திங்கள், 3 ஏப்ரல், 2017

திருப்பதி வழி தமிழ் சின்னம் மண்மீட்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

16/11/15
பெறுநர்: எனக்கு
Go Green Thirumala Thirupathi Temple இல்
தென்காசி சுப்பிரமணியன் மற்றும் 2 பேர் ஆகியோருடன்.
திருமலை-திருப்பதியில் சோழ-பாண்டிய இலச்சினைகளா?
தமிழரசர்களால் கட்டப்பட்டு முழுக்கவும் தமிழில் பதிகம், கல்வெட்டுக்கள்
பதிக்கப்பட்ட திருப்பதி திருமலை திருக்கோயிலுக்கு நடைபாதை வழியாக ஏழு
மலைகளின் வழியாக கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர்கள் செல்லும்போது வழியில்
"முக்குபாவி" என்றொரு மண்டபம் வருகிறது. அம்மண்டபத்தின் வலது பக்கத்தில்
புலி அடையாளச்சின்னமும் அதனை அடுத்து நேருக்குநேராக இருக்கும் இரு
மீன்கள் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையானது குறைந்தது
ஆயிரம் வருட பழமை கொண்டதாகத் தெரிகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை வரும்
மண்டபங்கள் கோயில்கள் அனைத்தும் பழமையானதாகவே தென்படுகின்றன.
பிற்காலங்களில் நாயக்கர்களால் பெருமளவில் உருமாற்றம் அடையப்பெற்றுள்ளன.
பக்தி எப்படியெல்லாம் மனித மனத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு
இக்கோயிலின் மீதும் அங்கிருக்கும் பெருமாள் மனித மனங்களில் ஏற்படுத்தும்
தாக்கமும் சிறந்த சான்று. நடைபாதையில் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்கள்
மலைகளைக் கடந்து நடந்தே சென்றோம். செல்லும் வழியில் பக்தி பரவசத்தில்
மக்கள் செல்கிறார்கள். ஆனால் நடுவில் வரும் இதுபோன்ற பழமையான மண்டபங்கள்
பற்றியோ அதிலிருக்கும் புடைப்புச் சிற்பங்கள் பற்றியோ அவர்கள்
அறிந்துகொள்ள விரும்பவில்லை. இக்கோயில் உண்மையில் எப்படி
அமைக்கப்பட்டிருக்கும்; முதலில் இக்கோயில் படைக்கப்பட்ட நோக்கம் இதுதானா?
சிலர் இக்கோயில் திருமால் என்ற முருகனுக்குரியத
ு என்கின்றனர். அவை பற்றிய அறிதலோ புரிதலோ யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லை.
இப்பழமை வாய்ந்த மலை மண்டபங்கள் பல்லவ, சோழ கட்டிடக்கலை கட்டுமானங்களோடு
உள்ளன. இவற்றில் இம்மண்டபத்தில் இடம்பெற்றுள்ள இவ்விலங்கு உடலில் வரிகள்
கொண்டு கீரப்பட்டுள்ளதைக் கவனிக்கும்போது சோழர்களின் "புலி"ச் சின்னம்
போல் உள்ளது. அதே போல் இதன் அருகிலுள்ள மீன் சின்னங்கள்
பாண்டியர்களுடையதாக இருக்குமா? பாண்டியர்களின் மீன் சின்னம் இரு கெண்டை
மீன்களுடன் அடுத்தடுத்து அருகே அமைக்கப்பட்டிருக்கும்.
காலத்திற்கேற்றாற்போல் செண்டும் இடம்பெற்றிருக்கும். ஆனால், இங்கிருப்பது
அவ்வாறில்லாமல் எதிரெதிர் திசையில் முகம் பார்த்து அமைக்கப்பட்டிருப்பது
புதிராக உள்ளது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக