சனி, 22 ஏப்ரல், 2017

குடும்பப் பெயரா? பட்டமா? சாதியா? வர்ணமா? வர்ணாசிரமம் வண்ணம் ஆசீவகம் திரிபு மனுதர்மம் மனுநீதி தமிழர் மெய்யியல் ஆரியர் கராத்தே சாதி 2

aathi tamil aathi1956@gmail.com

16/8/15
பெறுநர்: எனக்கு
குடும்பப் பெயரா???பட்டமா??சாதியா??வர்ணமா???------பாகம் –2:
==============================
=========================
சாதி என்ற சொல் விலங்குகளை வகைப் படுத்தமட்டுமே தொல்காப்பியத்தில்
பயன்பட்டதை நாம் இதற்கு முந்தய பதிவில் பார்த்தோம்.
https://www.facebook.com/photo.php?fbid=4
51086458389881&set=a.323198804
511981.1073741835.
100004655914837&type=1
இன்றைய தமிழ் சமூதாயத்தில் மேலும் ஒரு குழப்பத்தை விளைவிப்பது “வர்ணம்”
என்ற சொல்லாகும்.
வர்ணம் என்றால் என்ன??
=======================
வர்ணம் என்ற சொல் சமஸ்கிருத மொழிச்சொல் என்று சொல்கிறார்கள்.வர்ணம் என்ற
சொல்லின் பொருள் “நிறம்” என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
இந்த வர்ணம் என்ற சொல்லே “வண்ணம்” என்ற தூய தமிழ் சொல்லில் இருந்து தான்
மருவியுள்ளது.
வண்ணம்-------->வர்ணம்.
தமிழில் வண்ணம் என்றால் நிறம் என்றுதான் பொருள் தரும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி
தமிழ் தான்!!!
பனிபடர்ந்த குளிர் பகுதிகளில் இருந்து வந்த ஆரியர்களால், இந்தியாவில்
பேசப்பட்ட தமிழ் மொழியை சரியாக உச்சரிக்க முடியவில்லை.
ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ போன்ற ஒலிகளை அவர்கள் பிரதானமாகப் பயன்படுத்தினர். இந்த
ஒலிகளை தூய தமிழ் வார்த்தைகளோடு சேர்த்து அவர்கள் பேசும்பொழுது, தமிழ்
மருவியது.
இது மட்டுமில்லாமல் “ ரகர “ ஒலியையும் அவர்கள் அளுத்தி உச்சரிப்பார்கள்
.இதனாலும் தமிழ் உருமாறியது.இன்றும் நார்டிக்( வட ஐரோப்பிய ) பகுதியைச்
சேர்ந்த மக்கள் பேசும் வார்த்தைகளில் “ரகரம்” பிரதானப் படுத்தப் படுவதை
நீங்கள் கவனிக்கலாம்.
தமிழில் பாகதை( பாகதம் )--------->மருவியபின் “ப்ராக்ரிதை”(ப்
ராக்ரிதம்)
தமிழில் பயணம் -----> மருவியபின் “ப்ரயாணம்”
தமிழில் பவளம்------> மருவியபின் “ப்ரவளம்”
தமிழில் மதங்கம் ------->மருவியபின் “ம்ருதங்கம்”
தமிழில் பதிட்டை --------> மருவியபின் “ ப்ரதிஷ்டை ”
தமிழில் ப என்ற எழத்து , மருவியபின் ப்ர என்று ஒலிக்கப்படும் ,
தமிழில் க என்ற எழத்து ,மருவியபின் க்ர என்று ஒலிக்கப்படும் ,
ப------>ப்ர,க ----->க்ர (தமிழ் எழுத்தின் ஒலியோடு தேவையில்லாமல்
கூடுதலாக “ரகரம்” சேர்க்கப்பட்ட பின் )
இப்படித் தமிழில் இருந்து மருவிய ஒரு மொழியை சமஸ்கிருதம் என்கின்றனர்!!!
உச்சரிப்பு மருவினாலும் இரு மொழிகளிலும் பொருள் ஒன்றுதான்.இப்படி
இருக்கையில் சமஸ்கிருதம் எவ்வாறு ஒரு தனித்துவமான மொழி ஆக முடியும்???
இவ்வாறு மருவிய சொற்களை வைத்துகொண்டு சமஸ்கிருதம் ஒரு தெய்வீக மொழி என்று
அப்பட்டமாகப் பொய் பேசி வருகின்றனர் வந்தேறி ஆரியர்கள்.
இப்படி நடந்த மோசடியில் மருவியதுதான் வண்ணம்------->வர்ணம்.
கேள்வி 1 : வண்ணம்/வர்ணம் என்றால் நிறம் என்று பொருள் தந்த சொல் எவ்வாறு
மனிதனை உயர்வு தாழ்வாக பிரித்துப் பார்க்க பயன்பட்டது??
கேள்வி 2 : யார் இது போன்ற மோசடியைச் செய்தது??
பதில்:நாடோடியாக வந்த கூட்டம் ,தங்களின் பிழைப்புக்காக நிலையான
நாகரீகத்தைக் கொண்ட தமிழர்களைப் பிரித்தாள நினைத்து, நமக்குள் இல்லாத
வேறுபாடுகளை செயற்கையாக உருவாக்கினர்.
ஓர்தாய் மக்களான தமிழர்களைப் பிரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம்
அல்ல.இதில் மிகப் பெரிய நுண் அரசியல் அடங்கியுள்ளது.இதை நமது எதிரிகள்
எப்படி செய்தார்கள் என்று நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
மனுதர்மம் கூறும் வர்ணப் படிநிலையில், பிராமணர்கள்,சத்
ரியர்கள்,வைசியர்கள்,மற்றும் சூத்திரர்கள் முதல் நான்கு வர்ணங்களாகவும்
,இதற்கு அப்பாற்பட்டவர்கள் பஞ்சமர் என்ற ஐந்தாம் வர்ணமாகவும்
வைக்கப்பட்டனர்.பஞ்சமர் என்றவர் மட்டும் தீண்டாமை என்னும் கொடுமையை
அனுபவித்தவர் ஆவர்.
பிராமணர்களும் அவர்களின் தவறான அறிவுரைகளைக் கேட்ட சத்ரிய/
வைசியர்களும் பஞ்சமரை கிராமங்களைவிட்டு தள்ளி வைத்தனர்.ஆட்சி ஆதிகாரம்
இம்மூவர் கைகளில் இருப்பதால் இவர்களுக்கு அஞ்சி வாழும் சூத்திரர்களும்
,பஞ்சமரை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.அப்படி சேர்த்துக்கொண்டால்
தங்களையும் பஞ்சமர் ஆக்கிவிடார்கள் என்ற பயத்தில் பஞ்சமரை மொத்தமாகப்
புறக்கணித்தனர்.
இந்த வர்ணப் படிநிலையில் பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தான்
பிராமணன்.அதாவது பிராமணன் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் ,சத்ரியனுக்கு
பிறந்தால் மட்டுமே நாடாள முடியும் என்றும் ,வைசியன் மற்றும் சூத்திரன்
குலத்தொழிலை மட்டும் செய்யவேண்டும் என்றும்,சட்டங்கள் வகுத்தான்
பிராமணன்.பஞ்சமனாய்ப் பிறந்தால் இந்த நான்கு வர்ணத்தாருக்கும் சேவகம்
செய்து பிழைக்க வேண்டும் என்றும் சட்டங்கள் வகுத்தான், பிராமணன் என்று
தன்னைக் அழைத்துக்கொண்டவன் .
இதுபோன்ற படிநிலைக்கு ஏன் வர்ணம் என்று பெயர் வந்தது??பிறப்பு
க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முறைக்கும் நிறம் என்று பொருள்
தரும் வர்ணம் என்ற வார்த்தைக்கும் என்ன தொடர்பு???
பிறப்பால் தானே உயர்ந்தவன்/
தாழ்ந்தவன் என்று பிரித்தனர்??? நிறத்தாலா பிரித்தனர்????
பிறப்புதான் ஒருவன் எந்தப் படிநிலையில் இருப்பான் என்று தீர்மானிகுமானால்
ஜன்மஆஸ்ரம முறை என்றுதானே பெயர் வந்திருக்க முடியும்??( சமஸ்கிருதத்தில்
ஜன்மம் என்றால் பிறப்பு என்று பொருள் ) ஏன் வர்ணஆஸ்ரம முறை என பெயர்
வந்தது???
அதாவது வர்ணப் படிநிலையில் உள்ள ஐந்து பிரிவினரும் வெவ்வேறு நிறங்களில்
இருந்தால் ,இம்முறைக்கு வர்ணப் படிநிலை என்று பெயர் வைத்திருப்பது
ஞாயமாகும் .ஆனால் நிலைமை அப்படியில்லையே!!!!! பிராமணன் குளிர் பகுதிகளில்
இருந்து வந்ததால் ,அவனது தோல் மட்டும் வெளிறிப்போய் இருக்கும்.இது
இயற்கை.அனால் இம்மண்ணின் மைந்தர்கள் அனைவரும் ஒரே நிறமாகத்தானே
இருந்தார்கள்!!!!
ஒரே நிறத்தில்( தோலின் வர்ணம் ) இருக்கும் மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு
வெவ்வேறு வர்ணப் படிநிலைகளில் வரமுடியும்????
வர்ணம் என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்த ஒருவன் கேட்கும் ஞாயமான கேள்விதானே இது ???
ஆக வர்ணப் படிநிலை என்பது உண்மையிலேயே வேறு ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டி
ருக்க வேண்டும். அதை இந்த வந்தேறிகள் திருடிவிட்டு ,தங்களுக்கு சாதகமாக
மாற்றி அமைத்திருக்க வேண்டும் .
அதாவது திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையை மாற்றி பிறப்புக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் கேவலமான ஒரு நடைமுறையை இந்த வந்தேறிகள்
ஏற்படுத்தியுள்ள
ார்கள் என்பதே நாம் உணரவேண்டிய உண்மை.
உண்மையான வர்ணப் படிநிலை என்றால் என்ன ?? என்ற கேள்விக்கான பதிலை அடுத்த
பதிவில் பார்க்கலாம்.....

sivakumar kone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக