சனி, 22 ஏப்ரல், 2017

குடும்பப் பெயரா? பட்டமா? சாதியா? வர்ணமா? வர்ணாசிரமம் வண்ணம் ஆசீவகம் திரிபு மனுதர்மம் மனுநீதி தமிழர் மெய்யியல் ஆரியர் கராத்தே சாதி 1

aathi tamil aathi1956@gmail.com

16/8/15
பெறுநர்: எனக்கு
குடும்பப் பெயரா??? பட்டமா?? சாதியா??
==============================
==========
வர்ணமா???------பாகம் –1:
https://m.facebook.com/photo.php?fbid=451086458389881&set=a.323198804511981.1073741835.100004655914837&type=1&refid=13&fbt_id=451086458389881&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_4ffe4014945d62ccff8ffaa30702f5d5
========================
குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் அந்நியரின் ஆட்சியில் அடிமையாய் இருந்த தமிழன்
இன்று தனது உண்மையான அடையாளத்தை இழந்து நிற்கிறான்.
தனது இனம் கடந்து வந்த பாதை , தான் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ,
தன் இனம் எதிரிகளால் அழிக்கப்படப் போகிறது என்ற உண்மை எதுவும் தெரியாமல்
அழிவின் விளிம்பில் அமர்ந்துகொண்டுள்ள இனமாக ,தந்து சொந்தத் தாய்
மண்ணிலேயே அடிமையாய் வாழ்ந்து வருகிறான் தமிழன்.உலக
நாகரீகங்களுக்கெல்லாம் தாயான குமரிக்கண்டம் இன்றைய தமிழகத்தையும்
,ஈழத்தையும் உள்ளடக்கியது. இங்கே இருந்து தான் ஆதி மனிதன்
தோன்றினான்.இங்க
ே இருந்துதான் உலகின் நான்கு திசைகளுக்கும் மானுட இனம் புலம் பெயர்ந்தது!!.
இல்லாத திராவிட தேசியமும் , செல்லாத இந்திய தேசியமும் , பொல்லாத உலக
வல்லாதிக்கமும் ஒன்றாய் இணைந்து , தமிழ் தேசியத்தைக் கொல்லாது விடாது.
இந்த மூன்று எதிரிகளையும் ஒரே நேரத்தில் தான் நாம் எதிர்க்க வேண்டுமே
தவிர , ஒருவனை எதிர்க்க இன்னொருவனோடு கூட்டு சேருவது என்பது
தற்கொலைக்குச் சமானம்.
2009 ஆம் ஆண்டு ஈழ இன அழிப்புக்குப் பின் ,தாய்த் தமிழகத்தில் இன்று
இளைஞர்கள் மத்தியில் ஒரு மாபெரும் தமிழ் தேசியத் தாகம் ஏற்ப்பட்டுள்ளது.
ஆறரைக் கோடி பச்சைத் தமிழர்கள் வாழும் இந்த மண்ணிலே ,தமிழ் தேசிய சிந்தனை
அனைவரையும் சென்றடையாமல் இருபதற்குத் தடைக்கற்களாக இருபதாகச்
சொல்லப்படுவதுள் முதன்மையானது சாதியப் பாகுபாடுகளே!!!.
வேறு சில தடைகளும் இருந்தாலும் இந்தப் பதிவு முழுமையாக சாதியப்
பாகுபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தும்.
சாதி என்றால் என்ன???
======================
சாதி என்பது தூய தமிழ் சொல்லே!!!! தொல்காப்பியத்தில் சாதி என்ற வார்த்தை
உள்ளது.அனால் தொல்காப்பியர் அந்த வார்த்தையை எதற்காக பயன்படுத்துகிறார்
என்று கூர்ந்து நோக்க வேண்டும்.
தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் , மரபியல் என்ற தலைப்பில் அவர்
எழுதியுள்ள வரிகள்..........
பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே.
நீர் வாழ் சாதியும் அது பெற்று உரிய .............44
எருமையும் மரையும் பெற்றமும் நாகே
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே.......................64
இரண்டு இடங்களில் அவர் சாதி என்ற வார்த்தையை தொல்காப்பியர் அவர்கள் பயன்
படுத்துகிறார்!!!
ஆக,விலங்குகளை வகைப்படுத்த மட்டுமே சாதி என்ற வார்த்தை பயன்படுகிறது.!!
அதாவது புலி,மான்,எருமை போன்றவை நிலம் வாழ் சாதிகளென்றும், மீன்,இறால்
போன்றவை நீர் வாழ் சாதிகளென்றும் நாம் வகைப்படுத்தலாம் !!.
ஆங்கிலத்தில் ஸ்பீசீஸ் (species) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்
தான் சாதி என்பது!!!!
இந்தச் சொல் மனிதனைப் பிரிக்க ஒரு போதும் பயன்படாது!!!!
நமது தமிழ் இலக்கியங்களைத் திருடிக்கொண்ட பிராமணர்கள் சாதியை ,ஜாதி என்று
உச்சரித்தனர்!!!
அது மட்டும் இல்லாமல் சாதி என்ற வார்த்தையின் பொருளையும் மாற்றிவிட்டனர்!!!!
சிறுபான்மையான பிராமணர்கள் தாங்களே இந்த மண்ணை ஆட்சி செய்யவேண்டும்
என்பதற்காக , இந்த மண்ணின் பூர்வ குடிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி
செய்தனர்!!!
அதன் விளைவாகவே இந்த மண்ணின் மைந்தர்களை ஜாதி ஜாதியாகப்
பிரித்தனர்!!!அதாவது விலங்குகளைப் போல் நம்மைப் பிரித்தனர்!!!!
வர்ணம் என்றால் என்ன??? பாகம்----2 :
==============================
======
தொடரும

உக்கிரக் கடுங்கோன் பாண்டியன்

sivakumar kone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக