடமொழியிலும் பிறகு இருமொழிச்
சாசனங்களாகத் தமிழிலும் வடமொழியிலுமாக வெளியிட்டனர். ஒன்பதாம் நூற்றாண்டு
வரையிலான பல்லவர் சாசனங்கள் அவர்தம் வரலாற்றை அறிய நுழைவாயிலாக
அமைந்திருக்கின்றன. அவற்றுள் பல்லவர் செப்பேடு முப்பது என்னும் நூலில்
தி.நா.சுப்பிரமணியன் அவர்களால் வெளியிடப்பெற்ற முப்பது செப்பேடுகளுக்குப்
பிறகும் பல செப்பேடுகள் கண்டறியப்பெற்று வெளியிடப்பெற்றிருக்கின்றன.
அத்தகையதொரு செப்பேடு நிருபதுங்க வர்மனின் சிற்றூர் செப்பேடாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக